இனிய நட்புகளுக்கு வணக்கம்
தமிழக தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது .ஆனால் இந்த மாற்றம் ,நிலையான மாற்றமாக இருக்குமா ,அல்லது வரும்காலத்தில் தமிழக மக்களின் நிலை மாறுமா ? (எலி கறி சாப்பிட்டது ஞாபகம் இருக்குல )என்றால் அடுத்த ஐந்து வருட ஆட்சி காலத்திற்கு பிறகு வரும் தேர்தலில் தெரியும் .மொத்தத்தில் ஒரு குடும்ப குடியாட்சி முறையை ஒழிப்பதற்கு உதவிய தேர்தல் கமிசனுக்கு நன்றி உரைப்போம் .அவர்கள் போய் இவர்கள் ,அவ்வளவே .இவர்களால் நம் வாழ்வில் எந்த ஒரு மாற்றம் ஏற்பட போவதில்லை ,நாம் அன்றாடம் உழைத்தால் நமக்கு உணவு
வெற்றியை நாம் கொஞ்சம் அளவுக்கதிகமாக கொடுத்து விட்டோமோ ?
சோப்பு :
இன்றைய தமிழக சூழலில் இதை விட மிக பெரிய சோப்பு என்னவாக இருக்க முடியும் ,ஜெயா ஊடகங்கள் மொத்தத்தையும் குத்தகை எடுத்தது போல் டாக்டர் இளைய தளபதி விஜய் அவர்களின் வேலாயுதம் படம் ட்ரைலர் ஓட்டபடுகிறது ,வேட்டைக்காரன் பார்ட் டூ போல் தெரிகிறது ,இந்த படத்தின் வசனகர்த்தா சுபா அவர்கள் ட்விட்டர் தளத்தில் டாக்டர் அவர்களின் வித்யாசமான காமெடி ,ஆக்சன், பாடல்கள் நிறைந்த படம் என்று கூறுகிறார் ,
சுபா அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக கூறிகொள்கிறேன்
நாங்கள் ஒன்றும் கேனையர்கள் அல்ல
சீப்பு :
தமிழக மக்கள் எனக்கு ஓய்வு அளித்து உள்ளார்கள் -முன்னாள் தமிழக முதல்வர்
கிராமத்தில் ஒரு சொல்வாடை உள்ளது " கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும் கெழவன தூக்கி மனைல வையி "
அநேகமாக இனி இவர் கடிதம் எழுதுவதற்க்கானா வாய்ப்பு இல்லை என்று எல்லோரும் கூறுகிறார்கள் ,ஆனால் நான் வாய்ப்பு இருக்கு என்று கருதுகிறேன் ,ஆமாம்
கடிதத்தின் தலைப்பு இவ்வாறாக இருக்கும்
மகளுக்கு அப்பா எழுதிய கடிதம்
போங்ரெஸ்
பரிதாப நிலையில் மண்டியிட்ட கட்சி
வீட்டிற்கு அனுப்ப பட்ட சிறுத்தைகள்
எல்லோரும் ஒன்றாக சேர்ந்து 'மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் 'என்கிறார்கள்
உங்க சங்காத்தப் .............. வேண்டானுதானே பொடனில அடிச்சு வீட்டுக்கு அனுப்ச்ருக்கோம் ,இதுல மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்ன்னு பேட்டி வேற ,போங்கையா போயி மருத்துவரோட தைலாபுரத்துல நல்ல தைலம் ஒன்னு தயாரிச்சு நல்லா தடவிக்கோங்க ,முக்கியமா அந்த தொங்க பாலுக்கு நல்லா தடவி விடுங்கையா ,ஒடம்பெல்லாம் ஊமை குத்தாம்
கண்ணாடி :
இனி நடக்க முடிகிற தூரத்துக்கு நடப்பது என்றும் ,நடக்க முடியாத தூரத்திற்கு வண்டியில் செல்ல வேண்டும் தீர்மானித்திருக்கிறேன்
பின்ன பெட்ரோல் என்ன வெல விக்கிது ,இன்றைய தினசரியில் பிற நாட்டினில் பெட்ரோல் என்ன என்ன விலையில் விற்க்கபடுகிறது என்று கூறி இருந்தார்கள் ,அதில் ஒன்றை மட்டும் கூறுகிறேன்
வென்னிசுல நாட்டில் வெறும் ரெண்டு ஓவாதானாம் .நம் நாட்டிலும் பெட்ரோல் லிட்டருக்கு 24 ரூபாய்க்கு விற்க முடியுமாம் ,ஆனால் உலகத்தில் இருக்கும் மொத்த வரிகளை கொண்டு தீட்ட பட்டு ,பின்னர் பெட்ரோல் விற்க படுகிறதாம் ,அதனால் தான் இந்த விலை ,இன்னும் வேறு கூடுமாம்
வென்னிசுலாவில் பிறந்திருக்கலாம் போல ,பெட்ரோல் விலையும் குறைவு , கூடவே ஏதாவுது வெளிநாட்டு குஜிலியை கரெக்ட் செய்து............. !@#$%$^&*()_)(*&^%$#@!................ (நான் ஒன்னும் தப்பாக எதுவும் டைப் அடிக்கவில்லையே ,குண்டக்க மண்டக்க எழுத்து விழுகுதே ம்ம்ம்ம்ம்ம்ம் )
கில்மானந்தாஸ் தத்துவம் 001 :
நண்பர்கள் இல்லாமல் சரக்கடிப்பது வானொலியில் நீல படம் பார்ப்பதற்கு ச்சே இது .........கேட்பதற்கு சமமானது
ரசிப்பதற்கு மட்டும் :
|
14 கருத்துகள்:
மாப்ள யாருக்கு குறின்னு மட்டும் சொல்லு நானும் சந்தோஷ படுவேனுள்ள ஹிஹி!
Photo super . . He . . He . . He. .
Soap . . Super . .
ஹே...ஹே... ரொம்ப நாள் கழிச்சு சோப்பு, சீப்பு, கண்ணாடி போட்டிருக்க. அருமை
ப்ளாக் சட்டை நல்லாயிருக்கு மணி....
ஒயின்ஷாப் உள்ளே போயிட்டா எல்லோருமே நண்பர்கள், பங்காளிகள் தானே...
வழக்கம் போல கலக்கல் மணி!
//நண்பர்கள் இல்லாமல் சரக்கடிப்பது வானொலியில் நீல படம் பார்ப்பதற்கு ச்சே இது .........கேட்பதற்கு சமமானது//
ச்சே! கொன்னுட்டீங்க மணி! என்னா தத்துவம்!! அனுபவ வரிகள்!!! :-)
அடிக்கடி ப்ளாக் டிசைனை மாத்தரீங்களே? நீங்க பா.ம.க.வா?
நல்லாருக்கு மணி
தைலாபுறத்து தைலம் வடிவேலுக்கும் தேவை படும்
ஓட்டு போட்டுட்டு அப்புறம் என்ன டகால்டிக்கு அறிவுறை வேண்டி கிடக்கு, இதான வேணாங்கறது, இனிமேதான் இருக்கு வேலாயுதம், சூலாயுதமெல்லாம்
”அடுத்த ஐந்து வருட ஆட்சி காலத்திற்கு பிறகு வரும் தேர்தலில் தெரியும் ”
அவ்வளவு வெயிட் செய்ய வேண்டாம்.. இன்னும் இரண்டு ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வருகிறதே
நன்றாக இருக்கு நண்பரே
adadee.. அடடே 6 பாகமா வருதா? சாரி நான் கவனிக்கவே இல்லையே
Post a Comment