அவனால் "நம்பர் 2 " வை அடக்க முடியாது
அவன் குழந்தையாக இருக்கும் போதிருந்தே இந்த பழக்கம் இருக்கிறது
அவனுக்கும் "நம்பர் 2 " வுக்கும் எப்பொழுதும் ஏலாம் பொருத்தம்தான் .நாம் எல்லோரும் காலையில் செய்யும்(மன்னிக்கவும் )காலையில் போகும் இந்த வேலையை சோமு மாலையில் செய்வான் /போவான்.
அவன் பள்ளியில் படித்தபொழுது நடந்த சில சம்பவங்கள் .
சம்பவம் 1 :
அன்று வழக்கம் போல் சோமு காலையில் எழுந்து பல்விளக்கி ,குளித்து ,சாப்பிட்டு விட்டு பள்ளி கிளம்பி கொண்டிருந்தான் .அப்பொழுதே அவனுக்கு வயிறு ஒரு மாதிரி கட முட என்று சத்தமிட்டது .இருந்தாலும் நாம் மாலை கடன்தானே செய்வோம்/போவோம் என்று அலட்ச்சியபடுத்திவிட்டு பள்ளிக்கு சென்றான் .வழியில் மாங்காய் பத்தையை (அதுவும் ஐந்து )மென்று முழுங்கி விட்டு போனான் .
அவன் படித்தபள்ளி ஐந்தாம் வகுப்பு வரையே இருந்தது .நம் சோமு மூன்றாம் வகுப்பு படித்துகொண்டிருந்தான் .அந்த பள்ளியில் தினம் காலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் எல்லோரும் ஒன்றாக மெயின் ஹாலில்
அமரவேண்டும் .தினமும் யாரவுது ஒருத்தர் போர்டில் எழுதி போடப்பட்டுள்ள வாய்பாட்டை அதன் அருகே சென்று எல்லோர் முன்னிலையிலும் கையில் குச்சியை கொண்டு போர்டில் உள்ள வாய்பாட்டை வருசையாக வாசிக்க வேண்டும் .அன்றைக்கு சோமுவின் turn .
சோமுவும் போர்டு அருகே சென்று வாய்பாட்டை வாசித்தான் .வாசித்து கொண்டிருக்கும் பொழுதே வயிறு கலக்கியது .மாங்கவும் அதன் வேலையை காட்டியது .
இனிமேலும் வாசித்து கொண்டிருந்தால் இங்கேயே அசிங்கம் செய்துவிடுவோம் என்று பாத்ரூமுக்கு ஓடினான் .வாசித்து கொண்டிருக்கும் பொழுதே ஏன் இவ்வாறு ஓடுகிறான் என்று அவன் பின்னாலே அவனது மிஸ் உம் ஓடினார் .சோமு பாத்ரூம் செல்லும் வழியிலே சிறிதளவு "நம்பர் 2 " வை அவனது டவுசெர் வழியாக போட்டு விட்டு ஓடிவிட்டான் .பின்னாலே வந்த மிஸ்சும் அதை கவனிக்காமல் அதிலேயே காலைவைத்து வழுக்கி விழுந்து மண்டையை உடைத்து கொண்டார்
சோமு இவ்வாறு இருக்கிறானே என்று அவனது பெற்றோர் மிகவும் வருத்தம் மடைந்தனர்.பையன் எதையாவுது பார்த்து பயந்திருப்பான் அவனுக்கு மந்திருச்சு விட்டா சரியாகிவிடும் என்று அவனது அப்பத்தா ஒரு சாமியாரிடம் அழைத்து சென்றார்
சாமியாரின் செயல்களை பார்த்து அவன் மீண்டும் டவுசெரிலே போய்விட்டான்
இவர்கள் இங்கிருந்து கிளம்பினால் போதுமென்று காலச்சுழலில் சரியாகி விடும் என்று சாமியாரும் அவர்களை அனுப்பி விட்டார்
சம்பவம் 2 :
ஒரு சனிக்கிழமை பகலில் சோமு அவனது நண்பர் களும் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர் .சோமு பாட்டிங் செய்து கொண்டிருந்தான் .அவனது டீம் ஜெயிக்க இன்னும் ஐந்து ரன்களே உள்ளது .எதிர் திசையில் அவனது நண்பன் ரமேஷ் நின்றுகொண்டிருந்தான் .
"டேய் ஒரு சிங்கள் மட்டும் தட்டு நா பாத்துக்கிறேன் "
அவனும் அதே மாதிரி செய்தான்
ஆனால் ஓவர் முடிந்து விட்டது .இன்னும் ஒரு ஓவரே உள்ளது
மீண்டும் அவன் பாட்டிங் செய்தான் .
வந்த பந்தை அடித்து விட்டு ஓடும் பொழுது அவனுக்கு வயிறு கலக்கி விட்டது
வழக்கம் போலே ஆடுகள பாதையில் "நம்பர் 2 " வை அசிங்கம் செய்துவிட்டு ஓடினான்
பந்தை எடுக்க வந்த பீல்டர் அவனது "நம்பர் 2 " வை மிதித்து வழுக்கி விழுந்து காலை சுளிக்கி கொண்டான் .காலை சுளுக்கி கொண்டவனின் அம்மா சோமு வின் வீட்டிற்கு வந்து சண்டை போட்டார் .பின்பு அவரது மகனின் மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்த பின்தான் போனார் .அன்றிலிருந்து சோமுவை அவனது நண்பர்கள் பீமு என்றே அழைத்தனர்
சோமு வளர்ந்தான் .
கல்லூரியில் சேர்ந்தான் .பின்பு கல்யாணம் ஆனது .அவனுக்கு குழந்தை பிறந்தது .ஆண் குழந்தை .சோமுவின் நண்பன் ரமேஷ் குழந்தையை பார்க்க வந்தான் .
நண்பர் இருவரும் பழங்கதைகள் பேசினார்கள் .
கிளம்பும் பொழுது குழந்தை எடுத்து கொஞ்சி அதன் கையில் காசு கொடுப்போம் என்று தூக்கினான் .
சோமுவின் குழந்தை அவன் நண்பனது புது சட்டையில் "நம்பர் 2 " போய்விட்டது
நண்பன் மனதிற்குள் நினைத்துகொண்டான் (அது சரி இவன் குழந்தை தானே )
|
10 கருத்துகள்:
ஐயோ என்னால முடியலங்க வயிறு வலிக்கிது
mudiala.
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால சிரிப்ப அடக்க முடியல!!
உண்மையை சொல்லுங்க... இது நீங்கதானே சோமு...
Blogger கத்துக்குட்டி said...
ஐயோ என்னால முடியலங்க வயிறு வலிக்கிது
ஐயையோ என்னாச்சு முதல்ல பொய் டாக்டர பாருங்க
Do r Die said...
எனக்கு சிப்பு சிப்பா வருது
நல்ல வரட்டுங்க
Dhosai said...
mudiala.
ஏங்க உக்கார முடியலையா இல்ல நிக்க முடியலையா
நாகராஜசோழன் MA said...
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால சிரிப்ப அடக்க முடியல!!
என்னங்க பண்றது ஏதாவுது ஒரு பதிவு போட வேண்டியத இருக்குதே
philosophy prabhakaran said...
உண்மையை சொல்லுங்க... இது நீங்கதானே சோமு...
ஹி ஹி ஹி ஹி
Post a Comment