வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

26.8.10

எங்க நாடுல இதுல்லாம் சாதார்ணம்பா !

ஐதராபாத்: சட்டத்துறை தொடர்பான தேர்வில் காப்பி அடித்த 5 நீதிபதிகள் கையும், களவுமாக பிடிபபட்டனர். தொடர்ந்து 5 பேரையும் சஸ்பெண்ட் செய்ய ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதி , நேர்மை ,காக்க வேண்டிய நீதிபதிகள் இப்படி நடந்து கொண்ட விதம் ஆந்திரா மாநில சட்டத்துறைக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.
மாஸ்டர் ஆப் லா ( எம். எல்.எம்., ) தேர்வு வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கக்காத்தியா பல்கலை.,யில் நடந்தது. இந்த தேர்வில் வக்கீல்கள், நீதிபதிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு அறையில் இருந்த 5 நீதபதிகள் பிட் அடிப்பதற்காக பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகத்தை தேர்வுத்தாள் கீழ்புறம் வைத்து காப்பி அடித்தனர்.
 
நீதிபதிகள் மல்லுக்கட்டினர்: தேர்வு அறைக்கு திடீரென வந்த கல்வி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 5 நீதிபதிகள் காப்பி அடித்து கையும் , களவுமாக பிடிப்பட்டனர். வினாத்தாள் மற்றும் பிட் அடிக்கும் புத்தகத்தை அதிகாரிகள் பறிக்கும்போது அதனை கொடுக்காமல் நீதிபதிகள் மல்லுக்கட்டினர். தொடர்ந்து அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தேர்வு ஹாலில் பரபரப்பாக காணப்பட்டது.

நீதிபதிகள் யார் ?  யார் ?  : காப்பி அடித்த நீதிபதிகள் யார் என்ற விவரம் வருமாறு: அஜீத்சிம்மாராவ்( சீனியர் சிவில் ஜட்ஜ்) , விஜயேந்திரரெட்டி ( செகண்ட் அடிசினல் டிஸ்டிரிக்ட் ஜட்ஜ் ) , கிஸ்தாப்பா ( சீனியர் சிவில் ஜட்ஜ் ஆனந்த்பூர்) , சீனிவாச்சாரி ( சீனியர் சிவில் ஜட்ஜ் , பப்தாலா), ஹனுமந்தராவ் ( அடிசினல் ஜூனியர் சிவில் ஜட்ஜ் , வாரங்கல்) . இந்த 5 பேரும் காப்பி அடித்த விவகாரத்தின் முதல்கட்ட அறிக்கையை பெற்று ஆந்திர ஐகோர்ட் நீதிபதி நிசார்முகம்மது , நீதிபதிகள் 5 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இந்த விஷயம் குறித்து முழு விவரத்தை தமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நீதி,நேர்மை , கண்ணியம், ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டிய நீதிபதிகள் பிட் அடித்த விவகாரம் குறித்து ஆந்திராவில் ஊர் சிரிக்கிறது . நீதிபதிகள் தேர்வு அறையில் நடந்து கொண்ட விதம் வீடியோ ஆதாரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்:

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena