வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

5.12.10

விஜய் அ.தி.மு.க சேரபோவது ஏன் ?

             இன்னைக்கு காலையில் செய்திதாளில் வந்த செய்தி


காவலன் பட வெற்றிக்காக 300  குடும்பத்திற்கு இலவசமாக அரிசி வழங்கி உள்ளாராம்
 
மதுரையிலும் கோயம்புத்தூரிலும் இவர் படத்தை வெளியிட மாட்டோம் .முன்னர் இவர் படத்தை எடுத்து  நஷ்டம் அடைந்ததற்கு  நஷ்டஈடு வேண்டும் என்கிறார்கள்  .அதற்கு அவரும் சரி அவர் அப்பாவும் சரி ஒரு பதிலையும் கூறகாணோம் .இந்த ஆட்சியிலே ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகிறார்கள் அதையே வாங்கி இலவசமாக கொடுப்பதற்கு என்ன செலவாகி விட போகிறது . என்ன பொன்னி அரிசியா குடுத்திர்க்க போறாரு
நாம்தான் இலவசமாக இஞ்சி மிட்டாய் குடுத்தாலே இடித்துபிடித்துகொண்டு வாங்க செல்வோமே. இங்கே நாம் எந்தளவுக்கு முட்டாள் ஆகிகொண்டிருக்கிறோம் என்பதற்கு இதுதான்  தான் சாட்சி

முதலில் எஸ்.ஏ .சந்திரசேகரும் ,விஜய்யும்  திமு.க ஆதரவாளார்களாக தான் இருந்தார்கள் .நாங்கள் கட்சி தொடங்கினாலும் திமு.க ஆதரவாகத்தான் செயல் படுவோம் என்றார்கள் .பின்னர் காங்கிரஸ் ராகுல் காந்தியை சந்தித்து அவர்களுடன் இணைவதற்கான முயற்சி நடந்தது அது பலிக்கவில்லை ஏனென்றால் எஸ்.ஏ .சந்திரசேகருக்கு தமிழக கவர்னர் பதவி கேட்கபட்டிருக்கிறது .

தி.மு.க கொடுத்த எதிர்ப்பின்காரனமாக அவர்கள் அங்கிருந்து அசிங்கப்பட்டு காரி துப்பாதகுறையாக வெளியில் வந்து அந்த ஆசையை ஒத்திவைக்கபட்டுளதாக கூறினார்கள் .இப்போது அந்த ஆசை மீண்டும்  துளிர்விட்டு இருப்பதால் நேரடியாக தி.மு.க வை சென்று அணுகினால்
அவர்களுடைய மானத்திற்கு இழுக்கு ஏற்படலாம் என்ற காரணத்தினால் இந்த மாதிரி பச்சோந்தி தனமான   வேலைசெய்கிறார்கள் .
அதுமட்டும் அல்லாமல் தி.மு.க வில் ஏகப்பட்ட அடுத்தகட்ட தலைவர்கள் உள்ளார்கள் இதனாலும் இவர்கள் ஓரம்கட்ட பட வாய்ப்பிருப்பதால் அங்கே அம்மா கட்சிக்கு  செல்கிறார்கள் .ஒரு நல்ல தேர்ந்த அரசியல்வாதி இவ்வாறுதான் செய்வான் .அதைத்தான் நடிகர் விஜயும் செய்கிறார்.
அ.திமு.க விழும்  அடுத்த கட்ட தலைவர்கள் இருந்தாலும் அவர்களைஎளிதாக  ஏய்த்து இவரால் முன்னுக்கு வரமுடியும் . (ஏனென்றால் அவர்களுக்கு படிப்பும் இல்லை அறிவும் இல்லை) .அப்படி வந்து விட்டால் எதிர்காலத்தில் அ.தி.மு.க கட்சிக்கு தலைவர் பதவிக்கு வந்துவிடலாம் .வந்துவிட்டால் எதிர்காலத்தில் இவரும் ஒரு முதல் அமைச்சராக வாய்பிருக்கிறது. ஒரு இளைய எம்.ஜி.ஆர் .ஆகவும் வாய்ப்பிருக்கிறது
 .
இவரெல்லாம் முதல் அமைச்சர் ஆகி நம்மளை ஆள போகிறார் .நாமும் நம்முடைய பிள்ளைகளும்  அவருக்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டு திரிவோம்  .
எதிர் காலத்தில் தமிழகம் அழிவதற்கான சூழல் என் ஞானதிருஷ்டியில்  தெரிகிறது.

இவர்கள் சில்லறைகள் பார்பதற்கு நாம் கல்லறையில் முடங்கவேண்டும்

எல்லாம் கால கொடுமைங்க 

11 கருத்துகள்:

பாரத்... பாரதி... said...

ஆகா...

ரஹீம் கஸாலி said...

தி.மு.க-விற்கு பயந்து அ.தி.மு.க-வில் விஜய் சேர்வதென்பது சட்டிக்கு பயந்து அடுப்பில் விழுவது போல்தான்

பிரியமுடன் ரமேஷ் said...

செம காமெடி.. அதென்னவோ.. விஜய் பத்தி சீரியஸா பதிவு போட்டாலும் காமெடியாவே இருக்கு..

சிவகுமார் said...

தலைவர் டி.ராஜேந்தர் இருக்கையில் மற்றவர்கள் நாட்டை ஆள்வார்கள் என கூறி எங்களை அதிர வைத்த மணிவண்ணன் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் - "தீ யார்... இந்த டி.ஆர்" ரசிகர் மன்றம், நியுசிலாந்து.

THOPPITHOPPI said...

ஆமை புகுந்த வீடு உருப்புடாது என்பார்கள், அதே போல் ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்தவன்.....................

philosophy prabhakaran said...

// எஸ்.ஏ .சந்திரசேகருக்கு தமிழக கவர்னர் பதவி கேட்கபட்டிருக்கிறது //
நக்கலா உண்மையா...?

philosophy prabhakaran said...

// இவர்கள் சில்லறைகள் பார்பதற்கு நாம் கல்லறையில் முடங்கவேண்டும் //
பன்ச் சூப்பர்...

ஹரிஸ் said...

பயங்கரமான ஞானதிருஷ்டியா இருக்கே..எல்லாம் கால கொடுமைதான்..

பார்வையாளன் said...

அஜித் திமுகவில் சேருவாரா?

karthikkumar said...

செம காமெடி.. அதென்னவோ.. விஜய் பத்தி சீரியஸா பதிவு போட்டாலும் காமெடியாவே இருக்கு//
ரிப்பீட்டு

மண்டையன் said...

ஏனென்றால் எஸ்.ஏ .சந்திரசேகருக்கு தமிழக கவர்னர் பதவி கேட்கபட்டிருக்கிறது ./////////

இது உலக காமடிடா சாமி............

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena