வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

2.3.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -3

 இனிய நட்புகளுக்கு வணக்கம்

                         தொடர் ஆணிகள் ,பதிவு எழுத முடியவில்லை ,நண்பர்களின் பதிவுகள் படிக்க முடியவில்லை ,வருத்தம் , பதிவுலகத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை தொடங்கிவிட்டது போல ,பெருந் 'தலைகள்' உருள்வதால் நாம் அதை பற்றி கருத்து கூற விரும்ப வில்லை 

சோப்பு :

           1 . தமிழக  தேர்தல் தேதி அறிவிக்க பட்டுவிட்டது ஏப்ரல் பதிமூன்று ,ஆனால் முடிவை தெரிந்து கொள்ள ஒரு மாதம் வரை  மக்கள் காத்து கொண்டிருக்க வேண்டுமா(புதுசால இருக்கு ) ,இங்கு இன்னும் பல கட்சிகள் கூட்டணி குறித்த குழப்பத்தில் வேறு   
உள்ளன . பாவம் அரசியல் வியாபாரிகள்,சீட்டுக்கு அலையும் சில்லரைகள்   என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை ,நமக்கு அந்த கவலை எல்லாம் வேண்டாம் ,வாங்கின காசிற்கு ஓட்ட போட்டமா ,வெரல கரையாக்குனோமா, வந்தோமான்னு இருக்கலாம் 

         பெட்ரோல் மீதான விற்பனை வரி குறைப்பு: முதல்வர் கருணாநிதி 
           
ஐயா எவ்வளவு கோடி நஷ்டம் வந்தா என்ன ,எவன் அப்பன்  வீட்டு  சொத்தோ  ,,தேர்தல் வேற வந்துடுச்சு ,நீங்க நடத்துங்க நடத்துங்க 


சீப்பு :

        இன்று பிளஸ் -டூ தேர்வுகள் தொடங்கி விட்டன ,சில நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு அருகே நடந்த சம்பவம் ,ஒரு பதினெட்டு வயது மாணவனை ஓட ஓட விரட்டி வெட்டியது  ஒரு கும்பல் ,அந்த கும்பலில் ஒருவன் இன்று பிளஸ் -டூ பரிட்ச்சை எழுதவேண்டிய மாணவன் 
      
      
கண்ணாடி :

    சுமார் மூன்று வருடத்திற்கு முன்பு சென்னை கீழ்பாக்கத்தில் சில காலம் வாசம் செய்திருந்தேன் ,(நண்பனின் அறையில் தாங்க நீங்க வாட்டுக்கு வேற எதாவுது கற்பனைக்கு போய்டாதீங்க ) ,அந்த அறைக்கு பக்கத்தில் ஒரு சலூன் கடை இருக்கும் ,நண்பனுக்கு நன்கு பரிச்சியமானவர் ,அன்று வேலை தேடுதல் வேட்டையில் சலித்து போய் அந்த கடைக்கு வந்தேன் ,நண்பன் அங்கு இருப்பதை அறிந்து

என்னடா வேலை என்னாச்சு

அட ஏண்டா நீ வேற

உடனே சலூன் கடைக்காரர்
ஏன் தம்பி வேலை கெடைக்கலையா

கெடச்சிச்சு.............. சம்பளம் கம்மினே

எவ்வளவு........கூறினேன்

ஏந்தம்பி கம்மியான சம்பளத்துக்கு போக மாட்டீங்களா

கொஞ்ச தள்ளி ஒரு ஸ்டாப் இருக்கும் ,அங்க காலைல பார்த்தீங்கனா துணை நடிகைகளா நிப்பாளுக ,அதுகள அள்ளீட்டு போறதுக்கு ஒரு டெம்போ வரும் பார்த்திருக்கீங்களா

பார்த்திருக்கேனே

சும்மா ஏழு வருசத்துக்கு முன்னாடி அந்த கூட்டத்தில ஒருத்தி நின்னா ,இன்னைக்கு அவ லட்சம் லட்சமா சம்பாரிக்கிறா ,ஆனா அன்னைக்கு டெய்லி நூத்தம்பது ரூவா சம்பளத்துக்கு தான் வேலைக்கு போனா ,அவ யாருன்னு தெரியுமா தம்பி

யாருனே அது ....ஆவலானேன்

திரிஷா -அப்படிப்பட்ட திரிஷாவுக்கு குழந்தை புறந்துடுச்சுனு புரளிய
கெளப்பிட்டாய்ங்கலே.............ம்ம்ம் ரொம்ப வருத்தமா இருக்கு


சில பொன்மொழிகள் :

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை

என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை -தோல்வி

புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இருக்கலாம்

எதிர்பார்ப்பதைவிட
எதிர்கொள்ளுவதை
கற்று கொள்ளுங்கள்

ஏனென்றால்

இங்கு
எதிர்பார்க்கும் வாழ்க்கை
கிடைப்பதில்லை

எதிர் கொள்ளும் வாழ்க்கையே
கிடைக்கிறது




சும்மாக்காச்சு :










                                                                                                                                                                                              






நட்புடன் -
நா.மணிவண்ணன்                                             



         

15 கருத்துகள்:

Anonymous said...

//பதிவுலகத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை தொடங்கிவிட்டது போல ,பெருந் 'தலைகள்' உருள்வதால் நாம் அதை பற்றி கருத்து கூற விரும்ப வில்லை//

முக்கியமான பெருந்தலையே நீங்கதான. அது சரி, மதுரைல எந்த தொகுதில நிக்கப்போறீங்க? நீங்க க.க.க.போ. கட்சின்னு உங்க நண்பர் சுந்தர் சொன்னாரு. அப்டியா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றை தொகுப்பு அருமை..
மீண்டும் பதிவுலகம் திரும்பியதற்கு வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணத்தில் இணைப்பு கொடுங்கள்..

சக்தி கல்வி மையம் said...

என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை -தோல்வி ///அருமை.. நமக்கு ரொம்ப உதவுமில்ல...

Unknown said...

கலக்குற நண்பா சூப்பரு!

என்னப்பா இப்படில்லாம் 3 ஷா பத்தி குண்டு போடுற யப்பா!

Unknown said...

சூப்பர் நண்பா, நீங்களும் போட்டோ போட ஆரம்பிச்சாச்சா:-) பிரபல பதிவர் ஆகிட்டீங்க :-)))))

சி.பி.செந்தில்குமார் said...

>>>//பதிவுலகத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை தொடங்கிவிட்டது போல ,பெருந் 'தலைகள்' உருள்வதால் நாம் அதை பற்றி கருத்து கூற விரும்ப வில்லை//

அதெல்லாம் முடியாது.. சொல்லி ஆகனும். வாய்ஸ் குடுங்க.. ஹி ஹி

அஞ்சா சிங்கம் said...

//பதிவுலகத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை தொடங்கிவிட்டது போல ,பெருந் 'தலைகள்' உருள்வதால் நாம் அதை பற்றி கருத்து கூற விரும்ப வில்லை//

அதெல்லாம் செல்லாது வம்ப விலைக்கு வாங்கணும் வாங்குற வரைக்கும் விடுறதில்லை ...............

தமிழ்வாசி பிரகாஷ் said...

நண்பா.. ரொம்ப நாளா ஆளவே காணோம்... நம்ம சந்திப்புக்கும் வரல... என்னாச்சு?

வோடாபோன் வாடிக்கையாளரின் குமுறல்கள்
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

arasan said...

தல சரியான பதிவு ,,,
ரொம்ப ரசித்தேன் ....
நல்லா எழுதி இருக்கீங்க ...

Chitra said...

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை


...good one.

Anonymous said...

அட..கலக்கலா இருக்கு

pichaikaaran said...

முக்கியமான பெருந்தலையே நீங்கதான. :"

ஆமா ..எங்க ஆதரவு என்றும் உண்டு

மதுரை சரவணன் said...

arumai... manai maniyaana pathivu..

உலக சினிமா ரசிகன் said...

தமிழக அரசியல் சூழலுக்கு பொருத்தமான ஒரு வியட்நாம் கவிதை
வாழ்பவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
இறந்தவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்கள்
களத்தில் அணிவகுத்து நிற்கின்றன
இல்லை,மக்கள் என்றும் சரணடையப்போவதில்லை!
பழி வங்கும் நாள் வரும்.
நாள் ஏப்ரல் 13

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena