வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

25.3.11

பிசினஸ் மேன்

                                    சென்ற புதன் கிழமை காலையில் சாப்பிட்ட பதினைந்து தோசை நெஞ்சை கரித்துகொண்டே இருந்ததால் மதியம் ஆட்டு ரத்தம் ,ஈரல் ,புதைத்து வைக்கப்பட்ட இரு கோழி கால்களின் பிரியானி ,சிக்கன் 65  , இரண்டு தட்டு சோறு , ஒரு அவித்த முட்டை ,சில பொறித்த முட்டைகளும் என அளவாக உணவருந்திவிட்டு ,தீக்குச்சியின் உதவியுடன் பல்லிடுக்களை குத்தி கொண்டிருந்தபொழுது எனது செல்போன் நண்பன் அழைப்பதாக காட்டியது 

" என்னடா ரஞ்சித் "
" டே  எங்கிருக்க "
"வீட்ல "
"டே உடனே கிளம்பி ரயில்வே ஸ்டேஷனுக்கு போ "
"எதுக்கு "
"ஒருத்தர ரிசீவ் பண்ணனும் "
"போடா பொங்கலு வேலை இருக்குடா "
"டே வர்றவன் ஒரு பிசினஸ் மேன்ரா ,திருவனந்தபுரத்தில இருந்து  வர்றான் ,  அவன் மதுரைக்கு  புதுசுடா ,அவன கூட்டிட்டு வந்து நல்ல லாட்ஜா பார்த்து தங்க வை , சாயங்காலம் வந்து நா பாத்துக்கிறேன் "
"எதுக்கு இங்க வந்திருக்கான் "
"அந்த பிசினச கத்து குடுக்கத்தான் வந்திருக்கான் ,நீயும் வா கத்துக்குலாம் ,அவன் எட்டு நாடுல பிசினஸ் பண்றாண்டா "
" அப்படியா "
மைன்ட் கால்க்குலேசன் 'ஆகா இந்த பிசினச எப்படியாவுது கத்துகிட்டு ,வெளிநாட்டுல பிசினெஸ் பண்ணி ,பில் கேட்ஸ் பின்னுக்கு தள்ளீடனும்'
"ஓகே டா ,அவன் பேரு என்ன "
"அச்சுகோபன் "
                                                                       =================
" மிஸ்டர் அச்சுகோபன் "
" வெல் ,நீங்கள் ரஞ்சித் சார் பிரெண்டோ "
"ஆமாம் ,மணிவண்ணன் "
" ஹாங் ,மணிவண்ணன் ,ஹி செட் ,ஹி செட் . போலாமா ,எனக்கு தமிழ் கொறச்சு கொறச்சு வரும் "
" ஹி ஹி ,இங்கயும்  நெறைய பேருக்கு தமிழ் கொறச்சு கொறைச்சு தான் வரும் "நீங்கள் என்ன பிசினஸ் பண்றீங்க "
"ஞான பண்ணும் பிசினஸ் ஒரு வல்லிய பிசிநெசானு,ஈ பிஸ்னெஸ் செய்வதற்கு வயது முக்கியமில்லா ,ஆண் ,பெண் ,முக்கியமில்லா ,ஈ பிசினெஸ் செய்வதை பற்றி இந்தியாவின் நம்பர் ஒன யுனிவெர்சிட்டி யில் பாடாமே உண்டெங்கில் நீங்கள் நம்புவீர்களா "
" ஈ பிசினெஸ் செய்த பிறகு ஞான்  ஒரு காரே வாங்கியது , டாட்டா இண்டிகா , இன்னும் சொந்தாமாக வீடு ஒன்று   வாங்கும் "
"எனக்கு என்ன வயசாயிட்டு என்று நீங்கள் அறியுமோ "
"தெரியலையே "
"21 " 
ஆஆஆஆஆ வென வாயை பிளந்தவன் தான் ,
மைன்ட் கால்குலேசன் 'மணி இவன விட்டுதாத ,பில்கேட்ச பின்னுக்கு தள்ளனும் '
அவரை ஒரு நல்ல ஹோட்டலாக பார்த்து தங்க வைத்து விட்டு ,மீண்டும் மாலை வந்து சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு வந்தேன் ,ஆனால் என்னாலும் என் நண்பானாலும் அன்று மாலை செல்ல முடியவில்லை ,

வியாழக்கிழமை :
"சாரி ,நேற்று என்னால் வர முடியவில்லை "
"இட்ஸ் ஓகே ,ரஞ்சித் சாரு ,இப்ப வரமுடியாது ,ஜோலி உண்டுன்னு போன் செய்து    "
"அப்படியா "
"இங்க பக்கத்துல  மீனாக்ஷி அம்மன் டெம்பில் இருக்கு ,கூட வருமோ "
வேலை இருந்தாலும் வருகிறேன் என்று தலையாட்டினேன்,போகிற வழியில்  கிளி ஜோசியம் பார்த்தார் ,,கிளி வந்து ஒரு கார்டை எடுத்தது ,படத்தை பார்த்துவிட்டு பலன் கூறினார் கிளிஜோசியாக்காரர்
"தம்பிக்கு கைக்கெட்டுனது வாய்க்கெட்டாது "
"i don't understand" என்று என்னை பார்த்தார்
"thatmeans, hand taking but mouth not catching" என்று கிளி ஜோசியர் கூற கூற ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை செய்தேன் ,கடைசியாக
ஒரு எலுமிச்சம்பழம் வேண்டும் என்று கூறினார் கிளி ஜோசியக்காரர் ,சரிஎன்று  வாங்கி வர சென்றேன் ,அதை தலையை மூன்று முறை சுற்றி எச்சி துப்பி தூக்கி எரிய சொன்னார் ,150 /- பீஸ் வாங்கினார் ,தம்பி நீங்க ஜோசியம் பார்க்கலையா என்றார் என்னிடம் ,ஹி ஹி ,நானும் மதுரக்காறேன்தானே
கோயிலில் கூட்டமாக இருந்தது ,கோயில் அருமை பெருமைகளை விளக்கினேன் ,ஆச்சிரியமாக எல்லாவற்றையும்  கேட்டார் ,ஸ்பெஷல் தரிசன டிக்கெட் 200/- குடுத்து வாங்கினேன் ,ஒரு கால்மணிநேரம் கண்ணை மூடியவாறு வேண்டினார் ,சரி என்று நானும்  " அம்மா ,தாயே ,ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கிருக்கேன் ,ஸ்பெஷலா நல்லது பண்ணனும் ஆமா சொல்லிபுட்டேன் " வேண்டினேன்
அவரை ஹோட்டலில் டிராப் செய்துவிட்டு மீண்டும் நண்பனோடு மாலைவந்து சந்திப்பதாக கூறி  விடைபெற்றேன்
                                                    =======================

மாலை வந்தது ,நண்பனுடன் சந்திக்க சென்றேன் ,சில வழக்கமான விசாரிப்புகள் ,பேச்சுகளை முடித்து பிறகு ,பிசினெஸ் பற்றி விளக்குவதாக கூறி லேப்டாப்பை எடுத்தார் ,இந்த  பிசினஸ் எப்படி செய்வது ,அதன் கூறுகள் என்று விளக்கினார் ,முடித்தார்
நண்பனை பார்த்தேன் ,அவன் கொட்டாவி விட்டான் ,எனக்கு தூக்கம் வருவது போல் இருந்தது ,

இத பத்தி சொல்றதுக்குதான் அங்கிருந்து வந்தியா , e-commerce ' பில்ட் அப் குடுத்தியடா ,

கடைசில பாத்தா ஆளு செத்து விடுற வேலையா , இந்த  ஆளு புடிக்கிற வேலைக்குதான் இங்க ஆயரம் பேரு சுத்துரான்களே

இப்பகூட மூணு பேரு என்னைய தொறத்தோ தொரத்துன்னு தொரத்துறாய்ங்களே

இந்த எம்.எல் ,எம் பிசினஸ் பண்றவுவிங்க தொலை தாங்க முடியலைங்க ,இந்த பிசினெஸ் செய்யும் நண்பர்கள் கண்டாலே அலறியடித்து ஓடி ஒளியிறேன்,
மீட்டிங் என்று அழைத்து செல்வார்கள் , இந்த பிசினெஸின் சிறப்புகளை எவராவுது  விளக்கோ விளக்கென்று விளக்குவார்கள் ,அதன் பிறகு இதில் சாதனை புரிந்தவர்கள் வரிசையாக வருவார்கள் ,இந்த பிசினெஸ் அவர்கள் ஏன் செய்கிறோம் காரணம் கூறுவார்கள்

கஞ்சிக்கு வழியிலாம கிடேந்தேங்க,குடும்பத்தோட மருந்த குடிக்கலாம்னு இருந்தேங்க ,மருந்து மூடிய தெறக்க போறேன் ,ஒரு நண்பர் வந்து தட்டிவிட்டாருங்க ,அடப்பாவி ஏன்டா மருந்த குடிக்க போற ,உனக்கு நா நல்ல வழிய காட்டுறேண்டானு இந்த பிசிநெசுல சேத்துவிட்டாருங்க ,இன்னிக்கி நா நெலையில இருக்கேங்க ,பொண்டாட்டி பிள்ளையோட சந்தோசமா இருக்கேங்க

உடனேகூடி இருக்குறவுங்க  கையி தட்டுவாங்க பாருங்க பில்டிங்கே இடிஞ்சு விழுந்துடும்

அன்று இரவு 11 மணி ,போன்அடித்தது எடுத்தால்
"ஹலோ "
" மணி , அச்சு கோபன் ஸ்பீகிங் "
"என்ன மணி டீம் பார்ம் பண்ணிடலாம "
போடா பொங்கி

12 கருத்துகள்:

தமிழ்வாசி - Prakash said...
This comment has been removed by the author.
விக்கி உலகம் said...

மாப்ள முடியல..........கட்சில சொன்ன பாரு பொங்கி அத நெனச்சித்தான் ஹிஹி!

தமிழ்வாசி - Prakash said...

ரொம்ப நல்லா பிசினஸ் பண்றீங்க...மொக்கையோ மொக்கை. ஹி...ஹி...ஹி...

எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

அஞ்சா சிங்கம் said...

இப்போ பரவாஇல்லை மாப்பிளை முன்னெல்லாம் ரொம்ப மோசம் .............
தக்காளி நாய் பிடிக்கிறவங்க மாதிரி அலைவாங்க .......
சிக்கினோம் அவ்ளோதான் மஞ்சள் தடவி நேர்ந்து விட்டுருவாங்க ...................

இரவு வானம் said...

அய்யோ மணி ஐஸ்டு மிஸ்ஸு :-)))))
இன்னுமா இவனுங்கள இந்த ஊரு நம்புது???

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சென்ற புதன் கிழமை காலையில் சாப்பிட்ட பதினைந்து தோசை நெஞ்சை கரித்துகொண்டே இருந்ததால் //
இதெல்லாம் அநியாயம்

சேலம் தேவா said...

சூப்பர் காமெடி பாஸ்... நமக்கு நல்லது பண்றதுக்கு அவதாரம் எடுத்த மாதிரியே பேசுவாய்ங்க...ஆனா,ஒரு 500ரூபா கடனா கேட்டுப் பாருங்க...அப்ப தெரியும் சேதி. :))

பாலா said...

இந்த எம்‌எல்‌எம் தொல்லையை நானும் அனுபவித்திருக்கிறேன். நமக்கு பெரிய ட்ரீ டையக்ரம் எல்லாம் போட்டு காட்டுவார்கள். அவர்கள் கணக்குப்படி பத்து ஆண்டுகளில் லட்சாதிபதி ஆகி விடலாம்.

Chitra said...

:-)))))

மைந்தன் சிவா said...

வணக்கம் பாஸ்....
மொக்கை???
கடவுளே...
சாவடிக்குரானுகள்...
உங்க பெயர் வர காரணம் என்ன??
தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html

! சிவகுமார் ! said...

//அம்மா ,தாயே ,ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கிருக்கேன் ,ஸ்பெஷலா நல்லது பண்ணனும் ஆமா சொல்லிபுட்டேன் //

போயஸ் கார்டனுக்கு வரப்போறீங்களா? சொல்லவே இல்ல????

பதிவுலகில் பாபு said...

ஹா ஹா ஹா.. உண்மைதாங்க.. இந்த ஆளுங்ககிட்ட சிக்கீட்டா.. அப்புறம் காதுல இரத்தம் வராம நம்மளை விடமாட்டாங்க.. ;-)

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena