வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

3.3.11

வாங்குவோமா வரதட்சனை

வரதட்சனை கொடுமை சட்டம் :
    
            இந்திய பாராளுமன்றத்தில் 1983 ம் கொண்டு வரப்பட்டது 

    Passed by Indian Parliament in 1983, Indian Penal Code 498A, is a criminal law (not a civil law) which is defined as follows,

" whoever ,being the husband or the relative of the husband of a woman. subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years 
and shall also be liable to fine. The offence is Cognizable, non-compoundable and non-bailable. "                                                    
நீதியா ? அநீதியா ?
                                                          

       
ஆதிகாலத்தில் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவே திருமண முறை நிருவபட்டிருக்க வேண்டும் ,ஒரு பெண் என்பவள் தனக்கு மட்டுமே உரித்தானவளாக ,தன் ஆளுமைக்கு உட்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற பார்வையே திருமண முறை உருவாக காரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் 

பெண்கள் மீதான வன்முறை காலம் காலமாகவே ஆண்களாலும் ,பெண்களாலுமே பெண்களுக்கு நடந்து வருகிறது ,அது இன்றளுவும் தொடர்வது வருத்தத்துக்குரியதே ,புராணத்திலும் ,வரலாற்றுகாலத்திலும் பெண்களை கடத்தி செல்வது நடந்திருக்கிறது ,அதிலும் குறிப்பாக வரலாற்றுகாலத்தில் தான்   பெண்களை கடத்தி செல்வது அதிகமாக நடந்திருக்கிறது .அதன் பின்தான் பெண்களை வீட்டிற்குள் அடைக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது .பின்பு வந்த சமுகம் பெண்கள் என்றால் வீட்டிற்க் குள்ளேதான் அடைந்து கிடக்க வேண்டும் என்று நிலையை  உருவாக்கி விட்டது 


இது  பெண்கள் மீதான வன்முறைக்கெதிராக கொண்டு வரப்பட்ட சட்டமே 


498-a law


ஒரு பெண் மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ துன்புறத்தபட்டால் ,அவள் புகார் அளிக்கும் பட்சத்தில் அவன் கணவன் மற்றும் கணவனின் உறவினர்கள் மீது இச்சட்டத்தின் கீழ் எந்த விசாரணையும் இல்லாமல் கைது செய்யப்படுவர்  ,அந்த உறவினர்கள் கர்பிணிபெண்ணாகவோ அல்லது குழந்தையாகவோ இருந்தாலும் கூட அந்த கைது நடக்கும்

இந்த சட்டம் ஒரு நல்ல நடைமுறை சட்டமே ,ஆனால் இந்த சட்டம் சரியான 
முறையில் பின்பற்றபடுகிறதா என்றால்  சத்தியமாக இல்லை 

யாருக்கு இந்த சட்டம் நன்றாக பயன்படுகிறது என்றால் 

பேராசைக்கார பெண்களுக்கு, தன்குடும்பம் நன்றாக இருப்பதற்கு பிறர் குடும்பத்தை கெடுத்தாலும் தவறில்லை என்று நினைக்கும் வக்கீல்களுக்கு  ,
லஞ்சம் லாவண்யத்தின் உறைவிடமாக இருப்பவர்கள், தொப்பையை வளர்ப்பதற்கு மிக கஷ்ட படுபவர்கள் ,ஒண்ணா நம்பர் கூஜா தூக்கிகளான போலிஸ் காரர்களுக்கு இச்சட்டம் மிக பயனுள்ளதாக இருக்கிறது 

சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் விளக்கு ,அப்படின்னு பெரியவர்கள் எல்லாம் கூறியிருக்கிறார்கள் 

ஆனால் அதுவல்ல உண்மை 

கொஞ்சம் காசு இருந்தால் சட்டத்தின் ஓட்டைகள் மூலமாக தப்பித்து விடலாம்,நிறைய காசு இருந்தால் ஓட்டைகளை பெருசாக்கி சட்டைத்தையே தூக்கி அதில் வைத்து விடலாம் 

பெண்கள் எடுக்கும் நிலைபாடுகளே அவர்களுக்கெதிராக நடக்கும் வன்முறைகளாக மாறுகின்றன 

இன்று   ஆண்களுக்கு இணையானவர்களாக பெண்கள் வந்து விட்டார்கள் 
,ஆண்கள் செய்யும் தப்புகள் அனைத்தையும் பெண்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் ,அப்படி இருக்க ஆண்களுக்கு எதிராக பேராசைக்கார பெண்கள் பழிவாங்கும் செயலாக இச் சட்டம் பயன்படுத்த படுகிறது இது எந்தவிதத்தில் நியாயம் ,காசு பார்க்க நினைக்கும் வக்கீல் இதற்கு துணை புரிகிறார்கள் 


நேற்று ஒரு தொழில் முறை நண்பர் ஒருவரை  சந்திக்க நேர்ந்தது .அவரின்  குடும்பம் இச்சட்டத்தினால் மிகவும் பாதிக்க பட்டிருக்கிறது என்று மிகவும் வருத்த பட்டார் 


தவறு செய்தது அவர் அண்ணன் ,அதற்க்கு இவரின் வயதான பெற்றோரையும் கைது செய்து ,இவரையும் கைது செய்ய அலைகிறார்களாம் போலீஸ்காரர்கள் 
அதனால் இவர் anticipatory bail உடன் சுற்றி கொண்டிருக்கிறார் 

இது வரை ஒன்றலட்சம் செலவு செய்திருக்கிறார் 

இச்சட்டம் இன்று பணம் கொழிக்கும் சட்டமாக மாறிவிட்டது நீதித்துறைக்கு பெருமையே 



வரதட்ச்சனை வாங்கியவர்களுக்கு இச்சட்டம் வழங்கும் நீதியை விட வரதட்சனை வாங்கதவர்களுக்கு இச்சட்டம் அதிகமாக அநீதியை இழைக்கிறது, அந்த பெண் கொடுத்த வழக்கு உண்மை இல்லை என்று நிருபணமானால் கூட அந்த பெண்ணின் மீது கணவனாலோ அல்லது அவனின் குடும்பத்தாலோ  மான நஷ்ட வழக்கு தொடுக்க முடியாது 


அந்த பெண் வரதட்சனை கொடுவில்லை ஆனாலும் வரதட்சனை குடுத்ததாக புகார் அளித்தால் அந்த கொடுக்காத வரதட்சணையை இவர்கள் குடுக்க வேண்டும் 


கல்யாணம் ஆகாதவர்கள் இனிமேல் பெண்பார்க்கும் பொது இனி இப்படி செய்யலாம் 


பெண் வகையாராவில் எவரேனும் வக்கீலாகவோ ,வக்கிலுக்கு படித்து கொண்டிருந்தாலோ ,போலிசாகவோ,போலிசாக முயற்சித்து கொண்டிருந்தாலோ ,அரசியல்வாதியாகவோ அல்லது அரசியல் வாதியாக முயற்சித்து கொண்டிருந்தாலோ 


அப்படியே பஜ்ஜி சாப்பிட்ட கையோடோ அல்லது வாயோடோ பின்னங்கால் பிடரியில் தெறிக்க  ஓடி வந்துவிட வேண்டும் என்று பாதிக்க பட்ட நண்பர் கூறுகிறார் (எப்படிலாம் தப்பிக்க வேண்டியாத இருக்கிறது )


இனிமேல் வரதட்சனை வாங்குவோமா நாம 








8 கருத்துகள்:

Unknown said...

பொதுவாக இதில் பாதிக்கப்படுபவர்கள் உண்மையில் தவறிழைக்காதவர்களே.............
நீங்கள் சொல்வது போல..............நல்லதுக்காக வந்த சட்டம் தண்டிப்பது அதிகமாக நல்லவர்களையே என்ன செய்வது!

சக்தி கல்வி மையம் said...

நன்றி நண்பரே இதுவரை ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

எளிய முறையில் விளக்கி இருக்கிறீர்கள்.

பாலா said...

சட்டத்தை மறுபரிசீலனை செய்வது மிக அவசியம். அதற்காக வக்கீல் வீட்டில் பெண் எடுக்க் கூடாது என்பது அநியாயம்.

Chitra said...

சமூதாய பழக்க வழக்கங்களில் - நிறைய சீர் திருத்தங்கள் முதலில் வர வேண்டும் என்று தெரிகிறது.

அஞ்சா சிங்கம் said...

எதுக்கு வாங்குவானே ........அப்புறம் குத்துது குடையுதுன்னு கத்துவானே.............
மாப்பிளை பைக் வரலேன்னா தாலி காட்டமாட்டார்ன்னு இனிமேல் எவனும் முறுக்கிக்க மாட்டான்னு நினைக்கிறேன் ........................

Anonymous said...

பொண்ணு வெயிட்டுக்கு தகுந்த மாதிரி வாங்க ஆரம்பிச்சிட்டானுக திருந்த மாட்டானுக பாஸ்

arasan said...

தல நல்ல விளக்கமா சொல்லிருக்கிங்க ...
வாழ்த்துக்கள் /.///

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena