வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

31.12.10

கனவுக்கன்னி - தொடர் பதிவு

                இந்த வருடத்தின்  எனது கடைசி பதிவு .ப்ளாக் தொடங்கி ஐந்து மாதங்கள் கூட ஆகவில்லை . ஏதோ போனா போகட்டும்னு என்னையும் ஒரு பதிவராக ஏற்றமைக்கு நன்றி .இந்த கனவு கன்னி -தொடர் பதிவு ஒரு பிரபல " ஜொள்ளு -லொள்ளு" பதிவர் அழைப்பிற்கிணங்க எழுதப்படுகிறது ( ஒரு ஒன்னும் தெரியாத அப்பாவி பையன   என்னலாம் எழுத சொல்றாங்கனு பாருங்க ) முதல இந்த தொடர் பதிவ கண்டுபிடிச்சது யாருப்பா ?
                இந்த வருடத்தில் வந்த படங்களில் நடித்த நடிகைகளில் சிறந்த நடிப்பிற்க்காக (மனம் : ஒ நீங்க நடிப்பையெல்லாம் ரசிப்பீங்களோ ) என்னுடைய தெரிவாக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்கள் என்பதை கூறி கொள்வதில் பெருமை அடைகிறேன்


5 .அஞ்சலி :
                 
 அங்காடி தெரு படத்தில் அருமையாக நடித்திருப்பார் .மகிழ்ச்சி படத்தில் கிளு குளு பாட்டு ஒன்று வருவதாக சொல்கிறார்கள் பார்க்கவில்லை ( அட நம்புங்கப்பா ).அப்பறம்  பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்காங்க . இவருடைய சம்பளத்தை வைத்து வரும் வருடத்தில் படாதிபதிகள் இவருடைய எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள்
4 . சமந்தா :
 இவர்தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கடைசி காட்சியில் வருகிறார்என்று இந்த பதிவை எழுத அழைத்தாரே அவருடைய பதிவில் படித்துதான் தெரிந்துகொண்டேன் .(உண்மைய்லே நான் அப்பாவி பையன்னு தெரிஞ்சுதா ). மாஸ்கோவில் காவேரி மண்ணை கவ்வினாலும் .நம்ம முரளி சார் பையன் கூட நடிச்ச படம் ஏதோ கொஞ்சம் நல்ல பெயர் வாங்கி குடுத்திருக்கும்னு  நினைக்கிறேன் .வரும் வருடம் சமந்தாவிற்கு சமத்தான வருடமாக இருக்கும் என நம்புவோமாக


3 . ஓவியா :
 இவருடைய உண்மையான பெயர் ஹெலனாம் . அந்த பெயரில் பழைய ஹிந்தி நடிகை ஒருத்தவுங்க இருந்திருக்காங்க அந்த காலத்து குத்தாட்ட நடிகைன்னு கூகிள் இமேஜ் சொல்லுது  . இவுங்க கிட்ட அந்த மாதிரி எல்லாம் யாரும் எதிர்ப்பாக்க கூடாது . அந்த மாதரியான பேஸ் கட்டும் இவுங்ககிட்ட இல்லை . களவாணி படத்தில் நடித்து என் மனத்தை களவாடி சென்றவர் என்ற எதிர்ப்பார்ப்புடன் மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளார் என்று கேள்வி பட்டு போனேன் ( அட பாவிகளா உங்களுக்கு வேற நடிகையே கிடைக்கலையா )

 2 . சுனைனா :
            வம்சத்துள்ள அம்சமா நடிச்சிருக்காங்க எல்லோரும் சொல்றாங்க . ஆனா என்னவோ நமக்கு அந்த படமே புடிக்கல . முகத்தில் தெலுங்கு வாடை அடித்தாலும் அவ்வப்போது தமிழில் நடிப்பார் என்று எதிர்ப்பார்ப்போம்


 1 . ஜெனிலியா :


            ஒரு க்யுட்டான நடிகைனா அது இவுங்கலாதான் இருக்கா முடியும்  அட அட சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் என்னமா நடிச்சிருப்பாங்க . பெண்கள் சிலபேருக்கு இந்த பொண்ணு  என்ன லூசு மாதிரி நடிக்குதுனு  நினைப்பாம் . நினைச்சுட்டு போங்க .
நம்ம சுள்ளான் நடிகர் கூட நடிச்ச படம் சரியா போகலைனாலும் அம்மணி நம்ம டாக்டரு விஜய் படத்ல கலக்கு வாங்கனு நம்புவோமாக

 இனி வர்ற லிஸ்ட் எனக்கு ரெம்ப புடுச்சவங்க 


ஸ்ருதி :
   உன்னைப்போல் ஒருவனில் நாணநானனு  பாடுவாங்களே  அப்படியே ஒடனே  அவுங்களுக்கு நான் ரசிகன் ஆகிட்டேங்க .இவுங்க நடிப்பில் வரும் வருடத்தில் வரவுள்ள சூர்யா உடனான படத்திற்கு  கண்டிப்பா ஒபெனிங் ஷோ போய்டணும் . ஆள் நல்ல அழகுங்க ( கமல் ரசிகர்கள் மன்னிப்பார்களாக )

இலியானா:


                                             

ஒரே ஒரு தமிழ் படத்தில மட்டும் நடிச்சிருக்காங்க .வரும்  வருடத்திலாவுது தமிழ் படத்தில் தரிசனம் தருவார்களா
.இப்படிக்கு -பொறுமையுடன் காத்திருக்கும் உங்கள் ரசிகன்.

           அழகு என்பது நாம் பார்க்கும் பார்வையில்தான் உள்ளது என்று கூறி இந்த வரலாற்று பதிவை இத்துடன் முடித்து கொள்கிறேன் .


இந்த பதிவை படித்து விட்டு கமெண்ட் போடுபவர்களுக்கு ,கமென்ட் போடாமல் போகிறவர்களுக்கு ,ஒட்டு போடு பவர்களுக்கு  மற்றும் ஒட்டு போடாமல்  போகிறவர்களுக்கு எனது

                                       
                                
                 
                       " இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் " 

                                                                  


                                           

  13 கருத்துகள்:

அஞ்சா சிங்கம் said...

வடை எனக்கு தான் .........

இரவு வானம் said...

முதலும், கடைசியும் மட்டும்தான் கனவுகன்னி, மீதி எல்லாம் அப்ரண்டிஸ்ஸுக :-) happy new year manivannan

karthikkumar said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா... :) கனவு கன்னிகள் அருமை

இனியவன் said...

உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அரசன் said...

நிறைய அழகிகள் காணலை...

குறிப்பாக மைனா நாயகி ...

இருக்கட்டும் ...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

பார்வையாளன் said...

என் டேஸ்ட்டுக்கு இல்லை

வைகை said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சிவகுமார் said...

>>> நடத்துங்க மணி... நல்லதோர் ஆண்டாக தொடங்கட்டும் 2011!! எல்லா வளமும் பெற வாழ்த்துகள்!!

ஜீ... said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அஞ்சா சிங்கம் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

விக்கி உலகம் said...

உங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆனந்தி..(மதுரை) said...

ஜெனிலியா பிடிக்குமா...கொடுமை தான்...சரி என் சகோ என்பதால் மன்னிக்கிறேன்..:)) Happy new year சகோ...

மதுரை பாண்டி said...

லிஸ்ட் ரொம்ப கம்மியா இருக்கு!!! மைனாக்கும் ஒரு இடம் குடுத்துருக்கலாம்!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena