வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

20.1.11

என்னது........கவிதையா ?

ஆடு -ஓட்டு  :

போடுங்கம்மா ஓட்டு                                        
-------------------
சின்னத்தை பார்த்து
போடுங்கம்மாஓட்டு 

பண்டைய கால
பண்ட பரிமாற்று முறை
இன்றைய நவீன  சூழலில்
புதிய பரி'நாமமாய்'

 அண்ணே 
உங்க குடும்பத்துக்குத்தானே                                        
எங்க மொத்த 
ஓட்டும் 

கரெக்டாத்தான்யா சொன்னான் 
கசாப்பு கடகாரேன்
ஆடு வெட்ரவணத்தான் 
நம்புமாம்ல 


பாவங்கள் :

வானம் வசைபாட 
ஆரம்பித்தது 
மேகம் மின்னலிடம் 
கோபித்தது                                                             

' என்னையே மீறி 
செயல்படுகிறாயே '

மின்னல் உரைத்தது 

' எமனிற்கு  எவிடென்ஸ் 
சேகரிக்கிறேன் '


உயரம் :

 ' உயர உயர பறந்தாலும் 
ஊர்க்குருவி பருந்தாகாது '
எகத்தாளமிட்டது                                                                 
எவரெஸ்ட்

' செல்லாது 
செல்லாது '
வீராப்பு பேசியது 
விண்ணைமுட்டும் 
விலைவாசி  

  




இங்கிதம் :

' வேண்டாம் ' என்றாள் 
' வேண்டும் ' என்றேன் 
' ச்சிய் ' என்றாள்                                              
' ப்ச் ' என்றேன் 

' இச் ' என்றோம் 

' ச்சே நீங்க ரொம்ப 
மோசம்பா '
மேகத்திற்குள் ஓடி 
ஒழிந்தது
நிலவு


டிஸ்கி : அது என்னமோ கவிதை எழுதனும்னு நெனச்சாலே நிலவு ,வானம் ,மேகம்னு  எழுதுறோமே ஏன் ?


                                                                                                       நட்புடன் நா.மணிவண்ணன்

39 கருத்துகள்:

karthikkumar said...

' உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது '

எகத்தாளமிட்டது
எவரெஸ்ட்

' செல்லாது
செல்லாது '
வீராப்பு பேசியது
விண்ணைமுட்டும்
விலைவாசி ///
நச்சுன்னு இருக்கு நண்பா... :)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அனைத்தும் அருமை ......

KANA VARO said...

அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

இரண்டாவதும் மூன்றாவதும் செம சூப்பர்... முதலாவது மட்டும் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை... ஒருவேளை புரியவில்லை போல... நாலாவது கவிதை ச்சீ...

வேறு ஏதாவது தலைப்பு வைத்திருக்கலாம்... உதாரணம்: மணியின் மணியான கவிதைகள்

Anonymous said...

//அது என்னமோ கவிதை எழுதனும்னு நெனச்சாலே நிலவு ,வானம் ,மேகம்னு எழுதுறோமே ஏன்?//
அதானே, அடுத்த முறை ஸ்பெக்ட்ரம், சட்டசபை, வட்ட செயலாளர் அப்டின்னு புதுசா எழுதுங்க மணி.. தைரியம் இருந்தா எங்க சிங்கம் மணி மேல கை வைங்க பாப்போம்!!

ஆனந்தி.. said...

/போடுங்கம்மா ஒட்டு
-------------------
சின்னத்தை பார்த்து
போடுங்கம்மா ஒட்டு//

சகோ...இந்த ஒட்டு மட்டும் திருத்திருங்க...

வித்யாசமா ட்ரை பண்ணிருக்கிங்க...பரவால கதை..கவிதை னு கலந்து வூடு கட்ட்ரிங்க:))

Unknown said...

//அது என்னமோ கவிதை எழுதனும்னு நெனச்சாலே நிலவு ,வானம் ,மேகம்னு எழுதுறோமே ஏன் ?//

ஏன்னா இதுக எல்லாம்தான் சைலண்டா அமைதியா இருக்கும், வேற ஏதாவது பத்தி எழுதணீங்கன்னா வயலண்ஸ் ஆகிரும் உங்க கவிதையை பார்த்து....
சும்மா சொன்னேன் அனைத்தும் அருமை, மணியின் மணியான கவிதைகள், அடுத்து அப்படியே டாஸ்மாக் பத்தியும் ஒன்னு எடுத்து விடுங்க, வாசகர் வேண்டுகோள் :-)

பாலா said...

// இங்கிதம் :

காலங்காத்தால ஏன் இப்புடி சூட்ட கெளப்புறீங்க?

ஹி ஹி நல்லாத்தான் இருக்கு.

Madurai pandi said...

//இங்கிதம் :

' வேண்டாம் ' என்றாள்
' வேண்டும் ' என்றேன்

' ச்சிய் ' என்றாள்
' ப்ச் ' என்றேன்

' இச் ' என்றோம்

' ச்சே நீங்க ரொம்ப
மோசம்பா '
மேகத்திற்குள் ஓடி
ஒழிந்தது
நிலவு



இந்த கவிதை சூப்பர்!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

அஞ்சா சிங்கம் said...

அப்படி போடு அருவாள ,,,,,,,,,,

நீங்களும் ஜிப்பா போடா ஆரம்பிச்சிடீங்க போல ...

Unknown said...

super

வாழ்த்துக்கள்

Unknown said...

@karthikkumar


நன்றி பங்கு

Unknown said...

@ராம்ஜி_யாஹூ

முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி சார்

Unknown said...

@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அனைத்தும் அருமை ......///


நன்றி உலவு

Unknown said...

@KANA VARO


முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி சார்

Unknown said...

@Philosophy Prabhakaran

வேறு ஏதாவது தலைப்பு வைத்திருக்கலாம்... உதாரணம்: மணியின் மணியான கவிதைகள்///

வைத்திருக்கலாம் ஆனா எனக்கே இது கவிதையானு டவுட் டா இருக்கே . வாழ்த்துக்கு நன்றி

Unknown said...

@சிவகுமார்

சார் எனக்கு செய்வினை கூட வைங்க ஆனா இப்படிலாம் மாட்டிவிடாதீங்க . பயமாருக்க்ல

Unknown said...

@ஆனந்தி..

ஆமாம் சகோ . சிறிது கதை குதிரை களைப்புருவது போல் இருந்தது அதனால் சற்று கவிதை குதிரையில் சவாரி செய்தேன்

Unknown said...

@இரவு வானம்


டாஸ்மாக் பத்தியா? ட்ரை பண்றேன் .நமக்கு எப்பவாது இது மாதிரி கேனத்தனமா தோணிடும் . ஆனா யோசிச்சா தோணாது

Unknown said...

@பாலா

ஹி ஹி . வாழ்த்துக்கு நன்றி சார்

Unknown said...

@Madurai pandi


அப்ப மிச்ச கவிதை ? கவிதை இல்லையா ?

Unknown said...

@அஞ்சா சிங்கம்

வெறும் ஜிப்பா மட்டும்தான் ,ஜோல்னா பைய் கிடையாது

Unknown said...

@விக்கி உலகம்

நன்றி சார்

test said...

கலக்கிட்டீங்க மணி!
//கசாப்பு கடகாரேன்
ஆடு வெட்ரவணத்தான்
நம்புமாம்ல//
சூப்பர்!

Unknown said...

@ஜீ...


நன்றி ஜி

Unknown said...

@பார்வையாளன்

நன்றி சார்

சாமக்கோடங்கி said...

போடுங்கம்மா ஓட்டு ...

நீங்கள் ஒட்டு என்று எழுதி இருக்கிறீர்கள்..


ஆனாலும் கவிதைகள் அழகு..

Philosophy Prabhakaran said...

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

சக்தி கல்வி மையம் said...

இது தான் உங்க தளத்திற்கு முதல் வருகை..
கவிதைகள் அருமை..

பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! அஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க..

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_24.html

இனி தினமும் வருவேன்.

சி.பி.செந்தில்குமார் said...

>>>>
டிஸ்கி : அது என்னமோ கவிதை எழுதனும்னு நெனச்சாலே நிலவு ,வானம் ,மேகம்னு எழுதுறோமே ஏன் ?


ha haa ha KALKAKAL

Unknown said...

//டிஸ்கி : அது என்னமோ கவிதை எழுதனும்னு நெனச்சாலே நிலவு ,வானம் ,மேகம்னு எழுதுறோமே ஏன் ?//
ஆமா இல்ல...

FARHAN said...

வேண்டாம் ' என்றாள்
' வேண்டும் ' என்றேன்

' ச்சிய் ' என்றாள்
' ப்ச் ' என்றேன்

' இச் ' என்றோம்

' ச்சே நீங்க ரொம்ப
மோசம்பா '
மேகத்திற்குள் ஓடி
ஒழிந்தது
நிலவு


நா வேறென்னமோ நெனசிடன்பா

மதுரை சரவணன் said...

கவிதை அருமையாக இருக்கு... வாழ்த்துக்கள்

Riyas said...

கவிதை நல்லாயிருந்தது

Unknown said...

@சாமக்கோடங்கி

@sakthistudycentre-கருன்

@சி.பி.செந்தில்குமார்

@malgudi

@FARHAN

@மதுரை சரவணன்

@Riyas

அனைவரது வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்திற்கும் நன்றிகள்

cheena (சீனா) said...

அன்பின் மணி வண்ணன் - கவிதைகள் நல்லாவே இருக்கு - ஆமா இன்னிக்கு நேசமித்திரனிடம் கவிதையப் பத்திப் பேசவே இல்லை - ஏன் ??? - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் மணி வண்ணன் - கவிதைகள் நல்லாவே இருக்கு - ஆமா இன்னிக்கு நேசமித்திரனிடம் கவிதையப் பத்திப் பேசவே இல்லை - ஏன் ??? - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

arasan said...

தல அருமை கவிதை..

goma said...

“செருப்பு பிஞ்சுடும்”ன்னு சொல்லாது ,
நிலவு மறையும்
மேகம் கலையும்
வானம் இருளும்

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena