வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

3.1.11

இரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )

                     சென்னை எக்மோர் . கொஞ்சம் வெளிர் வானம் .ஆங்காங்கே மேகங்கள் திட்டு திட்டாய் .எக்மோர் ரயில் ஸ்டேஷனிற்குள் நுழைந்தேன் . பின்னாலே என் மனைவியும் கை குழந்தையும் அவளால் இழுத்து வரப்படும் பிரீப்கேசும் .என் கைகள் பான்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்தபடி வாயில் சூயிங்கம்மை மென்றபடி நடந்தேன் .என் பெயர் சுருக்கமாக முகுந்த் . முழு பெயர் வேண்டாம் அதை சொல்வதற்குள் நான் போகும்  ட்ரைன் சென்றுவிடும் .சரியாக 5 : 25  மணிக்குள்  ஐந்தாவுது பிளாட் பாரத்தில்இருந்து கிளம்பும்   காச்சிகூடா எக்ஸ்பிரஸ்யை புடிக்க வேண்டும் .ஏனென்றால் நான் ஹைதராபாத் போக வேண்டும்
                   என் வாட்சை பார்த்தேன்   5 மணி காட்டியது . நான் ரயில்வே ட்ராக்கை கடந்து செல்லும் படியில் ஏறி மேலிருந்து பார்த்தேன் .என் மனைவி சேலைத்தலைப்பு தடுக்க குழந்தையுடன் கஷ்டப்பட்டு ப்ரீப்கேசுடன் போராடி கொண்டிருந்தாள்
                நான் மேலிருந்து கூவினேன் . ம்ம் சீக்கிரம் வா .என் மனைவி பெயர் சுகந்தி. சரியாக மூன்று வருடம் ஆகிவிட்டது அவளை திருமணம் செய்து .குழந்தை பிறப்பதற்கு முன் அழகாத்தான் இருந்தாள் . குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் கொஞ்சம் கண்ணுக்கு கீழ் கருவளையம் கொஞ்சம் மேடிட்ட வயிறு .முன்பெல்லாம் இரு சிங்கிளாக இருந்தது இப்பொழுது ஒரு சிங்கிள் ஆகிவிட்டது .நான் எதற்கு ஹைதரபாத் செல்கிறேன் என்றால் .அங்கேதான் எனக்கு பணி . இநதியா முழுவதும் கிளைகள் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஹைதராபாத் கிளையில் மேனேஜராக  பணிபுரிகிறேன் .லீவிற்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டு பணிக்கு திரும்பி கொண்டிருக்கிறேன் .
                நான் ஏற வேண்டிய கம்பார்ட்மென்ட் வந்தது .அதில் ஏறி முதலில் என் குழந்தையை வாங்கினேன்.உள்ளே சென்றோம் .நான் ஜன்னல் ஓரமாக அமர்ந்தேன் என் அருகில் என் குழந்தையை படுக்க வைத்தாள் என் மனைவி . எதிர் இருக்கையை காலியாக இருந்தது
                 " புக் எதுவும் வாங்கனுமா " என்றேன்
                 " சரி வாங்கிட்டு வாங்க " என்றாள்
கீழிறங்கி சென்றேன் .புத்தக கடைக்கு சென்று ஆனந்த விகடன் , குமுதம் வாங்கினேன்
ரயில் ஏறி எனது இருக்கைக்கு முன்னேறினேன் . இருக்கையில் அமர்ந்து என் மனைவியிடம் புத்தகங்கள் குடுக்கும் போது எதிரில் பார்த்தேன் .அப்படியே என் கையில் இருந்த புத்தகம் நழுவி இருக்கையில் விழுந்தது
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
                 அவளுக்கு மிஞ்சி போனால் 25 வயது இருக்க முடியும் .ரோஸ் கலரில்  மெலிய ஷிபான் சேலையும் அதற்கு மேச்சாக பிங்க் கலரில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள் .அவள் குனிந்தபோது பிரா பட்டைகள் விலகி தெரிந்தது .அதுவும் ரோஸ் கலர் .ஆஹா .
அப்போது விநோதமான ஒரு ஒலி கேட்டது .அந்த ஒலி அவள் அருகினில் இருந்துதான் வந்தது .வந்த திசையை நோக்கினேன் .ஒரு மனிதன் அமர்ந்திருந்தான் .கொட்டாவி விட்டிருக்கிறான் .ச்சை. முகத்தில் இரண்டு நாள் தாடி ஒரு சோட பட்டி கண்ணாடி .அழகை ரசித்து கொண்டிருக்கும் பொழுதுதான் இடைஞ்சல் தருவார்கள் .அவளைவர்ணித்து  கொண்டிருந்ததை நிறுத்தி விட்டேன் அல்லவா தொடர்கிறேன் . இவள் பிறந்த ஆண்டு படைப்பு கடவுள்  பிரம்மனின் பவள விழா படைப்பாக இவள்  இருக்கவேண்டும் . ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள் .நெற்றியில் மெல்லிய புடைப்பு அதில் செதுக்கி விட்டாற்போல் இரு புருவங்கள் .அதற்கு கீழ் இரு பள்ளங்கள் அந்த பள்ளத்தில் இரு முத்துக்கள் அதற்கு பெயர் கண்கள் .
                " என்னங்க " சடாரென்று திரும்பி முறைத்தேன் என்ன என்பது போல் " குழந்தை ஆய் போய்ட்டான்க கொஞ்சம் சூட் கேசில் இருந்து துணி எடுத்து குடுங்க தொடைக்கணும்" எடுத்து குடுத்தேன்
            எதிரில் அமர்ந்திருந்த மனிதன் எழுந்தான்.அவள் இதழ்கள் பிரிந்து  " எக்கடக்கி " என்றது . ஓ தெலுங்கா அதற்கு அவன் சிறு குழந்தை போல் ஆள்காட்டி விரலை  நீட்டி மற்ற விரல்களை மடக்கி காட்டினான் .அவனை அசூசையாக பார்த்தேன் . அவளை மீண்டும் சுவைக்க ஆரம்பித்தேன் அப்பொழுதான் என்னை பார்த்தாள் . முறைப்பா அல்லது வரவேற்ப்பா என்று தெரியாத ஒரு விழி வருடல் அளித்தாள்.
           ஜன்னல் ஓரம் திரும்பினேன் .ரயில் ரேனிகுன்டாவை நெருங்கி விட்டதாக காட்டியது .இவளை ரசித்து வந்ததில் நேரம் போனதே தெரியவில்லையே . என் மனைவியிடம் திரும்பி " இந்த ஸ்டேஷன் லே ஏதாவுது சாப்பிட வாங்கிவிடலாம் "என்றேன் .தலையாட்டினாள் . .அந்த மனிதன் வந்தான் .அமர்ந்தான் நெட் உயிர்த்தான்
அவளிடம் திரும்பி " நீ மிடில் பெர்த்தில் படுத்துகொள் நான் அப்பர் பெர்த்தில் படுத்து கொள்கிறேன் " என்று தெலுங்கில் உரைத்தான் .நான் என் மனைவியிடம் திரும்பி நீ லோயர் பெர்த்தில் படுத்து கொள் " என்றேன்

              நான் அப்பர் பெர்த்தில் படுத்தவாறு குனிந்து பார்த்தேன் .அவள் இன்னும் தூங்க ஆரம்பிக்க வில்லை .போக போக குளுருவதுபோல் போல் இருந்தது .ஐயையோ காற்றே நீ மட்டும் வீசு ஆனால் குளுரச்செய்யாதே ஒரு வேளை அவள் போர்த்தி கொள்ளலாம் .மானசீகமா காற்றிடம் இறைஞ்சினேன் .அவளது கண் முடி இருந்தது " ஏங்க லைட் ஆப் பண்ணவா " என்றாள் என் மனைவி ." வேண்டாம் நான் கொஞ்சம் நேரம் புத்தகம் படித்து வருவேன் " என்று  தலைகாணி அடியில் இருந்த புக்கை எடுத்தேன் .அவள் தூங்க ஆரம்பித்து விட்டாள் என்று தெரிந்தது .கையை தலைக்கு பின்னால் வைத்த போது அவளுடைய மாராப்பு மெதுவாக விலகியது .நான் குப்பரடித்து படுத்தேன் .அங்கமெலாம் சூடேறியது . அவள் ஒருக்களித்து படுத்தாள் .தொப்புள் தெரிந்தது .தூக்கத்திலும் பெண்களுக்கு இயல்பாகவே தன் உடை விலகுவது குறித்த உணர்வு இருக்கும் போல .அதை சரிசெய்து கொண்டாள். ச்சை
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
              திடீரென்று முழிப்பு வந்தது .மணியை பார்த்தேன் .4:30 .இன்னும் இரண்டரைமணி நேரத்தில் காச்சிகூடா வந்துவிடும் .பாத்ரூம் செல்ல உந்துதல் வந்தது . கீழிறங்கினேன் . என் மனைவியை பார்த்தேன் குழந்தையை அணைத்தவாறு போர்வையை கழுத்துவரை மூடி இருந்தாள் .அவளை பார்த்தேன் அந்த பக்கம் ஒருகளித்தவாறு படுத்திருந்தாள். என் முகத்திற்கு நேரே அவளது முதுகு தெரிந்தது ஆனால் நான் அதை பார்க்கவில்லை வேறொன்றை பார்த்தேன் .
          பாத்ரூம் காலியாக இருந்தது. உள்ளடைந்து கதவை சாத்தினேன் .
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
          வெளியில் வந்து முகத்தை கழுவினேன் . கண்ணாடியை பார்த்து முடியை கோதினேன் .திரும்பினேன் . எனது இருக்கைக்கு முன்னால் கூட்டமாக இருந்தது . முன்னேறினேன் .கூட்டத்தை விலக்கினேன் . உள்ளே என் மனைவி அழுதவாறு அமர்ந்திருந்தாள் . 
-
        மணி சரியாக 5 :30  காட்டியது .அந்த பெண்ணை பார்த்தேன் என் குழந்தையை மடியில் வைத்திருந்தாள் . அவள் கூட அமர்ந்திருந்த மனிதன் அவள் கணவன் . எவனோ ஒரு திருடன் வந்து கத்தி யை காட்டி மிரட்டி என் மனைவியின் நகைகளை கேட்டிருக்கிறான் .அப்போது நடந்த சண்டையில் அவள் கணவனின் தோல்பட்டையில் கத்தி குத்து விழுந்திருக்கிறது . பிறகு சத்தம் கேட்டு எல்லோரும் எழுந்தவுடன் அவன் பயந்து போய் ஓடும் ட்ரைனில்  இருந்து குதித்து தப்பி ஓடி இருக்கிறான்
    அந்த கணவனை ஆழமான கத்தி குத்து இல்லாவிட்டாலும் ரத்த சேதாரம் இருந்தது .அவன் கையை பிடித்து நன்றி கூறினேன்
அதற்கு அவன் தெலுங்கில் " பர்லேது சார் என் சகோதிரியாக இருந்தால் சண்டை போட்டிருக்க மாட்டேனா " என்றான்
" ரயில்வே போலீசில் கம்ப்ளைன் செய்து விடுவோம் " என்றேன்
.ட்ரைன் மெதுவாக சென்று கொண்டிருந்தது .ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பினேன்
சாக்கடை நாற்றம் அடித்தது . அதில் பன்னிகூட்டங்கள் எதையோ போட்டி போட்டு கொண்டு தின்று கொண்டிருந்தது .அதில் ஒரு பன்னி  என்னை நிமிர்ந்து பார்த்தது .அந்த பார்வை " உனக்கு நாங்க எவ்வளவோ தேவலாம்டா " என்பது போல் இருந்தது
ரயில் வேகமெடுத்தது
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
         


18 கருத்துகள்:

Unknown said...

Nice story!

Unknown said...

கதை அருமை நண்பரே

pichaikaaran said...

nice story

Philosophy Prabhakaran said...

சூப்பர்... ஆனால் பதிவு முழுவதிலும் வேறு ஒரு பாதையில் பயணித்துவிட்டு கடைசி இரண்டு வரிகளில் மட்டும் தத்துவார்த்தமாக பேசுவது ஏனோ பிடிக்கவில்லை...

ஆனந்தி.. said...

//டிஸ்கி : ஆண்களுக்கு பெண்கள் மீதான பார்வையை எளிதாக வகைப்படுத்தி விடலாம்
ஒன்று தாயாக மதிப்பார்கள் இல்லை என்றால் தரம்கெட்ட மனிஷியாய் நினைப்பார்கள் .இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல ஆனால் ஒரு காலத்தில் //

டிஸ்க்கி கு ஒண்ணும குறைச்சல் இல்லை சகோ...:))))))))

karthikkumar said...

story nice :))

சி.பி.செந்தில்குமார் said...

good story.. but y diski?

சி.பி.செந்தில்குமார் said...

u have a stuff to write stories.congrats

அஞ்சா சிங்கம் said...

அந்த டிஸ்கி தேவையா ?
நல்ல தோழியாக மதிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் .............................

Unknown said...

நீங்க டிஸ்கி போட்டதால கதாநாயகனே நீங்கதான் போலன்னு நினைக்க வைக்குது நண்பா :-) கதை சூப்பரோ சூப்பரு

kumar said...

நண்பரே கதை சூப்பர்.
ஆண்கள் கிழிமாதிரி பொண்டாட்டி இருந்தாலும்,
குரங்கு மாதிரி வப்பாட்டி வசுகிட்டான் சொன்னது
சரியாதான் இருக்கு. அவுங்க அவுங்க பொண்டாட்டிகிட்ட இல்லாததது
அந்த வப்பாடிகிட்ட மட்டும் இருக்குமா என்ன?
ஆண்கள் புரிந்துகொண்ட சரி.
ஆண்கள இருந்தாலும் சரி, பெண்களா இருந்தாலும் சரி,
மனைவிக்கு துரோகம் செயிர கணவனும்,
கணவனுக்கு துரோகம் செய்யிற மனிவயும்
வாழ்ந்ததா சரித்திரமே இல்ல....

எல் கே said...

good one

arasan said...

அசத்தலா இருக்குங்க....

Anonymous said...

எச்சரிக்கை:
"குறட்டை" புலி உலா வருகிறது.
வலைப்பிரியர்கள் வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால்
உங்கள் வலைப்பூக்களில் பதுங்கும்.அது உங்கள் பதிவிற்கு ஆபத்தானது.
--- sleepingtiger007.blogspot.com

Madurai pandi said...

Nice :)

Unknown said...

வாக்களிச்சாச்சு....

Anonymous said...

Interesting story...Mani!! Expecting a few more.

தமிழ்வாசி பிரகாஷ் said...

கதை மிகவும் அருமை இன்னும் எதிர் பார்க்கிறோம்.

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena