வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

2.1.11

காதலும் கல்யாணமும்

            காதல் என்றால் என்ன ? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும்  ஒரு விதமான ஈர்ப்பு நாளிடைவில் அது ஒரு அன்பாக மாறுகிறது .அதற்கு காதல் என பெயரிடப்படுகிறது .
            கல்யாணம் என்றால் என்ன ? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் ஒரு சமுதாய பந்தம்  .ஒரு புது வாழ்க்கை தொடக்கம்
           "யோவ் இதல்லாம் எங்களுக்கு தெரியாதா ? இதையெல்லாம் ஒரு ஒன்னாம் கிளாஸ் பைய்யன கூப்ட்டு கேட்டா கூட சொல்வானையா " என்று நீங்கள் நினைப்பது புரிகிறது
ஆனா  எனக்கு தெரிந்தவைகளைதானே எழுத முடியும் .ஏனென்றால் நானே ஒன்னாம் கிளாஸ் பைய்யந்தானே ( கொஞ்சம் ஓவர் மொக்கையா  போகுதோ )

 சரி மேட்டருக்கு வருவோம் (  கற்பனை குதிரையை அடக்குங்கள் )

             என்  நண்பர் ஒருவர் சுமார் பத்துவருடங்களாக தெரியும் ..ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறார் . அது போக ஒரு கம்ப்யூட்டர் செனட்டர் வைத்திருக்கிறார். அதுவும் இது ப்ராஜெக்ட் சீசன் .
கல்லூரிகளில் ப்ராஜெக்ட் என்ன லெவெலில் இருக்கிறது என்று பார்க்கபோவதாக கூறி மட்டம் போட்டு ஊர் சுற்றுவதற்குதான்  ப்ராஜெக்ட் கண்டுபிடித்திருப்பார்கள் போல . நல்ல தொழில்  . அந்த நண்பர் ஒரு பெண்ணை காதலிக்கிறார் .அந்த பெண்ணும் தான். ஆனால் பெண் கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர்  .நம் நண்பர்  இந்து மதத்தை சேர்ந்தவர் .விண்ணைத்தாண்டி வருவாயா போல் உள்ளதா . என்ன ஒன்று இங்கு   இந்த காதலுக்கு நம் நண்பரின் தந்தைதான் போர்க்கொடி உயர்த்துகிறார் .
             ஒரு 26  வயதான ஒரு வாலிபன் .நல்ல பணியில் இருக்கிறார் .அது போக சுயமாக தொழில் செய்கிறார் .அந்த கம்ப்யூட்டர் சென்டரில் நான்கு பேர் பணிபுரிகிறார்கள் .அவர்களுக்கு மாத சம்பளம் மட்டுமே 24000 /- ரு செலவாகிறது .ஆனால்  அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்க அவருக்கு அதிகாரம் வழங்க படவில்லை . எளிதாக வீட்டை விட்டு வெளியில் வந்து அவர்களால் கல்யாணம் செய்து கொள்ள முடியும் . ஆனால் அந்த பெண் ஒத்து கொள்ளவில்லை .
            சென்னை திருவெற்றியூரில் உள்ள எனது உறவினர் பெண் .எனக்கு முறை பெண்ணும் கூட .அந்த பெண் சிறுவதில் இருந்தே அவர் வீட்டு அருகினில் இருந்த பையனை காதலித்திருக்கிறார் .அந்தபைய்யன்  பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்ப்பது தெரிந்து  வீடேறி பெண் கேட்டிருக்கிறார் . மறுக்கபட்டிருக்கிறது வெவ்வேறு ஜாதி என்பதால் .அந்த பெண்ணின் பெரியப்பா என் தந்தையிடம்  நடந்தை எடுத்து கூறி எனக்கு மணமுடித்து வைத்துவிடலாம் என்று பார்த்திருக்கிறார் ." அவுங்கம்மா சாப்பாடு  ஊட்டி விட்டாதான் ஒழுங்காவே சாப்பிடுவான் அவனுக்கு போய் கல்யாணமா " என்று நாசூக்காய் தவிர்த்துவிட்டார் என் தந்தை  .இப்பொழுது அந்த பெண்ணை அவர்களது சொந்த ஊரில் வைத்து  அந்த காதலை பிரிக்கும் முயற்சி நடந்து கொண்டிருப்பதாக கேள்வி .
          இன்னொருநண்பர் அவரது  இனத்திலே உள்ள பெண்ணைத்தான் காதலிக்கிறார் .அந்த பெண்ணும் தான் . ஆனால் இந்த காதலில்  நண்பருடைய சம்பளம் தடையாக உள்ளது .அந்த பெண்ணிற்கு பார்த்த மாப்பிள்ளையை  விட நண்பர் குறைவாக சம்பளம் வாங்குகிறார்

         காலங்கள் உருண்டோடினாலும் காதலுக்கு எதிர்ப்பு அவ்வாறே உள்ளது .ஒரு வேளை பெற்றோர் ஆனபின் நானும் இவ்வாறு நடந்து கொண்டாலும் ஆச்சிரிய படுவதற்க்கில்லை . மதம், ஜாதி , பணம் முறையே இதை காரணம் காட்டி தங்களின் கௌரவத்தை சமுதாயத்தில் நிலைநிறுத்தி  கொள்கிறார்கள் பெற்றோர்கள் . அந்த கௌரவத்திற்காக தன் மகனையோ மகளையோ பலி கொடுக்க தயாராக இருக்கிறார்கள்
இந்த மாதிரி காதலும் எதிர் காலத்தில் கள்ள காதலாக மாற வாய்ப்பிருக்கிறது .

 சரி இதையெல்லாம் விடு உன் காதலை பற்றி கூறு என்கிறீர்களா . எனக்கு காதல் பிரச்சனையில்லை காதலிகள் தான் பிரச்சனை. எல்லாம் ஒரு தலை ராகம் .என்ன செய்வது .இது குறித்து கடவுளிடம் அளாவுகையில் " உனக்கு வேறு பல சோதனைகள் உள்ளது இந்த  சோதனைகள் உனக்கு எந்த  ஜென்மத்திலும் நடக்க வாய்பேயில்லை " என்று கூறிவிட்டார்

13 கருத்துகள்:

Unknown said...

ரொம்ப சுத்தி வளைச்சு பேசுறீங்களே... புத்தாண்டு ஜோசியத்தோட பாதிப்பா? உங்களின் நண்பரின் கதைக்கும் முடிவில்லை, உங்கள் கதைக்கும் முடிவில்லை.
ஏதோ வம்புக்கு விலை கொடுக்கப்போறீங்க போல.
எனி வே வாழ்த்துக்கள்.

Unknown said...

நா.மணிவண்ணன் அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

pichaikaaran said...

ஏதாச்சும் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்...

என்னவோ சொல்ல வருகிறீர்கள்..என்னவென்று போக போக தெரியும் என நினைக்கிறேன்

Philosophy Prabhakaran said...

புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

Unknown said...

உங்களுக்கு என்னோட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நீங்க சொல்றா மாதிரியே முதல் பத்திய திரும்பி பார்க்கவும்

காதல் என்பது ஒரு ஈர்ப்பு. நீங்க ஒரு பொறுப்பான அப்பா எடத்துல இருந்து பார்த்தால் தான் இந்த விஷயம் புலப்படும்.

மன்னிக்கவும்! நானும் முழுசா சொல்லல!?உங்களுக்கு ஒரு பதிவு மூலம் பதில் சொல்லலாமுன்னு (டாபிக் கெடச்சிடுச்சி நன்றி!)

அஞ்சா சிங்கம் said...

சென்னை திருவெற்றியூரில் உள்ள எனது உறவினர் பெண் .எனக்கு முறை பெண்ணும் கூட .//////////////////////

ரொம்ப நெருங்கி வரீங்க ஒரு க்ளூ குடுத்தால் கண்டுபிடித்து விடுவேன் ..........
அது எந்த கம்ப்யூட்டர் செனட்டர்?

Unknown said...

@அஞ்சா சிங்கம்

அந்த கம்ப்யூட்டர் சென்ட் இருப்பது மதுரையில் .அந்த திருவெற்றியூர் காதலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை .கம்ப்யூட்டர் செனட்டர் காதல் என் நண்பனின் காதல் .அந்த திருவேற்றிய்யூர் பெண் என் உறவினர் பெண் . அவர்கள் காதலை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது . என் பெற்றோர் கூறி அறிந்தவை .அந்த காதலை என் உறவினர் கூட்டங்கள் ஒன்றாக சேர்ந்து பிரிக்கிறது என்று கேள்வி பட்டேன் .அதனால் தான் எழுதினேன் .நீங்கள் எந்த மாதிரி க்ளு எதிர் பாக்கிறீர்கள் என்று தெரியவில்லை

Unknown said...

@விக்கி உலகம்

இதற்கு எதற்கு மன்னிக்கவும் என்று எல்லாம் போடுகிறீர்கள் . நான் கூறிய மூன்று காதல்களுக்கும் என்னால் எந்தவிதத்திலும் உதவ முடியாது என்பதுதான் உண்மை . இந்த பதிவிலே நானும் ஒரு வேளை பெற்றோர் ஆனா பின் இது போல் நடந்து கொள்ளலாம் என்றும் கூறி இருக்கிறேன் . இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிரியாக உள்ளார்கள் என்று மட்டும் தான் கூறியுள்ளேன் .எனக்கும் காதல் குறித்த அனுபங்கள் என்று எதுவும் இல்லை .அதனால் என்னால் இது குறித்து தெளிவாக பதிவிட முடியாது . அது மட்டுமில்லாமல் என்னால் அது குறித்து ஆழமாக சிந்திக்கும் அளவிற்கு அறிவு கிடையாது . ஏதோ எனக்கு தோணியதை எழுதினேன்

மற்றபடி உங்கள் பதிவை எதிர் நோக்கி உள்ளேன் .வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Unknown said...

காதலுக்கு எப்போதும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது, ஆனால் அந்த எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்து கொள்பவர்கள் இப்பொழுது அதிகமாகத்தானே உள்ளது.

Unknown said...

@இரவு வானம்


உண்மைதான் எதிர்ப்புகளை மீறி கல்யாணம் நடக்கிறது . ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த எதிர்ப்புகள் ஏன் தொடர்கிறது என்பதுதான் என் கேள்வி

Madurai pandi said...

எல்லா பெற்றோரும் அப்படி இருபதில்லை நு நினைக்றேன்.. ஏன்ன நானும் காதல் மற்றும் கலப்பு திருமணம் தான் செய்து இருக்கிறேன்.. பெற்றோர் சம்மதத்துடன்...

ஆனால் சமுதாயத்தில் பணம் என்பது மிகவும் முக்கியம் நண்பா... நான் குறைந்த சம்பளம் மட்டுமே வாங்கியிருந்தால், அவங்க பொண்ண எனக்கு தர சம்மதித்து இருப்பாங்களான்னு சந்தேகம் தான்... மற்ற படி "இனம்" என்பது தேவை இல்லை...

--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Unknown said...

@மதுரை பாண்டி

உண்மைதான் தான் நண்பா உங்கள் கருத்திற்கு முற்றிலுமாக உடன்படுகிறேன்

Unknown said...

உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன் நண்பா..

கெளரவம் பறிபோய்விடும் என்ற காரணத்தால் மட்டுமே லவ் மேரேஜுக்கு பெற்றோர்கள் மறுப்புத் தெரிவிக்கிறாங்கன்னு நாம நினைச்சிட்டு இருக்கோம்.. ஆனால் நம்முடைய எதிர்காலம் இதனால் பாழாகி விடலாம்னு பயமாகக்கூட இருக்கலாம் இல்லையா.. நாமும் அவங்க இடத்துக்குப் போகும்போது இதெல்லாம் தோன்றலாம் நீங்க சொல்வதுபோல்.. :-)

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena