வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

29.10.11

வெங்காயுதமும் தோலுரியாத பதிவர்களும்

எச்சரிக்கை : இந்த பதிவு தீவிர அஜித் ரசிகனால் எழுத படுவது .அப்பறம் படித்துவிட்டு குயோ மியோ என குதிக்காதீர்கள் .ஏன்னா நாங்கலாம் ஏறுனா ரயிலு எறங்குனா ஜெயிலு .வெளில வரது பெயிலு .

நானும் எழுத வேணாம்ன்னு வேணாம்னு தான் பார்த்தேன் .ஆனா நீங்கதான் வேணும் வேணும்னு எழுத வச்சுட்டீங்க 

சில இடங்களில் நான் குஜியை  (மன்னிக்கவும் டங்கு சிலுப்பிங் போல வெரலு சிலுப்பிங் ப்ரோப்ளம் ) டாக்டர் குஜையை வைத்து ஒரு வரம்பு மீறிய பதிவாகவே எழுதபோகிறேன் .எழுதபோகிறேன் என்பதை விட எழுத வைத்துவிட்டீர்கள் என்பதுதான் உண்மை

தமிழகத்தில் பெய்த பலத்த மழைக்கு ஊடாக வெளியாகி வெற்றிகரமாக படம்பார்க்கவந்தர்களை ஓடவைத்து கொண்டிருக்கும் டாக்டர் குஜய் அவர்களின் வெங்காயுதம் எந்த மாற்று கருத்தும் இல்லாமல்  சக்கை போடு போடுகிறது

மாப்புள எங்க வீட்டு பக்குத்துல உள்ள மாடு சானிய சக்க சக்கையா  போடுதுடா 


யே பதிவு எழுதறப்ப இம்சைய  கூட்டாதடா ,அப்பறம் பேசுவோம் 

டாக்டர் குஜய்   அவர்களின் வெங்காயுதம் படம் வெற்றி பெற விடாமல் செய்வதற்கு பல பதிவர்கள் கங்கணம் கட்டி அலைந்தார்கள் .ஆனால் அவர்களின் நிலைமை இன்று பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது . அவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்  கூறிகொள்கிறேன் .டாக்டர் குஜையை  வைத்து பதிவெழுதி பல ஹிட்ஸ்கள் வாங்கி அதான் மூலம் பணம் சம்பாரித்து, பலவீடுகள் கட்டி ,பல பொண்டாட்டிகளை கட்டி, பல குழந்தைகளை பெற்று, தெருவோர பிச்சை காரர்களிடம் பிச்சை எடுத்து சாப்பிடுகிறீர்கள் .
இந்த நிலை யாரால் உங்களுக்கு வந்தது டாக்டர் குஜய் அவர்களும் அவர்களின் படமும்தான் என்பதை நினைவில் கொள்ள்ளுங்கள்


மாப்ள வயிறு வலிக்குதுடா 


யே சும்மா இருக்க மாட்டியா நீயி .....சும்மருடா பதிவு எழுதிகிட்டுஇருக்கேன்ல

வெங்காயுதம் தமிழ்சினிமாவின் சரித்திர (மன்னிக்கவும்) தரித்திர வருசையில் இனைய போகிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா .அடுத்து டாக்டர் குஜய்   அவர்களுக்கு நடிக்க தெரியாது என்று கூறுகிறீர்கள் .யாரை பார்த்து இப்படி கூறுகிறீர்கள் அவர் நடித்த பல படங்களின் தயாரிப்பாளர்கள் நட்டாத்தில் விட பட்டுளார்கள்,அவர்கள் கையில் நெளிந்த அலுமினிய டப்பா உள்ளது ,அதில் அவ்வப்போது சில்லறைகள் விழுகிறது .இதற்க்கெல்லாம் யார் காரணம் எங்கள் டாக்டர் குஜய் அவர்கள் நடித்ததால் தானே அவர்கள் இநத நிலைமைக்கு சென்றுள்ளார்கள் .

உங்களை போன்ற பதிவர்களுக்கு பாம்பு போல் தோல் உரியவேண்டாம் என்றால் இனிமேல் டாக்டர் குஜையை பற்றி எழுதாதீர்கள் .அதையும் மீறி  எழுதினால் தோல் உரியத்தான் செய்யும் , தோல் உரிவதால் சொரிவீர்கள் ,அதன் மூலம் சிரங்கு வரும் .அப்பறம்  இனிமேல் சிரங்கு வத்தி பதிவர்கள்  என்று அழைக்கபடுவீர்கள் என்று இறுதி எச்சரிக்கையாக கூறி கொள்கிறேன் .கடைசியாக
உங்களுக்கெல்லாம்  ஒன்று சொல்லிகொள்கிறேன்

காரித்துப்புனா  அது   பேரு                                            எச்ச்சி
சாயிங்காலாம் டீ கடைல சுடுவாங்க                       பச்ச்சி
எங்க கணக்கு வாத்தியாரு கைல இருக்கு             குச்ச்சி
எப்பவுமே அவருதான்(குஜய் )  எங்களுக்கு            மச்ச்சி மச்ச்சி மச்ச்சி

டே அவசரமா போகனும்டா 


டே உனக்கு என்னதாண்டா வேணும் எழுத விடாம இம்மசை கூட்டிக்கிட்டு


டே நேத்து ராத்திரி வெங்காயுதம் படம் பார்த்தேண்டா அதுல இருந்தே 


அதுல இருந்தே 

வயிறு ..... இந்த இந்தா வந்து சொல்றேன் 


ம்ம்ம் கக்கூஸ நாரடிக்குரதுக்குன்னே வர்றாய்ங்க.போகாதீங்கடான்னா  கேக்கணும் .இப்ப அனுபவிங்க 
                                                                 

டிஸ்கி : நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது .

12 கருத்துகள்:

"ராஜா" said...

//போகாதீங்கடான்னா கேக்கணும் .இப்ப அனுபவிங்க

பாஸ் இத நீங்க என்கிட்டையும் சொல்லியிருந்தீங்கன்னா நானும் எஸ் ஆகிருப்பேன் .. ஒரு நாதாரி சொல்லி அந்த வெங்காயுதம் படத்துக்கு போயிட்டு பின்னாடி பைல்ஸ் வந்தமாதிரி இப்ப அவதிபடுறேன்...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
தமிழகத்தில் பெய்த பலத்த மழைக்கு ஊடாக வெளியாகி வெற்றிகரமாக படம்பார்க்கவந்தர்களை ஓடவைத்து கொண்டிருக்கும் டாக்டர் குஜய் அவர்களின் வெங்காயுதம் எந்த மாற்று கருத்தும் இல்லாமல் சக்கை போடு போடுகிறது
//

செம நக்கல் உங்களுக்கு

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

வேலாயுதம் – விஜய்க்கு டாப்பா? அல்லது ஆப்பா?

"ராஜா" said...

//மாப்புள எங்க வீட்டு பக்குத்துல உள்ள மாடு சானிய சக்க சக்கையா போடுதுடா

பாஸ் அந்த மாட்டுக்கு பேரு என்ன குஜய்யா...

விக்கியுலகம் said...

மாப்ள என்னய்யா ஆச்சி ஏன் இப்படி ஹிஹி!

தமிழ்வாசி - Prakash said...

யோவ் மணி புட்டு புட்டு வச்சிட்டியே... பாவம்யா டாகுட்டார்ர்ர்ர்ர் குஜய்

♔ம.தி.சுதா♔ said...

பொறுங்க படிச்சிட்டு வாறன்...

♔ம.தி.சுதா♔ said...

அவங்க பாட்டுக்கு நடிச்சிட்டு கோடி கோடியாக அள்ளிக் கொண்டு போயிட்டாங்க... நம்ம பயலுகளோ மாறி மாறி குத்துப்படறாங்களே..

முடியல சகோ.. ஹ..ஹ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

! சிவகுமார் ! said...

நல்லவேல...நான் பவர்ஸ்டார் ரசிகன். எங்க தலைக்கு எதிரி நடிகனே இல்லை.

அப்பாவி தமிழன் said...

ஹி ஹி ஹி மாப்ள செமையா இருக்குயா ?? டாக்டர் குஜிய கூட விட்ரலாம் , ஆனால் இந்த அல்லக்கை பண்ற அலம்பல் இருக்கே சப்பா ... தாங்கலடா சாமி

தமிழினி said...

உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

http://www.tamil10.com/

ஒட்டுப்பட்டை பெறநன்றி

கோகுல் said...

அதென்னது கடைசி படம்?

செம குத்தோ?

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena