வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

17.4.11

நித்யா -சில நினைவலைகள் -2

                  நித்யா மீதான வெறுப்பு கூடிகொண்டே தான் சென்றது ,அன்று அதிகாலையில் பால் வாங்க சென்றேன் ,அவள் வீட்டை கடந்து தான் செல்ல வேண்டும் ,நித்யாவின் அம்மா வாசலை பெருக்கி கோலமிட்டு கொண்டிருந்தார் ,திரும்பி வரும்போது கோலத்தை சிறிது காலால்  மிதித்து  அழித்தேன் சற்று தள்ளி  ,ஏதோ ஒரு வாகனத்தால் நசுக்க பட்டு இறந்து கிடந்தது ஒரு தவளை ,தூக்கினேன் ,ஓடு போல் இருந்தது , சுற்றும் முற்றும் பார்த்தேன் . நடு வீட்டில் விழுவதுபோல்  விட்டெறிந்தேன் ,திரும்பிப்பார்க்காமல் ஓடிவந்தேன் வீட்டிற்கு ,நெஞ்சு திக் திக்கென அடித்து கொண்டது ,யாரும் துரத்தி வருகிறார்களோ

ஆட்கள் அதிகமாக இருந்தால் இரண்டு டீமாக பிரிந்துகொள்வோம் 
"அண்ணே நானும் வெளையாட வர்றேனே " என்றான் குட்டி நித்யாவின் தம்பி
"உப்புக்கு சப்பாணியா  சேத்துக்குவோம்   கீப்பிங் நிக்கட்டும் " சேகர்


சரி என்று தலையாட்டினேன் வாடா வா "ரெண்டு டீம்ளையும் மூணுமூணு பால் போடுவோம் "

முதலில் சேகர் டீம் பேட்டிங் செய்தது .அவர்கள் ஆள் அவுட் ஆனபின் .குட்டிக்கு மூணு பால் போட வேண்டும் ,சந்தோசமாக பேட்டை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு  வந்தான் ,குமாரிடம் பந்தை பிடிங்கினேன் " நா போடுறேன் "
முதல் பந்திலே வேகமாக எறிந்தேன் 'புல் டாஸாக' குறிப்பாக 'அந்த'  இடத்தை நோக்கி " அம்மா " என்று இரண்டு கைகளையும் கவட்டைக்குள் அழுத்தி பிடித்து கொண்டு அமர்ந்தான்.பிளாஸ்டிக் பந்தானாலும் வலி அதிகமாகவே இருக்கும்.அனுபவித்திருக்கிறேன் .

" டே ஏண்டா இப்படி வேகாமா எருஞ்ச" ராஜா.
இவை எல்லாவற்றையும் மாடியில் இருந்து பார்த்திருப்பாள் போல
நித்யா வேகமாக வந்தாள் நைட்டியுடன் 'குட்டி குட்டி "
" ஏன் இப்படி வேகமா பந்த   எரிஞ்ச " என்றாள்  என்னிடம்
" ஆங் வெலயாட்டுன அடிபடத்தான் செய்யும் அப்பண்ணா வெலாடா வந்திருக்க கூடாது ,நாங்கலா  அவன கூப்டோம் அவனாதான் 'அண்ணே நானும் வர்றேனே நானும் வர்றேனேனு வந்தான் " என்று அவளை மேலிருந்து கீழாக கண்களை உருட்டி பார்த்தேன்
கணநேர முறைப்புக்கு பின் " எங்கப்பா வரட்டும் " என எச்சரித்தாள்
" ஒங்கப்பா வந்தா மட்டும் " என கூறுவதற்குள் குட்டியை கூட்டிக்கொண்டு சென்று விட்டாள்
" டே ஏண்டா இப்படி பண்ண பாவண்டா சுள்ளானா போயி " ராஜா
" டே நீ போய்டுவ அவுங்கப்பேன் எங்க தாத்தாட்ட போட்டு குடுத்துடுவாண்டா " குமார்
" விடுங்கடா பாப்போம் "
அன்று டியூஷனிலும் அவளை சீண்டி பார்க்க வேண்டும் என முடிவெடுத்தேன்
" டே ஆரிப்பு அன்னைக்க்கெனடானா போட்டு குடுக்கிற "
" எங்க வீட்டுக்கு வந்துடுவேன் சொன்னாங்கடா மிஸ்ஸு"
" ஆங் அப்படியா " கையை மடக்கி விரல் முட்டியால் நடு முதுகில் குத்தினேன் .சில நொடிகள் மூச்சை புடிக்கும் ,திருப்பி அடிக்க மாட்டான் என்று எனக்கு தெரியும் ,அப்படி அடித்தானென்றால் டியூஷன் விட்டு வீட்டிற்கு செல்கையில்


நித்யா புத்தக பையை ஓரமாக வைத்து விட்டு அமர்ந்தாள் பாவடையை மொட்டிங்காலுக்கு கீழ் இழுத்துவிட்டு கொண்டாள் .

" நாளைக்கு யார் யாருக்கு டெஸ்ட் இருக்கு "
" எங்க ரெண்டு பேருக்கும் டெஸ்ட் இருக்கு மிஸ் ஸ்கூல்ல " என்றான் ஆரிப் கையை தூக்கி கொண்டே
" ஒழுங்கா அவன் கூட ஒக்காந்து படி ,மார்க் மட்டும் கம்மியா வாங்கிட்டு வந்த அடி வெளுத்துடுவேன் " என்றார் மிஸ் என்னிடம். எல்லாம் அம்மாவால் வந்தது
" கண்ண மட்டும் விட்டுடுங்க எங்க வேணாலும் அடிங்க ,ஒழுங்காவே  படிக்கிறது இல்ல ஒரே சேட்டை " என்று ஆறாவது படிக்கும்போதே தள்ளி விட்டார் டியூஷன் மிஸ்ஸிடம் அன்று ஆரம்பித்தது . எட்டாவது வந்தும் தொடர்கிறது
நித்யா பிசிக்ஸ் புத்தகத்தை எடுத்து வேகமாக படிக்க ஆரம்பித்தாள் ,இப்போது ஜென்சி வேறு சேர்ந்திருக்கிறாள் ஒன்றாக ஒரே ஸ்கூலில் படிக்கிறவர்கள் ,அவ்வப்போது நித்யா அவள் காதில் ஏதோ கிகிசுக்கிறாள் ,சிரிக்கிறாள்  ,இன்னைக்கெதாவுது செய்யணுமே ,இவளை அழ வைக்கணுமே

" மிஸ் பாத்ரூம் போயிட்டு வந்துடுறேன் மிஸ்  " என்று கூறிவிட்டு வெளியில் வந்தேன் ,ஏழு மணி இருட்டு பரவி இருந்தது ,அவளது பாத அணிகலனை ஒன்றை தூக்கி குப்பை தொட்டிற்க்குள் எரிந்து விட்டு .

"சரி எல்லாரும் கெளம்புங்க " மிஸ்
" தாங்க்கியூ  மிஸ் "
 " மிஸ் என்னோட ஒரு செருப்ப காணோம் " நித்யாவின் குரல் கேட்டது ,நான் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்  ,அவளை அதற்க்கு பின் ஒரு மாதம் கழித்து தான் பார்த்தேன் ,அவளிடம் ஏதோ ஒரு மாற்றம்

                                                                                                               - தொடரும்


12 கருத்துகள்:

தமிழ்வாசி - Prakash said...

தொடர் கதை நல்லா போயிட்டு இருக்கு...

விக்கி உலகம் said...

யோவ் மாப்ள ரொம்ப நல்லவனா இருந்திருக்கய்யா ஹிஹி!

siva said...

மிக யதார்த்த கதை அழகாய் நகர்கிறது வாழ்த்துக்கள் ..

அரசன் said...

செம கலக்கல் ...

! சிவகுமார் ! said...

//அவளை அதற்க்கு பின் ஒரு மாதம் கழித்து தான் பார்த்தேன் ,அவளிடம் ஏதோ ஒரு மாற்றம்//

புது செருப்பு வாங்கிட்டாங்களா..

ஜீ... said...

சொல்லுங்க மணி சொல்லுங்க அடுத்த அடி எங்கே வாங்கினீங்க? ஒரே ஆர்வமா இருக்கு! :-)

ஜீ... said...

கலக்கல்!!!

போளூர் தயாநிதி said...

மிக யதார்த்த கதை அழகாய் நகர்கிறது வாழ்த்துக்கள் ..

இரவு வானம் said...

ஹி ஹி சம்திங் ராங், எனக்கு என்னமோ புரிஞ்சிருச்சு, சரியான்னு தெரியல, நான் போன் பண்ணியே கேட்டுக்குறேன்...

பதிவுலகில் பாபு said...

செமயா இருக்கு நண்பா... ஹா ஹா ஹா.. ஸ்கூல், காலேஜ்ல பண்ணின சேட்டையை எல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்க..

ஆனந்தி.. said...

//டே ஏண்டா இப்படி வேகாமா எருஞ்ச" ராஜா.
இவை எல்லாவற்றையும் மாடியில் இருந்து பார்த்திருப்பாள் போல
நித்யா வேகமாக வந்தாள் நைட்டியுடன் 'குட்டி குட்டி "
" ஏன் இப்படி வேகமா பந்த எரிஞ்ச " என்றாள் என்னிடம்
" ஆங் வெலயாட்டுன அடிபடத்தான் செய்யும் அப்பண்ணா வெலாடா வந்திருக்க கூடாது ,நாங்கலா அவன கூப்டோம் அவனாதான் 'அண்ணே நானும் வர்றேனே நானும் வர்றேனேனு வந்தான் " என்று அவளை மேலிருந்து கீழாக கண்களை உருட்டி பார்த்தேன்//

மணி..இது 7 G /ரெயின்போ காலனி படத்தின் ரீமிக்ஸ் மாதிரியே இருக்கே..:)))))

ஆனந்தி.. said...

தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்..http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_21.html

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena