வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

7.2.11

பழிவாங்கிட்டோம்ல

                      மதுரை கோரிப்பாளையத்திலிருந்து  அண்ணா பஸ் ஸ்டான்ட் செல்லும் சாலையில் நேராக வந்து இடது புறம் திரும்பி சிறிது தூரம் பயணித்தால் ,உடகு கற்களால் ஆன  அந்த காலத்திய   வெள்ளைக்காரகள் கட்டிய கட்டிடம் ஒன்று தென்படும் .அந்த கட்டிடம்தான் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். காக்கைகள் எச்சமாக நிறைந்த வேப்பமரத்தின் நிழலில் எனது இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தினேன்

" என்னது ஒன்னவர் பெருமிசனா ....போன மாசம் உன் டார்கெட்டை இன்னும்  நீ காட்டல இதுல உனக்கு பெருமிசன் குடுக்கணுமா ? " என்று போனில் எகிறிய மேனேஜரின் நெளிந்து போன பெருங்காய டப்பா முகம் மனத்திற்குள் வந்து போனது

சீக்கிரம் ரேஷன் கார்டு அட்ரஸ் மாத்திட்டு போகணும் , என் வாகனத்தில் வைத்திருந்த பழைய ரேஷன் கார்டையும் அட்ரஸ் மாற்றுவதற்கான அத்தாட்சிகளையும் எடுத்து கொண்டேன்  ,நடந்தேன் ,அப்படியே வழியில் செல்போனில் செம்மொழியாம் தமிழ் மொழியை செல் மொழியாக்கி கொண்டிருந்தவரிடம்

" அண்ணே இந்த வடக்கு மண்டலம்  எங்கிருக்குனே" அவர் செல்போனில் காதில் வைத்தபடியே " இப்படியே நேர போங்க அங்க மஞ்ச சுவரு இருக்கும் அந்த செவத்தமுட்டி நொட்டாங் கை பக்கம் திரும்பி பார்த்தீங்கனா  " (என்னது செவத்த முட்டனுமா )" அங்கனுக்குல வடக்கு மண்டலம்னு போர்டு மாட்டிருப்பாங்க ,அங்க போங்க "

" சரினே " 
" அங்க யார பாக்கபோறீங்க "  என்றார்
' ஆங் ஓம் மச்சினிச்சிய ' வாய் வரைக்கும் வந்துவிட்டது " ரேஷன் கார்டு அட்ரஸ் மாத்தணும் "
"அப்படியா "

நேரம் சரியாக காலை   பத்துமணி , அது பதினாறுக்கு பதினாறு என்ற அளவில் அறையாக இருக்க வேண்டும் உட்புறமாக ஒரு கதவு அந்த கதவு வழியாக அறை அறையாக நீண்டன  , ஆங்காங்கே திட்டு திட்டாய் மரடேபிள் சேர் (கள்) , அதில் மந்தகாசமாய் ,மவுனமாய் அமர்ந்திருந்த சில ஆண்கள் ,பெண்கள் .எல்லோரது முன்னிலையிலும் கணினி இடம் பிடித்திருந்தது , அதில் ஒருவரிடம் சென்றேன்

நிமிர்ந்து பார்த்தார் ,கண்ணாடி சிறைக்குள் இருந்த  கண்களை இடிக்கினார் (பார்வையாலே என்னவென்று கேக்குறாராம் )

ரேஷன் கார்டை நீட்டினேன் " அட்ரஸ் மாத்தணும் " அவரதுஇடது  கை இடது பக்க மூலையில் அமர்ந்திருந்த ஒருவரை நோக்கி நீண்டது (இரவு அவர்  மனைவியிடம் !@#$%^&* மச திட்டு வாங்கிருப்பாரோ?)

" நீங்க வெளியில போய் ரேஷன்கார்டு அட்ரஸ்  மாத்துறதுக்கு  ஒரு பாரம் விப்பாங்க.... அத வாங்கி பில் அப் பன்னி , ஸ்டாம்ப் ஒட்டி கொண்டுவாங்க " என்றார் அந்த மூலையில் அமர்ந்திருந்தவர்
அந்த பார்ம் பில் அப் பண்ணுவதற்கே அரைமணிநேரம் சென்று விட்டது ,மீண்டும் உள்ளே சென்றேன் .பெண்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் காலியாக இருந்தன .
" இந்த மாதிரி தீட்சித் அதான்யா  ஹிந்தி காரி அவ பாட்டு ஒன்னு பார்த்தேன் நல்ல சீனு,அந்த நேரம் பார்த்து  சனி புடிச்ச மூதேவி பொண்டாட்டி காரி வந்து தொலைச்சுட்டா "
" அப்பறம் என்ன ஆச்சு "
" என்ன பண்ண சேனல   மாத்திட்டேன்  ..ஆனாலும் சும்மா சொல்லகூடாது செம கட்ட "
" யாரு உன் பொண்டாட்டியா"
" போயாங்கு ................" அவர்களின் சம்பாசனைகளுக்கு ஊடாக நான் நுழைந்தேன்
நான் உள்ளே நுழைவதை கண்டவுடன் என்ன என்பது போல் இருவரும்  பார்த்தார்கள் .அந்த பாரத்தையும் பழைய ரேஷன் கார்டையும் வாங்கிவைத்து கொண்டார்கள்
"  தம்பி நீங்க போயிட்டு ஒரு வாரம் கழிச்சு இதேநாள் வாங்க "
" சார் அவ்வளவு நாள் ஆகுமா "
" நாங்க என்ன சும்மாவா ஒக்கார்ந்திருக்கோம் உங்க ரேஷன் கார்டு அட்ரஸ் மாத்துறது மட்டும்தான் எங்க வேலையா "
" போயிட்டு வாங்கனு  சொன்னா  பேசாம போகணும் .......... அதுவிட்டு புட்டு ஆயிரத்தெட்டு கேள்விலாம் கேக்ககூடாது ......போயிட்டு அடுத்த வாரம் வாங்க " என்று ஒன்றன் பின் ஒன்றாக பதில் உரைத்தார்கள்

அடுத்தவாரம் :
 " உங்க பேரு "
சொன்னேன்
" உங்க கார்டு இன்னும் வரல அடுத்த வாரம் வாங்க  "
" சார் அடுத்தவாரமா ?"
" என்னங்க நாங்க என்னமோ வச்சுகிட்டா இல்லேன்றோம் வந்த குடுக்க மாட்டோமா ,போங்க சார்
உங்களுக்கு என்னமா வேணும் " என்று மிளாகாய் பொடி நெடியுடன் பேசினார்

அதற்கடுத்த வாரம் :
அதே " உங்க பேரு "
சொன்னேன்
"உங்க கார்டு வந்துடுச்சு ஆனா இதுல கடேசியா சைன் போடவேண்டிய ஆபீசர் லீவுல போய் இருக்காரு அடுத்தாவரம் வந்துடுவாரு ,அடுத்தவாரம் வாங்களேன்
" சார் அடுத்த வாரம்னு அடுத்த வாரம்னு சொல்லி அடுத்த மாசமே வந்துடுச்சு சார் "
" சரி சார் அதற்கு நாங்க என்ன பண்ண முடியும் ,சரி இந்தாங்க உங்க ரேஷன் கார்டு புடிங்க ,இத வச்சு ரேஷன் கடைல உங்களால எந்த பொருளும் வாங்க முடியாது ,புரிஞ்சுக்கோங்க "

அதற்கடுத்த அடுத்த வாரம் :
அரசாங்கத்தின் புன்னியத்திற்க்காக வேலை செய்பவர்கள் கடைசியாக அருள் கூர்ந்து எனக்கு ரேஷன் கார்ட் அளித்தனர் ' ,அந்த ரேஷன் கார்டில் அந்த 'அடுத்த வாரம் ' வந்துடுவாரு ஆபீசரின்கையெழுத்து  இடப்பட்டு விட்டதா என்று விளித்தேன் .அதே பழைய  ரேஷன் கார்டின் பின் அட்டையில் முன் பக்கத்தில் 'நான்கு கோடுகள் கீச்சபட்டு அதில் இரண்டு 'எட்டை ' படுக்க வைத்திருந்தார்
" இதான் சார் கையெழுத்து " முன் பக்க அட்டையின் பின் புறத்தில் அட்ரஸ் மாற்றம் செயப்பட்டதை   காட்டினார்
" சரிங்க சார் "

அப்பாடி ஒரு தொல்லை முடுஞ்சதுடா  சாமி ,வீட்டிற்க்கு வாகனத்தை விரட்டினேன் .வழியில் ஒரு நடுவயது காரர் ,வண்டியை வழிமறித்தார்
" சார் அண்ணாநகர் போறிங்களா "
" ஆமா "
"சார் நானும் அண்ணா நகர்தான் போகணும் ,கொஞ்சம் "
" சரி ஏறிக்கோங்க "
அவரின் செல் போன் 'ரிங்கியது '
" இந்தா வந்து கிட்டே இருக்கேமா ,கெளம்புற நேரத்துல கலெக்டர் கூபிட்டாரு அதான் கொஞ்சம் லேட் ஆய்டுச்சு அதுமட்டுமில்லாம வண்டி வேற பஞ்சரு....... கடைல விட்டிருக்கேன்...............
எப்படி வர்றேனா ஒருத்தர்கிட்ட  லிப்ட் கேட்டு வந்துட்டு இருக்கேன் "
வண்டியை ஓரமாக நிறுத்தினேன்
" எதுக்கு சார் வண்டிய நிறுத்திறீங்க "
" சார் கொஞ்சம் எறங்குங்க "
" என்ன சார் "
" சார் நீங்க கவெர்மென்ட் ஆபிசரா "
" ஆமா "
" மன்னிக்கணும் நான் அரசாங்கத்துல வேலை பார்ப்பவர்களுக்கு எந்த உதவியும் பண்ண கூடாதுன்னு கொள்கையாவே வச்சுருக்கேன் ..........
அப்படியே கியரை ஏற்றி சீறினேன் .முதுகில் பார்வை துளைப்பதை உணர்ந்தேன் .என் ஆற்றாமையை தீர்ப்பதற்கு வேறு வழி தெரியவில்லை

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------                                                                                                                                நட்புடன் -
 நா.மணிவண்ணன் 
                                                                                          




 
               


29 கருத்துகள்:

Unknown said...

சூப்பர் பாஸ்! உங்க எழுத்துக்கு ஸ்டைலுக்கு நான் ரசிகனாகிட்டேன்! அப்புறம் உங்க கிராமிய ஸ்டைல் தான் அதிகமா பிடிச்சிருக்கு! :-)

எல் கே said...

குட் ஒன

Madurai pandi said...

ஆமா.. இது கதையா , கற்பனையா ? நானும் நீங்க சொன்னா அதே ஆபிஸ்ல , ரேசன் கார்ட்ல அட்றஸ் மாத்தி இருக்கேன் மாமு.. ஆனால் எனக்கு ஒரு வாரதுலையே முடிஞ்சு போச்சு.. அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும்.. ஹா ஹா ..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

பாரி தாண்டவமூர்த்தி said...

நல்லா எழுதியிருக்கீங்க....நீங்களாவது ஒரு மாசத்துல வாங்கிட்டீங்க....எனக்கு தெரிச்ச ஒருத்தரு ஆறு மாசமா சுத்துராரு அத வாங்க....

karthikkumar said...

நல்லாவே பழிவாங்குறீங்க ....ஏற்கனவே ஒரு தடவ போட்டு delete பண்ணிட்டீங்க போல :)

பாரி தாண்டவமூர்த்தி said...

அவரு இன்னமும் அத வாங்கல..இப்ப அவரு கோட்டுல கேஸ் போட்டிருக்காரு அப்பனா பாத்துக்கோங்க....
http://virtualworldofme.blogspot.com/2011/02/blog-post_08.html

FARHAN said...

ஹா ஹா சூப்பர் பழிவாங்கல்

Chitra said...

.என் ஆற்றாமையை தீர்ப்பதற்கு வேறு வழி தெரியவில்லை


.....உங்கள் எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்குது... பாராட்டுக்கள்!

காதர் அலி said...

அண்ணே யாரையும் பழி வாங்கனுமுனா உங்ககிட்டதான் ஐடியா கேட்கணும்.பதிவு அருமை.

அஞ்சா சிங்கம் said...

என் ஆற்றாமையை தீர்ப்பதற்கு வேறு வழி தெரியவில்லை................//////////////

இத பத்தி நாம ரூம் போட்டு பேசலாமே .......................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரேசன் கார்டுல அட்ரஸ் மாத்துறது இவ்வளவு சீக்கரத்துல முடியுமா? அடேடே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது கதையா நெஜமா...?

எஸ்.கே said...

கதையோ, சம்பவவோ ரொம்ப நல்லா இருந்ததுங்க. முடிவு என்னை மிகவும் கவர்ந்தது!

cheena (சீனா) said...

அன்பின் மணிவண்ணன் - என்ன செய்வது - பல்வேறு காரணங்களால் அரசு இயந்திரங்கள் மெதுவாகத்தான் இயங்குகின்றன. காலம் மாறும். ம்ம்ம்ம்ம் - ஆற்றாமையை வெளிப்படுத்திய விதம் நன்று.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கெவுருமெண்ட்டு ஆப்பீசருக எல்லாத்துக்கும் இந்தமாதிரி ஷாக் ட்ரீட்மெண்ட்டு கொடுத்தோம்னா கொஞ்சநாள்ல சரியாயிடுவானுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல எழுத்து நடை வெச்சிருக்கீங்க, அடிக்கடி எழுதுங்கண்ணே...!

மதுரை சரவணன் said...

நீ மதுரைகாரன்லே...வச்சாயன் ஆப்பு... இது ரெம்ப டாப்பு

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்த துயரத்துக்கு தான் தனி ரேசன் கார்டு வாங்காம இருக்கேன்.

Philosophy Prabhakaran said...

அருமையான கொள்கை... பல அல்லக்கை முண்டங்கள் இப்படித்தான் இருக்கின்றனர்... பதிவில் நிறைய இலக்கிய வரிகள் தென்பட்டன... சூப்பர்ப்...

Unknown said...

அவங்க பாவம் புண்ணியத்துக்கு ஓடா தேயுறாங்க.....அவங்களுக்கு நாம வேலக்காரங்களா பணிவிட செய்யணும்.........என்ன தம்பி நீங்க.........அவங்கள போய்!

அந்தம்மா வச்சுது பாருங்க ஆப்பு.........அந்தமாதிரி மறுபடியும் வந்து வச்சுதுன்னா தான் கொஞ்சம் அடங்குவானுங்க......இந்த பேரிக்கா எதும் செய்யாது........ஏனா அவங்க ஒட்டு சிந்தாம சிதராம வேணும்ல மற்றும் தேர்தல் நேரத்ல நம்மல்தஐயும் சேத்து இல்ல குத்துவாங்க!?

ஆனந்தி.. said...

சகோ...நேத்து என் டாஷ்போர்ட் இல் இந்த போஸ்ட் இருந்தது..பட் கிளிக் பண்ணி பார்த்தால் இந்த போஸ்ட் இல்லவே இல்லை உங்க ப்லாக் கில் ..:(((

ஆனந்தி.. said...

சூப்பர் பதிவு மணி..நடக்கிற விஷயத்தை அப்டியே நேரில் பார்த்த மாதிரி விவரிப்பு இருந்தது...அதுவும் கடைசி பாரா சூப்பர்...கவர்மென்ட் ஆளுங்களுக்கு லிப்ட் குடுக்க மாட்டேனு சொன்னது சூப்பர்..சிரிச்சிட்டேன்...

போளூர் தயாநிதி said...

நல்லா எழுதியிருக்கீங்க....

Unknown said...

ரொம்ப நொந்து போய் இருந்திருக்கிங்க
அதான் இந்த கொலை வெறி

Anonymous said...

மணி...அசத்தல் பதிவு!! ஷங்கரின் இந்தியன் படத்தை பதிவில் பார்த்த எபக்ட்.

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா
நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்..

சக்தி கல்வி மையம் said...

ungal adaravukku nanri...

Unknown said...

:)haha

Unknown said...

வருகை புரிந்து கருத்து தெரிவத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena