வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

8.1.11

பாப்பாத்தி அக்கா

                   அந்த செம்மண் சாலையில் புளிதியை கிளப்பியவாறு அந்த மினி பஸ் சென்று கொண்டிருந்தது .அந்த சிற்றுந்துக்குள்  கடைசியில் உள்ளநீளமான  சீட்டிற்கு முன்னால் உள்ள சீட் இல்லாமல் இடம் காலியாக இருந்தது .அந்த இடத்தில் உள்ள  கம்பியில் சாய்ந்தவாறு கண்டெக்டர் டிக்கெட் குடுத்து கொண்டிருந்தார் . சண்முகம் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்திருந்தான் .

" சார் உங்களுக்கு எங்க போகணும் "

" ஒரு சோழவந்தான் " என்றான் சண்முகம்

சன்முகமத்தின் பூர்விகம் சோழவந்தான் தான் . அவன் காலேஜ் படிப்பு முடித்தவுடன் சென்னையில் வேலைகிடைத்தது . பெற்றோர்களையும் தன்னுடன் அழைத்துகொண்டான் .முதலில் அவன் அப்பா மறுத்தாலும் பின்பு பாரலிசிஸ் நோயால் சென்னைக்கே வரவேண்டியதாகி விட்டது . பிறகு அவரும் இறந்து போய் " துக்க வீட்டுல உடனே நல்ல காரியம் நடக்கனும்டா, அப்பதாண்டா  உங்க அப்பா ஆத்மா சாந்தி அடையும் என்று ஆறாவது மாதம் கழித்து தூரத்து சொந்தத்தில் உள்ள சுந்தரேஸ்வரியை அவனுக்கு கல்யாணம் செய்துவைத்து விட்டாள் .
அப்பொழுது அவனுக்கு வயது 25  . ஆயிற்று அந்த தாயும் தூக்கத்திலே போய் சேர்ந்து விட்டாள் .கிராமத்தில் சொந்தம் சொல்லி கொள்ள  என்று ஒரே ஒரு வீடு ஒன்று இருந்தது .இனிமேல் யாரு கிராமத்திற்கு போக போகிறோம் என்று அந்த வீட்டை  விற்று விடுவோம் முடிவிற்கு வந்த  அவன் பால்ய நண்பன் மாரிமுத்து விடம் சொல்லி வைத்திருந்தான் . நீ நேர்ல வந்தா  வீட்டை பேசி முடிச்சிருலாம் உடனே கெளம்பி வான்னு நேற்றிரவு மாரிமுத்து போனில் கூற .அவனும் இரவோடு இரவாக கிளம்பி விட்டான் மதுரைக்கு

" ஏய் பாப்பாத்தி உனக்கு சேர்த்து நானே டிக்கெட் எடுத்துட்டேன் நீ எடுத்துடாத " என்று  பேருந்தினுள் ஒரு குரல் கேட்டது. பாப்பாத்தி இந்த வார்த்தை அவன் நெஞ்சில் முள்ளாய் குத்தியது
பாப்பாத்தி அக்கா நீ எப்படி இருக்கக்கா, பாப்பாத்தி அக்கா ஆஆ
 பேருந்து முன்னோட சண்முகத்தின்   நினைவுகள் பின்னோடியது .
**********************************************************************************************************************************************************
 . பாப்பாத்திஅக்கா  வீடு ஊரெல்லையில் உள்ள  கருப்பனசாமியின் கோயிலில்  இருந்து  ஐநூறுகெஜ தூரத்தில் இருந்தது . சுண்ணாம்பு சுவர்களுக்கு மேலே கிடுகு வேயப்பட்டு  .அது பலநாள் ஆனதால் கன்னங்கரேல் என்றிருந்தது .வெளியே ஒரு பெட்டி கடை மாதிரி திண்ணையில் போடப்பட்டிருந்தது . சண்முகத்திற்கு அங்கு எப்பொழுது சென்றாலும் இலவசமாக பர்பி மிட்டாய் கிடைக்கும் .பாப்பாத்தி அக்காவிற்கு சொந்தம்   என்று சொல்லி கொள்ள ஒரே ஒரு  தாய்வழிபாட்டி இருந்தது .
அந்த பாட்டியும் உயிரை தன் சுருக்கு பை போல்  இழுத்துக்கோ புடிச்சுக்கோ என்று  பிடித்து வைத்திருக்கிறது  . அக்கா காட்டு வேலைக்கும்  , வயல் வேலைக்கும் சென்று அந்த கிழவிக்கு கஞ்சி ஊத்துகிறது . சண்முகம் என்றால் அதுக்கு  ரொம்ப பிடிக்கும் , ஒரு முறை ஊருக்கு கிழக்காமையில் உள்ள பொட்டல் நிலத்தில் பாக்டரி கட்ட பட்டு கொண்டிருந்தது . மணல் லாரி லாரியாக வந்தது . ஊரில் உள்ள  பொட்டு பொடுசுகள் ,வாண்டுகள் , சண்முகம் ,மாரிமுத்து அங்கே ஆட்டம் பொட்டு கொண்டிருந்தனர் . மணலில் பாலம் கட்டி விளையாடி கொண்டிருந்தபொழுது
" டே சம்முகம் ஒரே நாத்தமா  அடிக்கிது நசுக்கி விட்டியா "
" ஏ மாரி சாமி சத்தியமா இல்லடா "
அப்பறம் ஏண்டா இப்படி நத்தம் அடிக்குது " என்றுஇருவரும் எழுந்தார்கள் .
" அடச்சி நீ இவ்வளவு நேரம் அதுமேலே உக்கார்ந்திருக்கடா  அதான்
என்னையெல்லாம் தொட்டுடாத என்னைய தொட்ட ஆயிரம் பாவம் என்னைய தொட்ட ஆயிரம் பாவம் " என்றாவாறு ஓடியேவிட்டான் மாரிமுத்து .
இப்படியே போனால் ஆத்தா வெளக்கமாத்தாலே பூசை நடத்திவிடுமே என்று சிந்தித்தவாறு நடந்துகொண்டிருந்தான் சண்முகம் .நடந்து வந்ததில் பாப்பாத்தி அக்கா வீட்டை சமீபித்திருந்தான்.ஒருவகையில்சண்முகத்தின்  ஆத்தா வழியில்  பாப்பாத்தி அக்கா தூரத்து சொந்தமும் கூட . சரி அக்கா வீட்டிலே கழுவி கொள்ளலாம் என்று அழைத்தான்
" அக்கா ஆஆஆஆஆ "
" ஏ ஏண்டா இப்படி கத்துற ஓம் சத்தத்தில கெழவி செத்துகித்து தொலஞ்சிடபோகுது " என்று கீரையை ஆய்ந்தாவாறு வெளியில் வந்தாள் .கையில் உள்ள சொளகு நிறைய கீரையாக இருந்தது . " என்னடா அந்த ஏட்டு மவன் லெட்டர் குடுத்து அனுப்ச்சானா "
" இல்லக்கா " என்று பின்புறமாக  திரும்பி காட்டினான்
" அட கருமமே எங்கடா போய் இத அப்பீட்டு வந்த "  என்று சொளகை பின்னுக்கு நகர்த்தினாள்
" இப்படியே நா வீட்டுக்கு போனேன் எங்காத்தா மண்டையை ஒடச்சு மாவலக்கு எடுத்துடும்   அதான் கொஞ்சம் தண்ணி குடுக்கா இங்கேயே கழுவிக்கிறேன் "
"  .... கொல்லைக்கு போடா அங்கன தொட்டில தண்ணி இருக்கும் , சுத்தியே வா ,வீட்டுக்குள்ள வந்துடாத
அவன் டவுசரில் இருந்த பம்பரகட்டையை எடுத்து ஓரமாக வைத்து விட்டு கழட்டி அதை சுத்தம் செய்ய சென்ற பொழுது " டே வெளங்காதவனே எவனோ இருந்தத ஊங் கையாள தொட போறீயே வெலகு நா தொவச்சு குடுக்கிறேன் "  என்று காலாலே மிதித்து சுத்தம் செய்து பின்பு நன்றாக துவைத்து குடுத்தாள்
.
" டே  நீ பம்பரம்லாம் விடுவீயா எனக்கு சுத்தி கைலஎடுத்து  குடுடா "  அவனும் ஐந்தாறு முறை  சுற்றி கையில் லாவகமாக எடுத்து அக்காகையில்  எடுத்து குடுத்தான்

" அப்பறம் நீங்க  பட்டனத்து காரைங்க விளையாடுவாங்களே அது பேரு கூட ஆங் கிரிக்கெட்டு அதலாம்  விளயாடமாட்டீங்களா "  என்றாள்

" விளையாடுவேன்க்கா அத வெளையாடுரப்ப எங்க ஆத்தா ஒரு தடவ  பாத்துடுச்சு அடி வெளுத்துடுச்சு  எங்கய்யன் கிட்ட சண்டைக்கே போய்டுச்சு "

" எதுக்குடா "

" நீ செஞ்சுகுடுத்தியே ஒரு கட்ட அத எங்க வச்சு ஆட்டுறான் தெரியுமா
உயிர்நாடிக்கிட்டயா நானே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு ஆம்பிள பிள்ளையை பெத்துவைச்சிருக்கேன் அவனுக்கு மட்டை அடிக்கிறதுக்கு கட்ட செஞ்சுகுடிக்கியோ கட்டேல போரவனேனு   சொல்லி  சண்டைக்கே போய்டுச்சு ,அந்த பேட்டு கட்டையும் அடுப்புல வச்சு எருச்சுடுச்சு "

பாப்பாத்தி அக்கா விழுந்து விழுந்து சிரித்தாள் .பின்பு தலையை  வருடி குடுத்தாள் .
" சாப்பிட்டியா " என்றாள் இல்லை என்றவுடன் " கம்மங்கூழு சாப்பிடுறீயா கரைச்சு கொண்டுவர்றேன் " சண்முகம் தலையாட்டினான்
கடைசியாக அவன் கிளம்பி செல்லும் பொழுது " அந்த ஏட்டு மவன் உன்கிட்ட லெட்டர் குடுத்துவிடைளையாடா " என்றாள்
**********************************************************************************************************************************************************
   
'ற்றியோம் ற்றியோம் ற்றி சத்தியம் நீயே தருமத்தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே ஏ ஏ ' என்று சின்ன  சந்தினுள்  குழாய் ஸ்பீக்கரில் பாட்டுஅலறலாய்  கேட்டுக்கொண்டு இருந்தது .யாருடைய வீட்டிலாவது இருக்கிற  சின்ன பொண்ணுக உட்கார்ந்திருக்கனும் .

" சம்முகம் அவன் கட்டை பாதிதூரம் வந்துடுச்சு இன்னும் கொஞ்சம்தான் ஆக்கர் பார் வந்துடும் "  என்றான்  மாரிமுத்து
சண்முகம் தன் கண்ணிற்கு நேரை பம்பரக்கட்டையின் ஆணியை வைத்திருந்தான் .அதன் வழியாக அந்த மண் தரையில் இருந்த பம்பரக்கட்டையை கூர்மையாக  குறிபார்த்தான் .விர்ர்ர்ர்ர் என்று பம்பரம் வெகு அனாயசமாக சாட்டையில் இருந்துஉருவி அந்த பம்பரக்கட்டையை அடித்து தள்ளியது . மீண்டும் சுற்றிகொண்டிருந்த பம்பரத்தை கைகளில் லாவகமாக  எடுத்து மோதசெய்து செய்து அந்த பம்பரக்கட்டையை கோட்டிற்கு அங்கிட்டு தள்ளினான்

மாரிமுத்து துள்ளி குதித்தான் .நேற்று ஆக்கர் பார் விளையாட்டில் மாரிமுத்து  கட்டையை உடைத்த சிவானாண்டி கட்டையை இன்று அவனது நண்பன்  உடைக்கபோகிறான்  என்றவுடன் அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை . சிவனாண்டி கதறி  அழ .சண்முகம் ஆக்கர் அடித்து பின்பு ஒரு பெரிய கல்லை எடுத்து சரியாக அவன் கட்டையை இரண்டாக  உடைத்த பொழுது .

" டே சம்முகம் வாடா இங்கே " ஏட்டு மகன் மோகனசுந்தரம் அழைத்தான். சோழவந்தான் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக வேலைபார்க்கும் செல்லமுத்துவின் மூத்த மகன் தான் இந்த மோகனசுந்தரம் .எப்படியோ மதுரை சரஸ்வதிநாரயணன் கல்லூரியில் படித்து முடித்து விட்டு .அதை வைத்து சப் -இன்ஸ்பெக்டர்  தேர்வு  எழுதி ரிசல்ட்க்காக காத்துகொண்டிருக்கிறான் .

சண்முகத்திற்கு இது அரபரிட்ச்சை லீவு . ஐந்தாம் வகுப்பு படிக்கிறான் .
" வாடா சண்முகம் , என்னடா அண்ணே கூப்பிட்டு அனுப்பினேன் வரவே இல்லை " என்று அவனை தாஜா செய்வது போல் கேட்டான்
" உன் கூடவே பேச கூடாதுன்னு பாப்பாத்தி அக்கா சொல்லிருக்கு "
மோகனசுந்தரம் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு " என்னடா நீ உதவாம எங்களுக்கு வேற யாருடா உதவுவா .இந்த லெட்டெர மட்டும் அவகிட்ட குடுத்திடு அது போதும் எனக்கு , இந்த அஞ்சு ரூவா வச்சுக்க "  அஞ்சுருவாயா ஆஅ என வாய்பிளந்தான் சண்முகம் சரியென்று ஒத்துகொண்டான்
**********************************************************************************************************************************************************
பாப்பாத்தி அக்கா வீட்டு வாசலில்  கோழி ஒன்று தன் குஞ்சுகளுடன் எதையோ கொத்தி தின்று கொண்டிருந்தது . இவன் குஞ்சுகளை தூக்க வந்திருக்கிறான் போல என்று நினைத்து அவன் காலில் பாதத்திற்கு மேலே  கொத்தியது
ஆஆ வென அலறியவாறு வீட்டிற்குள் ஓடினான் .கிழவி ஒரு ஓரமாக சுருண்டு படுத்திருந்தாள் .அக்கா உலை வைப்பதற்காக அரிசி புடைத்து கொண்டிருந்தாள் 

" அக்கா ஊம் வீட்டு கோழி என் காலிலே கொத்திடுச்சு " என்று மெல்லிய கண்ணீருடன் கூறினான்

" நீ குஞ்சகள தூக்கினியா "

" இல்லை "
" பாரு ஒரு நாள் இல்ல ஒருநாள் அந்த கோழி அடிச்சு கொழம்பு வச்சு திங்கபோறேன் " என்று கூறினான்

" அதுக்கு தாண்டா வளக்கிறேன் இன்னைக்கி அடிச்சு தின்றுவோமா " என்றாள்

 " சரி அக்கா நா போய் எங்க ஆத்தா கிட்ட சொல்லீட்டு வந்துடுறேன் என்று வெளியில் ஓடியவன் ஓடியவேகத்திலே  திரும்பி வந்தான் .வந்து " ஏட்டு மகன் லெட்டர் குடுத்தாங்க அக்கா " என்று அவளிடம் குடுத்து விட்டு ஓடியேவிட்டான்
 அந்த கடிதத்தை படித்து விட்டு கசக்கி  அப்படியே அடுப்பில் போட்டு எரித்தாள்.
**********************************************************************************************************************************************************
போனவன் அவன் ஆத்தாவுடன் திரும்பி வந்தான் .

" வாங்க சித்தி " என்றாள் அக்கா

" எண்ணத்தா எப்படி இருக்க இந்த லெக்குல இருக்கேனுதான் பேரு வீட்டு பக்கம் எட்டி பாக்கமாட்டேங்கிரே "

" வரேன் சித்தி "

" கோழி அறுத்து கொழம்பு வைக்க போறேன்னு சொன்னான் அதான் இந்த மொளகா பொடி கொண்டுவந்தேன் .அப்படியே இவன் இன்னைக்கு ரவைக்கு இங்கே இருக்கட்டும் .அவரு சொந்தத்தில ஒரு கெழவி தவறிடுச்சு .போய் எழவு  கேட்டுட்டு ரவைக்கு அங்கயே தங்கீட்டு  விடியமுன்னே வந்துடுறேன் "

" அதுக்கென சித்தி இருந்துட்டு போகட்டும் "

" உங்க ஆத்தா இருந்தா உனக்கு ஒரு கல்யாணத்த பன்னி பேரன் பேத்தி பார்த்திருப்பா  ம்ம்ம் "

" பச் "

" சரி நா வரேன்த்தா . டே அக்கா   கோழி  கொழும்பு வச்சுகுடுக்கிரானு வளச்சு மாட்டீடாத .அப்பறம் சூட்ட கெளப்பி விட்டுடும் " என சண்முகத்தை எச்சரித்து சென்றாள்
சண்முகம் ரசித்து சாப்பிட்டான் வாஞ்சையாக அவனுக்கு  கொழுப்பில்லாத இளம் கறியாக  எடுத்து வைத்தாள் . பின்பு அவன் வெளியில் வெளையாட சென்றவுடன் இவள் சாயங்காலம் போல காட்டுக்கு சென்றாள்
**********************************************************************************************************************************************************
இரவு முழுவதும் அக்கா அழுது கொண்டே இருந்தாள் .சண்முகத்திற்க்கும் அது தெரிந்தது

" ஏன்க்கா அழுகுர "

" ஒன்னும் இல்லடா நீ தூங்கு "

" அந்த ஏட்டு மவன் ஏதாவுது சொன்னானாக்கா "
" ஒண்ணுமில்ல  நீ தூங்கு " என்றவுடன் அவனும் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டான் .அக்கா தன்வயிற்றில் கையை வைத்தவாறு அழுது கொண்டே அப்படியே தூங்கி போனாள்

சண்முகத்திற்கு முழிப்பு வந்த போது .அவனை பாப்பாத்தி அக்கா தூக்கி கொண்டு அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி கொண்டிருந்தாள் .இவன் சுதாரிக்கும்  முன்னே அக்கா அவனை ஒரு கையால் பிடித்து கொண்டு மறுகையால் ஒரு இரும்பு கம்பு உதவியுடன் அந்த வீட்டில் இருந்த ஒரே ஜன்னலை உடைத்து அவனை அதுவழியாகவீசினாள் .

அவன் மண்ணில் விழுந்து உருண்டவுடன் தான் தெரிந்தது வீடு தீ பிடித்து  பத்தி எரிகிறதென்று . இவனும் அங்கிட்டு இங்கிட்டு கத்தி கொண்டு " அக்கா அக்கா " என ஓடினான் .ஆனால் அக்காவால் வெளியே வரமுடியவில்லை .அந்த கிழவி கட்டையோடுகட்டையாக எப்போதோ  எரிந்திருக்கவேண்டும் .
**********************************************************************************************************************************************************
 மூன்று நாள் கழித்து ஏட்டு மகன் மோகனசுந்தரத்தால் சண்முகம் அழைக்கபட்டான்
கூட்டாளிகளுடன்   பீடி புகைத்து கொண்டிருந்தான்

" என்னனே " என்றான் சண்முகம்
பளீரென்று அவனது தாடையில் மோகனசுந்தரத்தின்  கூட்டாளிகளில்  ஒருவன் வெடித்தான்

" டே நாதான் இதுநாள் வரைக்கும் பாப்பாத்திக்கு லெட்டர் குடுத்திருக்கேன்னு வெளியில சொன்னேன்னு வச்சுக்க  உம் கழுத்த கரகரனு அறுத்து அப்படியே காக்கைக்கு போட்டுடுவேன் . அப்படியே எந்திரிச்சு  ஓடியே போய்டு " என்று ஏட்டு மகன் கூறினான்

சண்முகம் எழுந்து மண்ணை தட்டாமல் அழுது கொண்டே அவர்களை திரும்பி பார்த்துக்கொண்டே சென்றான்  .அய்யன்கிட்டே சொல்லணும் என்று மனத்திற்குள் நினைத்தான்

" என்னடா மோகனு அடுத்து யாரு "

" அடுத்து நம்ம கோயில் பூசாரி மவ உக்கத்துட்டாலாமுள்ள என் அடுத்த குறி அவதான் "

" இவள எதுக்கு கொன்ன "

" என் வயித்துல குழந்தைய குடுத்துபுட்டு  கட்டிக்க மாட்டீங்கிரீயோனு சொல்லி சங்குல கருது அறுக்கிற கத்திய  வச்சுபுட்டா காண்டாரோளிமவ , அப்பயே முடிவு பண்ணிட்டேன் ராவோடராவா இவள உள்ள வச்சு  குடுசையோட எரிச்சுப்புடனும்னு "

" அந்த சுள்ளானும் உள்ளதாண்டா இருந்தான் எப்படி தப்பிச்சானு தெரியல . அப்படியும் ஊருக்குள்ள வத்திவச்சான வையேன் அடிச்சு சாவடுச்சுபுட்டு  முனி அடிச்சுடுச்சுனு புரளியை கிளப்பி விட்டுடுவோம் . குடுசை பத்தி எரிஞ்சப்ப எவனோ பீடிய பாத்த வைச்சுபுட்டு தீகுச்சிய அமத்தாம தூக்கி போட்டுட்டான்போலனு புரளியை கிளப்பீவிடலையா " என்று காரி துப்பினான்

கீழே விழுந்து எழுந்த பொழுது தன்னுடைய டவுசர் பாக்கெட்டில் இருந்த  பம்பரம் விலுந்துருக்கனும் என்று  எண்ணி அதை எடுக்க வந்த சண்முகம் இவை அனைத்தையும் கேட்டான் .அவனுடைய கால் வழியாக ஒன்னுக்கு ஒழுகி  கொண்டிருந்தது . அப்படியே ஓடினவன் தான்
" எலேய் சண்முகம் எதுக்குடா  இப்படி சமஞ்ச கொமரிமாறி  வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கெடக்க " என்று அவன் ஆத்தா கூறி கொண்டிருந்தாள்
**********************************************************************************************************************************************************
ஸ்ஸ்ஸ்ஸ் மினிபஸ்  நின்றது
" சோழன்வந்தான்லாம் எறங்குங்க "  கண்டக்டர் விசில் வாயோடு கூறிகொண்டிருந்தான்
" வாடா சண்முகம் வீட்ல பொண்டாட்டி புள்ளைங்கலாம்   நல்லாருக்காங்களா "
என்று பேசி கொண்டே வந்தான்

" அப்பறம் கேக்கனம்னு நெனைச்சுக்கிட்டே இருந்தேன்  "
" அந்த மோகன சுந்தரம் அதாண்டா நம்மள சின்ன வயசுல மிரட்டுவான்ல அவன் இப்ப தமிழ் நாட்டுக்கே கூடுதல் டி .சி .பி யாம்ல அப்படியா " என்றான் மாரிமுத்து 

இவன் கண்ணீரை பார்த்துவிட்டு ரெம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கான்ல ஊரு மன்ன மிதிச்சோன அவனுக்கு பழைய  ஞாபகம் வந்துடுச்சு போல என்று நினைத்து கொண்டான்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன் நா.மணிவண்ணன் 

27 கருத்துகள்:

test said...

நல்லா இருக்கு பாஸ்! அதுவும் அந்தக் கிராமத்து ஸ்டைல் எழுத்து சூப்பர்!

karthikkumar said...

கதை அருமை பங்கு.....:)

Unknown said...

கதை அருமையா இருக்கு நண்பா, நான் கூட தலைப்ப பார்த்ததும் கிளுகிளுப்பா இருக்குமோன்னு நினைச்சேன் :-)

ஆனந்தி.. said...

சகோ...கிராமத்து ஸ்டைல் இல் பட்டய கிளப்புரிங்க...எனக்கும் டைட்டில் பார்த்தவுடனே..ம்ம்...கொஞ்சம் யோசனையோட தான் படிச்சேன்...:)))நல்லா இருக்கு சகோ...

குறையொன்றுமில்லை. said...

கதை ரொம்ப நல்லா இருக்கு கிராமத்துஸ்டைல் எழுத்து நல்லவே வருது உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

Unknown said...

@ஜீ...

பாராட்டுக்கு மிக்க நன்றி ஜயோ ஜி

Unknown said...

karthikkumar said...

கதை அருமை பங்கு.....:)


நன்றி பங்கு

Unknown said...

@இரவு வானம்

நண்பா எப்பவுமே ஒரு டைப்பான கதை எழுதுருவன் நினைச்சுட்டீங்களா

Unknown said...

@ஆனந்தி..


என்ன சகோ நீங்களுமா அப்படி நினைக்கிறது . நாமா லாம் ஒரே ஊர் காரவுங்க இல்லையா .பலதளங்களில் எழுதவேண்டும் என்று ஆசை அவ்வளவுதான்

Unknown said...

Lakshmi said...

/// கதை ரொம்ப நல்லா இருக்கு கிராமத்துஸ்டைல் எழுத்து நல்லவே வருது உங்களுக்கு. வாழ்த்துக்கள்.///

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லக்ஷ்மி மேடம் அவர்களே .தொடர்ந்து வாசியுங்கள் . நன்றி

pichaikaaran said...

எழுத்து நடை சூப்பர்... எதிர்பாராத இனிய ட்ரீட்

Unknown said...

@பார்வையாளன்

நன்றி

ராகவன் said...

அன்பு மணிவண்ணன்,

ரொம்ப நல்லாயிருக்கு... மணிவண்ணன்... தொடர்ந்து எழுதுங்க...

நம்ம ஊரு எழுத்து நல்லாயிருக்கு...

அன்புடன்
ராகவன்

Unknown said...

@ராகவன்


அண்ணே உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றினே

ஆனந்தி.. said...

//@ஆனந்தி..


என்ன சகோ நீங்களுமா அப்படி நினைக்கிறது . நாமா லாம் ஒரே ஊர் காரவுங்க இல்லையா .பலதளங்களில் எழுதவேண்டும் என்று ஆசை அவ்வளவுதான்//

சே..சே..அப்டிலாம் என் சகோவை விட்டு கொடுப்போமா...:)) டைட்டில் தான் எஸ்.ஜே.சூர்யா,பாக்யராஜ் டைப் இல் இருப்பதை பார்த்து கொஞ்சம் ஏமாந்துட்டேன் சகோ..:)) cool :))

Madurai pandi said...

கதை நல்லா இருக்கு கதாசிரியர் அவர்களே!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Unknown said...

நண்பா.. மிக அருமையான கதை.. படிக்க படிக்க கஷ்டமாயிடுச்சு..

Unknown said...

டைட்டில் வேற வைச்சிருக்கலாம்.. :-)

Anonymous said...

//எவரும் நம் எதிரி அல்ல அறிமுகம் இல்லா நண்பர்களே// பொய் சொல்லாதீங்க மணி..போன வாரம் ஹோட்டல்ல நம்ம ரெண்டு பெரும் சாப்டும்போது,அந்த எதிர்கட்சி எம்.எல்.ஏ கூட நீங்க சண்டை போட்டதை மறந்துட்டீங்களா...

Philosophy Prabhakaran said...

இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...

நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

Unknown said...

மதுரை பாண்டி said...

கதை நல்லா இருக்கு கதாசிரியர் அவர்களே!!!


வாழ்த்துக்கு நன்றி நண்பா

Unknown said...

@ஆனந்தி.

ok ok சகோ

Unknown said...

@பதிவுலகில் பாபு

பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா . இனிமே டைட்டில் இது போல் வைக்க மாட்டேன் . .ஆனால் தலைப்புதான் ஒரு படைப்பின் ஹிட்சை தீர்மானிக்கிறது .அதுவும் என்னை போல் பிரபலமாகாத பதிவர்கள் தலைப்பை காரணம் காட்டிதான் அதிகம் பேரை வர வைக்க வேண்டி இருக்கிறது

Unknown said...

@சிவகுமார்(சென்னை)


ஏன் இந்த கொலைவெறி

Philosophy Prabhakaran said...

மணி... அவ்வப்போது நீங்கள் எழுதும் சிறுகதைகள் ஆச்சர்யப்படுத்துகின்றன... கதையும் எழுத்துநடையும் அருமை... அந்த புகைப்படம் கூகிளில் இருந்து சுட்டது போல தெரியவில்லை... உண்மையில் கதையின் நாயகி அவர்தானோ...

Unknown said...

@Philosophy Prabhakaran


பாராட்டிற்கு மிக்க நன்றி .அந்த புகைப்படம் உண்மைலே கூகுளில் இருந்து சுட்டதுதான்

Unknown said...

//ஆனால் தலைப்புதான் ஒரு படைப்பின் ஹிட்சை தீர்மானிக்கிறது.//
உண்மை தான்... தங்கள் வலைப்பூவின் பெயர் கூட அப்படித்தான் ஈர்க்கிறது. இந்த பதிவின் தலைப்பு வேறு திசைக்கு இழுத்துச்செல்வதை தவிர்த்திருக்கலாம்.

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena