வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

25.10.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10

இனிய நட்புகளுக்கு வணக்கம்
                                .
                           வம்சி பதிப்பகத்தாரும் எழுத்தாளர் மாதவ்ராஜும் நடத்தும் சிறுகதை போட்டி .மேலதிக தகவலுக்கு http://www.mathavaraj.com/2011/10/blog-post_02.html

தேர்தெடுக்கப்படும் முதல் சிறந்த சிறுகதைக்கு ரூ.10000/-மும், இரண்டாவது சிறுகதைகள் இரண்டிற்கு தலா ரூ.5000/-மும் கொடுக்க வம்சி பதிப்பகம் முன்வந்திருக்கிறது.பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்
 

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலும் அதன் முடிவுகளும் அ.தி.மு.கவிற்கு சாதகமாக அமைந்துள்ளது .பொதுவாக உள்ளாட்சி முடிவுகள் ஆளும் கட்சிக்கே சாதகமாக அமையும் .இந்ததேர்தலிலும் மிக முக்கியமாக  சாதி கட்சிகளை மக்கள் புறம் தள்ளிவிட்டார்கள் .
                                  தி.மு.க பரவாயில்லை பல இடங்களில் முறையே இரண்டு அல்லது மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறார்கள் .இத்தேர்தலில் பலமான வீழ்ச்சியை தேடிகொண்டது காங்கிரஸ்தான்  .இவர்களெல்லாம் தனித்து நிற்ப்பதை பற்றி யோசிக்கலாமா . கலவர பூமியான சாஸ்த்திரிபவனில் வேட்டிகளை அவிழ்த்து பார்த்து உள்ளாடை நிறுவனம் என்னவென்று பரிசோதிப்பதற்கே    அவர்களுக்கு நேரமில்லை .இந்த தொங்கபாலுவின் மூஞ்சியை சும்மாவே பார்க்க முடியாது . இந்த ஈ.வீ .கே .எஸ் .இளங்கோவனுக்கு  மொத்தமாக வாயில் வைத்து அனுப்பினாலும் அடங்கமாட்டிங்கிறாரே .ஆனாலும் அவரது நேர்மையை நாம் பாராட்டியே ஆகவேண்டும் .அவர்கள் தோல்வியை எதிர்பார்த்தார்களாம் .ஆனால் இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லையாம் .இந்த உதிரி கட்சிகளான பா.மா.க ,விடுதலை சிறுத்தைகள் . தங்களது அட்ரஸ்சை தேடுவதாக கேள்வி .ம.தி.மு.க கூட சில இடங்களில் வெற்றிவாகை சூடி உள்ளனர்

சோப்பு : 
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு

                                                         
ஹலோ யாரு அம்மாங்களா ஏதோ  கொஞ்சம் போதைல அப்படி இப்படி பேசிருப்பேன்.அதலாம் மனுசுல வச்சுக்காதீங்க 



























சீப்பு : 
                        தீபாவளிக்கு   வரவிருக்கும்  படங்களில் பெரிதும் எதிரிபார்ப்பை கிளப்பியிருக்கிறது .சூர்யாவின் 'ஏழாம் அறிவு .அதிகமான விளம்பரம் மற்றும் இயக்குனர் முருகதாசின் பேச்சு என கடுப்பை கிளப்பினாலும் .படம் பார்க்க வேண்டும் என்ற சிறு ஆவல் எழுந்திருக்கிறது .

கிராமத்தில் ஒருநாயன் பால் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் .அவருக்கு ஒரு தங்கச்சி .தங்கச்சியின் என்றால் கொள்ளை பிரியம் .இந்நிலையில் அவரின் மாமா பொண்ணு அவர் மேல் உரசி உரசி காதலிக்கிறார் .பறவை காய்ச்சல் போல் மாட்டு காய்ச்சல் என எவனோ ஒருவன் புரளியை கிளப்பி விட .பால் வியாபாரம் படுத்துவிட .தங்கச்சியின் கல்யாணத்திற்குகாக  சேர்த்து வைத்த காசை அவரின் லட்டு போன்ற தங்கச்சியை விட்டுவிட்டு சிட்பண்ட காரர்கள்  பணத்தை தூக்கி கொண்டு ஓட .அவர்களை துரத்தி பட்டணம் வர .அங்கே ஒரு நாயகி,மற்றும் காதல் .வில்லன்கள் என மோதல் , .ஆங்காங்கே நகைச்சுவை நடிகருடன் காமெடி ,அனல் பறக்கும் பஞ்ச வசனங்கள் ,அறிமுக பாடல் ,இரண்டு நாயகிகளுடன் தலா ஒரு பாடல் ,பிறகு ஒரு குத்து பாடல் ,முடிவில் வில்லனை வீழ்த்துவது .என உலக சினிமாவிற்கு போட்டியாக களமிறக்க பட்டிருக்கும்  படம் தான் எங்க இளைய தலைவலி டாகுட்டார் அவர்களின் வேலாயுதம் 

துத்தேறி வேலாயுதமாவது வெங்காயுதமாவது.இருநூறு நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடும் எங்களது பவர்ஸ்டாரின்    லத்திகாவிற்கு கால் தூசி வருமா
கொல கொலயா முந்திரிக்கா எங்க  பவர் ஸ்டார் அடிச்சா நீ கத்திரிக்கா 

இவன் 
பவர் ஸ்டாரின் பரம பக்தன் 

கண்ணாடி :
தீபாவளி   நினைவுகள் :
               பத்துவருடங்களுக்கு முன்னால் தீபாவளி வருகிறது என்றால் ஒரே கொண்டாட்டம்தான் .புத்தாடைகளை அணிந்து தெருவில் நண்பர்களோடு வளைய வருவது .நீண்ட பத்திகளை வைத்து கொண்டு வெடியை பற்றவைக்க பயப்படும் தாவணி ,சுடிதார், மிடி பெண்கள் முன்னிலையில் சரத்தை கையில் புடித்து பற்றவைத்து தூக்கி எறிவது ,ராக்கெட்டை கையில் புடித்து விடுவது என அலும்புகள் செய்வது .புடிக்காதவர்கள் வீட்டில் வெங்காய வெடியை எரிந்து விட்டு ஓடிவிடுவது .இன்னும் சிறுவயதில் அம்மா தீபாவளிக்காக இரண்டு நாட்களுக்கும் முன்னாள் செய்யும் பலகாரங்களை திருடி தின்று காலிசெய்துவிடுவது, தீபாவளி அன்று மட்டும் என்னைதேய்த்து குளிப்பது . .பிறகு கறிகொளம்புடன் இன்ன பிற பலகாரங்களை ஒரு கை பார்ப்பது .பெரிய வெடிகளை காலையில் வெடிப்பது ,புஸ்வானம் ,சங்குசக்கரம் போன்றவைகளை இரவு வெடிப்பது .கொஞ்சம் வெடிகளை மிச்சம் வைத்து பெரிய கார்த்திகை அன்று வெடிப்பது .ம்ம்ம்ம்ம்ம் நினைவுகள் சுகமானவை

 அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் 


கில்மானந்தாஸ் தத்துவம் -003 :

முடியும் என்றால் முயற்சி செய் ....... முடியாதென்றால்    ம்ம்ம் பயிற்சி செய்

16 கருத்துகள்:

சித்திரவீதிக்காரன் said...

தாங்களும் பவர்ஸ்டாரின் பரம பக்தன் என்று அறிந்ததும் பெருமகிழ்வானது. தலைவர் மன்னவனின் கொடி பறக்கட்டும். ஐநூறாவது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் லத்திகா தமிழ்த்திரையுலகில் புதிய சாதனை பல படைக்கட்டும். பகிர்வுக்கு நன்றி.

விச்சு said...

வேலாயுதம் விமர்சனம் சூப்பர்.. தீபாவளி வாழ்த்துக்கள்!!!

Unknown said...

மாப்ள என்றா இது சூலாயுதம் ச்சே வேலாயுதம் பத்தி இப்படி சொல்லிபுட்டே.....இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

பாலா said...

ஆளாளுக்கு வேலாயுதம் பற்றி சொல்லி பீதிய கிளப்புராங்களே.... நண்பா தீபாவளி நல்வாழ்த்துக்கள்

செங்கோவி said...

வேலாயுதம் கடஹி சொல்லி ஆசாத்திட்டீங்க மணி..

தீபாவளி நல்வாழ்த்துகள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ வேலாயுதமும் வெறும் எஸ்.எம்.எஸ்சோட போயிடுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பவர்ஸ்டார் முன்னாடி எல்லாம் வெறும்காயம்தான்.........

சக்தி கல்வி மையம் said...

Nice.,

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

rajamelaiyur said...

சோப்பு சூப்பர்

rajamelaiyur said...

இன்று என் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

Sivakumar said...

தீபாவளி வாழ்த்துகள் மணி. நைட்ல நல்லா சுத்துங்க..

MANO நாஞ்சில் மனோ said...

பவர்ஸ்டாரின் கால் தூசுக்கு சமமாவாரா சின்ன டாகுட்டர்..????

MANO நாஞ்சில் மனோ said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அஞ்சா சிங்கம் said...

இதுக்கு ஏன்யா இவ்ளோ நீளமா கதை சொல்லிக்கிட்டு ?

விஜய் இந்த படத்துல மாறு வேஷம் போட்டு தயாரிப்பாளரை காலி பண்றார் .

அப்படின்னு ஒன் லைன்ல சொல்லிட்டு போகிறது தானே ........................

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena