வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

1.5.11

காதல்

                   உனக்கு தெரியுமா மெர்சி .உன்னை நான் முதன் முதலாய் எப்போது பார்த்தேன் என்று ,அன்று நீ நீலவண்ண சுடிதார் அணிந்திருந்தாய் ,பூ போட்ட வெள்ளை துப்பட்டா ,உனது மேஜை முன்னால் ஒரு திறந்த  காலேஜ் நோட்புக் ,அதில் எதையோ எழுதி கொண்டிருந்தாய் ,என்ன எழுதிகொண்டிருந்தாய் ,உனது பெயர் தானே ,அந்த வகுப்பறையில் ஒரு ஓரமாக அமந்திருந்தாய் ,அருகில் உனது ஆருயிர் தோழி ரோஸ்லின் , அன்று கல்லூரியின் முதல் நாள் முதல் வகுப்பு ,நான் உள்ளே நுழைந்தேன் உனது விழிகளை சந்திக்க போகிறேன் என்று தெரியாமலே ,ஆனால் அப்போது அந்த விழிகள் என்னை ஒன்றும் செய்யவில்லை ,ஆனால் இப்போது ஒவ்வொரு நொடியும் அந்த விழிகள் என்ன இம்சித்து கொண்டிருக்கின்றன
                                         நான் உன்னுடன் பேசிய முதல் வார்த்தையை நினைத்து பார்க்கிறேன் ,என்ன சொல்லு பார்ப்போம் ' ஹலோ ' ஆம் நாம் முதலில் பேசிகொண்டது செல் போனில் தானே ,செல்போனும் இரவும் நம் இரவின் வெறுமையை போக்கின ,அன்று வகுப்பறையில் ஆனந்த் ," நான் மெர்சியிடம் நம்பர் வாங்கினேன் ,எல்லோரிடமும் குடுக்கலாமா என்று கேட்டேன் ,வேண்டாம் என்றாள் ,கடைசியாக உன்னிடம் மட்டும் குடுக்கலாம் என்று கூறினாள் " என்றான் ,நானும் உன் செல் நம்பரை வாங்கி கொண்டேன் ,ஆனால் உடனடியாக உன்னிடம் பேச தயக்கமாக இருந்தது ,ஆனால் என் செல் நம்பரை நீயும் வாங்கிக்கொண்டே என அறிந்து கொண்டேன் ,அப்போது விஜய் டிவியில் 'யாரு மனசில் யாரு ' என்ற ப்ரோக்ராம் மிக பிரபலம்

" ஹாய் " என்று மெசேஜ் அனுப்பினேன்
" நீங்க யாரு " என்று பொய்யாய் நடித்தாய்
" என்னைய உண்மைலே உங்களுக்கு யாருன்னு தெரியலையா "
" தெரியலையே " நடித்ததை ரசித்தேன்
" சரி நாம் அப்படினா ஒரு கேம் வெளியாடலாமா  "
" ம்ம் வெளையாடலாம் "
" ஓகே விஜய் டிவில 'யாரு மனசுல யாரு ' ப்ரோக்ராம் பார்த்திருக்கீங்களா
" பார்த்திருக்கேன் "
" நான் ஒவ்வொரு கேள்வியா அனுப்புறேன் ,நீங்க கண்டுபிடிங்க "
நான் ஒவ்வொரு கேள்வியாக அனுப்பினேன் ,நீ வேண்டுமென்றே தவறான பதிலே அளித்தாய் ,நேரங்கள் நீண்டன ,கடைசியாக 'என் ' பெயரை டைப் செய்து அனுப்பினாய்
நான் " கண்டுபிடுச்சுட்டீங்களே"
நீ " நாங்களும் கண்டுபுடிப்போம்ல "
பின்பு சில மெசேஜ் போக்குவரத்துகளுக்கு பின் " நான் உங்களுக்கு கால் செய்யவா என்றாய் "
" ஓகே "
நீ கால் செய்தாய் ,முதல் ரிங்கிலே எடுத்தேன்  'ஹலோ ' உன்னிடம் பேசிய முதல் வார்த்தை ,இதே ரீதில் அப்படியே நம் நட்பு தொடர்ந்து கொண்டுதானே இருந்தது ,ஆனால் எப்போது காதலாக மாறியது ,உனக்கு தெரியுமா மெர்சி

                       உன்னை நான் எப்போது விரும்ப ஆரம்பித்தேன்  , இப்படி நீ கூறினாயே அப்போதுலிருந்துதான் "  அமைதியா வர்றீங்க அமைதியா போறீங்க ,கடைசி பெஞ்ச்சில  அமைதியா உட்க்கார்ந்திருக்கீங்க எந்த பொன்னுககிட்டையும் போய் வழிய பேசமாற்றீங்க ,அவுங்களா வந்து பேசுனா கூட அப்பிடியான்ட்டு போயிடுறீங்க ,இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு  "

அன்று இரவு நீ எனக்கு இரவு இரண்டு மணிக்கு குட் நைட் மெசஜ் அனுப்பினாய் ,உடனே நான் ரிப்ளை செய்தேன் "உம்மா " என்று ,நீயும் 'உம்மா ' என்றால் என்ன வென்று ரிப்ளை செய்தாய் ,நான் ரிப்ளை செய்யவில்லை ,நீ ரிப்ளை செய்து கொண்டே இருந்தாய்

நான் கடைசியாக உனக்கு ரிப்ளை செய்தேன் அப்படியென்றால் 'முத்தமென்று ' .நீ சிறிது நேரம் கழித்து 'செருப்பு பிஞ்ச்சிடும் ' என்று அனுப்பினாய் ,அதன் பிறகு அந்த இரவு முழுவதும் நீயும் மெசேஜ் அனுப்பவில்லை ,நானும் அனுப்பவில்லை .

                                                             
                                                                                                                           தொடரும் .......




10 கருத்துகள்:

Unknown said...

அடடா மாப்ள உனக்குமா ஹிஹி!

Unknown said...

வடை???

Unknown said...

வடை போச்சே!!!

Anonymous said...
This comment has been removed by the author.
Sivakumar said...

//அதன் பிறகு அந்த இரவு முழுவதும் நீயும் மெசேஜ் அனுப்பவில்லை ,நானும் அனுப்பவில்லை//

ஏன் ரெண்டு பேரும் போன் பில் கட்டலையா?

Unknown said...

ஹி ஹி குட்நைட் சொன்னாலே பதிலுக்கு உம்மாவா??? சரிதான் :-) அது சரி நித்யா, மஞ்சுளா அடுத்தது மெர்சியா நெக்ஸ்ட் என்ன முஸ்லீம் கேர்ளா??

பாலா said...

கேவலப்பட்டு செருப்படி வாங்கிய கதையை தொடரும்னு வேற போட்டிருக்கீங்க... என்ன வில்லத்தனம்.

ரஹீம் கஸ்ஸாலி said...

ok....

arasan said...

ரைட்டு ....

Unknown said...

:)அடுத்த தொடர் எப்போ ?

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena