வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

4.3.11

புத்தர்-பௌத்தம் -சில புரிதல்கள்

            
   இந்திய துனைகண்டத்தில் தோன்றிய மிக முக்கிய நான்கு சமயங்களில் மிக முக்கியமான சமயம் பௌத்த சமயம். மற்றவை, சமணம் ,இந்து ,சீக்கியம் .கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது போதனைகள் இந்திய துனைகண்டத்தில் முழுவதும் தழைத்தோங்கியது, ஆனால் இந்தியாவில் கி .பி .பதிமூன்றாவுது நூற்றாண்டிற்குள் சிதைவுற ஆரம்பித்தது ,அதற்குள் அதன் ஆதிக்கம் திபெத்,மத்திய ஆசியா,சீனா,கொரியா.ஜப்பான் ,இலங்கை என பரவி விட்டது 

நான் இங்கு கூறவிருப்பது என்னவென்றால் புத்தரின் தோற்றம் ,போதனைகள் ,பௌத்தம் குறித்த சில புரிதல்கள் .அவ்வளவே .இதில் வரும் பிழைகள் யாவும் என்னையே சாரும் 

                                                                 

புத்தரின் வரலாற்றை படித்த பொழுது ஒன்றை எளிதாக புரிந்து கொண்டேன் ,புத்தர் சோதனைகூடமாக தன்னையே ஆராய்ச்சி செய்து கொண்டார் ,அதன் மூலம் தான் கண்டவற்றை மக்களுக்கு எளிமை படுத்தினார் 

உண்மையென்று நீ உறுதி கூறும் விஷயம் நீயே உனக்காக உணர்ந்திருக்கும் ,பார்த்திருக்கும் ,அறிந்திருக்கும் ஒரு விசயமாக இருக்கவேண்டும் 

இந்திய ஞான மரபில் புத்தரின் போதனைகள் மறுக்க முடியாதவை ,எதையும் பக்குவட்ட பார்வையில் பார்க்கவேண்டும் என்று உணர்த்திய புத்தரை கடவுளாக பார்ப்பது பக்குவமற்றதே

இந்திய துணைக்கண்டத்தின் வடக்கத்திய பகுதியில் பல இனத்தை  சேர்ந்த மக்கள் பரவியிருந்தனர் ,அவர்களுள் சாக்கியர்கள் ஒரு இனம் ,அந்த இனத்தில் தான் புத்தர் பிறந்தார் ,அவர்களின் தலைநகரான கபிலவஸ்த்துவில் ,இது இப்போதைய நேபாளத்தின் lowland terai பகுதியில் உள்ள லும்பினி நகரமாகும் .

நான்கு வர்ணங்கள் :

பிராமணர் : சமய குருமார்களாகவும்  அறிவு ஜீவிகளாகவும் தங்களை நிலைநிறுத்தி கொண்டவர்கள்

சத்திரியர்கள் : ஆட்சிபுரிபவர்கள் ,போரிடுபவர்கள் ,அதிகாரமிக்கவர்கள்

வைசியர்கள் : பொதுமக்கள் ,உற்பத்தியாளர்கள் ,விவசாயிகள்

சூத்திரர்கள் :மற்ற மூன்று வர்ணத்திற்கும் அடிமைகளாகவும் ,வேலைக்காரர்களாக நிர்பந்திக்க பட்டவர்கள்

இதில் இரண்டாம் வர்ணத்தை சேர்ந்தவர்களாக சாக்கியர்கள் தங்களை காட்டிகொண்டார்கள் ,அந்த காலத்திலிருந்தே வர்ணங்களுக்குரிய கருத்தாக்கம் அழுத்தமாக இருந்து வந்திருக்கிறது .புத்தர் மன்னரின் மகனாக பிறந்தார் ,அவரது தந்தையார் பெயர் சுத்தோதனா,தாயார் பெயர் மாயா ,அவர் செலவம் ,இன்பம் ,அதிகாரம் போன்ற மனிதர்களின் இயல்பான ஆசைகளுடனே வளர்ந்திருக்கிறார் ,பதினாறாவுது  வயதிலே அவருக்கு திருமணம் நடந்தேறி இருக்கிறது ,மனைவியின் பெயர் யசோதரா ,சாட்சியாக ரகுலா என்றொரு பிள்ளை

அவருக்கு குறிப்பிட்ட வயதிற்கு மேல்தான் வெளியுலகை வேறு விதமாக பார்க்கநேர்ந்தது ,பாதுகாப்பான வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வந்திருக்கிறது ,ஒரு நோயாளி ,ஒரு முதியவர் , ஒரு பிணத்தை நேருக்கு நேர் சந்தித்த பிறகுதான் அந்த எண்ணம் வலுவடைந்திருக்கிறது

எந்த ஒரு செயலுக்கு ஒரு மாற்று கண்டிப்பாக உண்டு ,ஆனால் மரணத்திற்கு இல்லை .அதை முழுமையாக ஏற்றுகொள்ள வேண்டும் ,அதற்குரிய பக்குவம் காலத்தால் அளிக்க முடியும்

நோய் ,முதுமை ,மரணம் இவற்றை எந்தவொரு பாதுகாப்பான ,செல்வமான ,அதிகாரமான வாழ்க்கையால் தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர்ந்த பின்புதான்  வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் ,பின்பு பரதேசிகளுக்குரிய பரவச நிலையை அடையும் தியானங்களை முயற்ச்சித்திருக்கிறார் ,அப்போது வழக்கத்திலுருந்தவைகள் தான் அவை ,ஆனாலும் சிறிதுகாலத்திலே  இவை பயனற்றது என்பதை உணர்து கொண்டார்

" இந்த என் சான் சதைபிண்டத்தில் அதன் மனமும் அபிப்ராயங்களும் சேர்ந்த நிலையில்தான் உலகமும் உலகத்தின் தோற்றமும் உலகத்தின் முடிவுறுதலும் உலகத்தின் முடிவுகளுக்கு இட்டு செல்கிற வழியும் உள்ளன " 

பிறப்பு வேதனை ,முதுமை வேதனை .நோயும் வேதனை இது போன்ற வேதனைகளுக்கான முடிவுறுதலை அவர் பொது படையாக மனிதனின் கதி பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்

துறவுக்கு ஒரு திட்டவட்டமான நோக்கம் கூட இருந்திருக்கிறது

" எனக்கு தோன்றியது - வீட்டு வாழ்க்கை இறுக்கமானது .அசுத்தமானது ,அதே சமயத்தில் வீடற்ற நிலைக்கு உரிய வாழ்க்கை ,அகண்ட வெட்டவெளி வகைப்பட்டது என்று ,பொந்துக்குள் அடைப்பட்ட நிலையில் ,ஆன்மீக வாழ்க்கையை அதன் ஒவ்வொரு அம்சத்திலும் முற்றிலும் முழுமையாகவும் 
தூய்மையாகவும் வாழ்வது கடினம் "


புத்தர் தன் மூலமாக இந்த உலகத்தை ஒரு பார்வையாளனாகவே பார்த்தார் ,துறவிகளுக்கே உரியது

"ஒரு தாமரை மலர் நீரில் பிறக்கிறது ,நீரில் வளர்கிறது ,நீரிலிருந்து எழுந்து அதற்கு மேல் நீண்டு தரையில் படாமல் நிற்கிறது .நானும் அவ்வாறுதான் .உலகத்தில் பிறந்து உலகில் வளர்க்கப்பட்டு ,உலகை வெற்றிகொன்டாலும்  உலகத்தை மாசுபடுத்தாமல் வாழ்கிறேன் "


                                                                                                         ...............            தொடரும் 




பிழைகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்  


நட்புடன் -
நா.மணிவண்ணன் 







20 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் said...

I....

சக்தி கல்வி மையம் said...

மிகவும் பயனுள்ள பதிவு.. இந்த கால கட்டத்தில் தேவையான பதிவும் கூட..

சக்தி கல்வி மையம் said...

ஓட்டு போட மறுபடியும் வந்திருக்கிறேன்.

Anonymous said...

சிறப்பான தொடக்கம் நண்பரே வாரம் ஒரு முறை இது போல வெளியிடுங்கள்

Anonymous said...

புத்தர் இலங்கை கொடுமை தான் நினைவுக்கு வருகிறேன்..புத்தனை வழிபடுகிறான் சிங்களன்....தமிழன் பிணத்தின் மீது நின்று

ஆனந்தி.. said...

சகோ மணி...உங்ககிட்டே இப்படி ஒரு பதிவா...ரொம்ப அருமையா தொடங்கி இருக்கீங்க சகோ...நாங்க நிறைய இதுபற்றி தெரிஞ்சுக்குறோம்..வாழ்த்துக்கள் சகோ....

போளூர் தயாநிதி said...

புத்தர் இலங்கை கொடுமை தான் நினைவுக்கு வருகிறேன்..புத்தனை வழிபடுகிறான் சிங்களன்....தமிழன் பிணத்தின் மீது நின்று
nanum athaiye

ரஹீம் கஸ்ஸாலி said...

present sir

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

Sivakumar said...

தல..என்ன ரொம்ப நாள் கேப் விட்டுட்டு, இப்ப டில்லி ஒரு பதிவு போட்டு பின்றீங்க!

Unknown said...

ஓகே நண்பா உனக்காக ஒத்துக்கறேன்!

அஞ்சா சிங்கம் said...

மதுரைல ஏதும் ஆசிரமம் துறக்கிற ஐடியா இருக்கா?.....................

இருந்தா சொல்லுங்க நானும் வந்து சேர்ந்துக்கிறேன் .....................

Unknown said...

புத்த மதத்தை பின்பற்றுறவங்கதான்/???

சி.பி.செந்தில்குமார் said...

>>>எந்த ஒரு செயலுக்கு ஒரு மாற்று கண்டிப்பாக உண்டு ,ஆனால் மரணத்திற்கு இல்லை .அதை முழுமையாக ஏற்றுகொள்ள வேண்டும் ,அதற்குரிய பக்குவம் காலத்தால் அளிக்க முடியும்

அழகு

பாலா said...

நல்ல கருத்துக்கள் நிறைந்த ஒரு பதிவு. மிக்க நன்றி நண்பரே...

Chitra said...

புத்தர் கொள்கைகள் குறித்து நல்லா தொகுத்து தந்து இருக்கீங்க.... நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம். பகிர்வுக்கு நன்றிங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான பதிவு தல, தொடர்ந்து எழுதுங்க...!

தமிழ் ஈட்டி! said...

பிழைகள்:

//துனைகண்டத்தில்//
துணை

//எளிமை படுத்தினார்//
எளிமைப்படுத்தினார்


//இதில் வரும் பிழைகள் யாவும் என்னையே சாரும்//
சரியாக சொன்னீர்கள். பிழை இன்றி எழுதவும் சகோ.

//பிழைகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்

நட்புடன் -
நா.மணிவண்ணன் //


தெரியப்படுத்தி விட்டேன்.

நட்புடன்,
பிரம்பு ஆசிரியன்.

MoonramKonam Magazine Group said...

மிகவும் பயனுள்ள பதிவு

Unknown said...

ஆகா! என்ன திடீர்னு? எழுதுங்க தெரிந்து கொள்வோம்! :-)
அப்புறம் பார்த்து ரொம்ப நாளாச்சுல்ல!

cheena (சீனா) said...

நல்லதொரு இடுகை - நீண்ட ஆஉவிற்குப் பின்னர் எழுதப்பட்ட இடுகை - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena