வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

22.3.11

அவள் பெயர் ரம்யா


இன்று :
               மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ,மக்கள் பேருந்துகளில் ஏறுவதும் ,உதிருவதுமாய் இருந்தனர் ,நான் தூத்துக்குடி பஸ் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன் ,குமித்து வைக்க பட்ட பூரிகள் ,இட்லிகளை  , காட்டி கையை பிடித்து அழைக்காத குறையாக சிறிய மெஸ்க்காரர்கள் வருவோர் போவோர்களைஎல்லாம்  அழைத்து கொண்டிருந்தார்கள் ,ஒரு சி .டி கடையை கடந்த போது 'சார் நேத்து ரிலிஸ் ஆனா காவலன் இருக்கு சார் வாங்க சார் 'என்றான்  அந்த கடையின் சிப்பந்தியாளன்.அவனை அலட்சியபடுத்தினேன் '   திருச்செந்தூர் ,தூத்துக்குடி ' என நடத்துனர் கூவிகொண்டிருந்தார் ,உள்ளே ஏறி இருவர் அமரும் சீட்டில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தேன் , அந்த இருக்கை பேருந்தின் நடுப்பகுதியில் இருந்தது , சிறிது சிறிதாக பயணிகள் இருக்கையை ஆக்கிரமித்து கொண்டிருந்தார்கள் ,பேருந்து தொலைக்காட்சியில் ரஜினி அண்ணாமலையாக மாறி பால் விற்று கொண்டிருந்தார் 
"அஸ்வின் பேசாமா  ஆடாம வா ," என்ற குரல் கேட்டு தலையுயர்த்தி பார்த்தேன் ,இவள் இவள் 
........அவளுக்கு பின்னால் அவளுடைய கணவனாக இருக்க வேண்டும் ,அவள் தோளில் ஒரு பெண் குழந்தை , 

"மம்மி  நா ஜன்னல் ஓரத்துலதான் உக்காருவேன் "
"அஸ்வின் அடம் பிடிக்க கூடாது ,மம்மிக்கு கோவம் வரும் "
 மூன்று பேர் அமரும் சீட்டில் எனக்கு நேராக அமர்ந்தார்கள் ,அவள் கணவன் கடைசியாக அமர்ந்தான் ,அவள் எதேச்சையாக இடது புறம் திரும்பி என்னை பார்த்தாள் ,அவள் கண்களில் மெலிதான ஆச்சிரியம் பரவியது என்னால் உணர முடிந்தது ,கிட்ட தட்ட பத்து ஆண்டுகளுக்கு பின்னால் இப்பார்வை சந்திப்பு நிகழ்கிறது ,அவள் பெயர் ரம்யா
                                                


அன்று 

          அப்போது நான் 10 ம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன் ..அது ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளி 
" டேய் மாப்ளே என்னடா வண்டில வந்துருக்க " நவீன்
"அண்ணே வண்டி டா ஊருக்கு போய்ட்டான் அதன் கொஞ்சம் கெத்தா  இருக்கட்டும்னு வண்டில வந்தேன் "

"என்னடா டெய்லி லேட்டா வர்ற  அந்த மாநகராட்சி ஸ்கூல் பொண்ண விரட்டிக்கிட்டு போனியாக்கும் " விஜய்

"டேய் இவன் வேஸ்ட்ரா  இவானவுது அந்த பிள்ளையை கரெக்ட் பண்றதாவுது " நவீன்

"டேய் மாமா  அனிதா போறடா "
"ஏய் அனிதா " 

"என்ன  கண்டுக்காம போற ஓம் மேட்டர வெளியில சொல்லவா,சரி உன் டிபன் பாக்ச  குடு  "
முறைத்தாள்

"அதெல்லாம் கொடுக்க முடியாது "அனிதா
"என்னது குடுக்க முடியாதா நேத்து ஓம் பேக்ல பாத்த மேட்டர ஸ்கூல் புல்லா பரப்பி விட்ருவேன் " 
கோபமாக என்னிடம் டிபன் பாக்சை குடுத்தாள்
"இன்னிக்கும் அதே வறட்டு சப்பாத்தி தானா , சரி நீ  போ நாங்க சாப்பிட்டு கிளாஸ்ல டிபன் வந்து குடுக்கிறோம் "
"என்னடா அது பேக்ல பாத்த " நவீன்
"என்னடா விஜய் சொல்லிடுவோம "
"வேணாம்டா இவன் ஊரெல்லாம் பரப்பி விட்ருவான் "விஜய்
"சும்மா சொல்லுங்கடா "நவீன்
"டேய் அதாண்டா அந்த பொம்பளைங்க சமாச்சாரம்"விஜய்
"ஒ அதுவா "நவீன் 
"சரிஇன்னிக்கு முத பிரியட் யாரு "
"அந்த மூக்கு நோண்டி வாத்திடா  "விஜய்
"அந்தாளு பொண்டாட்டி ஓடிபோனதுக்கு நம்ம உயிரை வாங்ராண்டா "
"ஏன்டா அந்தாளு பொண்டாட்டி ஓடி போச்சு "விஜய்
"ம்ம் இந்த ஆளு  தெனமும் நைட் மூக்க மட்டுமே நோண்டிட்டு இருந்திருக்கான் அதான் ஓடிபோயடுச்சு "
கூட்டாக சிரித்தபடி வகுப்பறைக்குள் நுழைந்தோம் ,நான் நேராக சென்று அனிதாவிடம் டிபன் பாக்சை குடுத்தேன் ,மௌனமாக வாங்கிகொண்டாள்

இன்று 

"சார் டிக்கெட் "
கலைந்த நினைவுகளுடன் திரும்பினேன் ,நடத்துனர் நின்றுகொண்டிருந்தார்
" தூத்துக்குடி ஒன்னு "

அன்று 

இங்கிலீஷ் மாஸ்டர் உள்ளே வந்தார்

" வந்துட்டாண்டா மூக்கு நோண்டி "
" ஐ நீட் சைலென்ஸ் "

"பாய்ஸ் அண்ட் கால்ஸ் ,பப்ளிக் எக்ஸாம் ஸ்டார்ட்டாக போகுது ,எல்லாரும் நல்ல ப்ரிபேர் பண்றீங்களா "

கோரசாக எல்லோரும் எஸ் சார் என்றாகள் 
"உங்க எல்லோருக்கும் இன்னொரு அனௌன்ஸ் மென்ட் வந்திருக்கு "
"பக்கத்தில இருக்கிற அருள் மலர் கான்வென்ட்தான்  உங்க எல்லாத்துக்கும் சென்ட்ரா போட்ருக்கு "
"என்னடா அங்க போட்ருக்காங்க"
"டேய் அங்கதாண்டா ஓம் முன்னால் டைவா படிக்குது "விஜய்
"யாருடா "நவீன்
"டேய் எய்த் ஸ்டான்டர்ட்ல படிச்சுச்சுள்ள அதாண்டா ரம்யா "விஜய்
"ஓ அவளா அவ அங்கையா படிக்கிறா அவ அப்பயே  ஆளு கும்முன்னு இருப்பா ,அவ அங்கதான்  படிக்கிறாளா " என்றேன் 

இன்று 

பேருந்து ஒரு மோட்டலில் நின்றது , " வண்டி ஒரு பத்து நிமுசம் நிக்கும் ,காபி ,டீ,டிபன் பண்றவுங்க ,பத்துநிமுசத்துக்குல வந்துடுங்க "
நான் வேகமாக கீழிறங்கி ஒரு சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி பற்றவைத்தேன்

அன்று 

பப்ளிக் எக்ஸாம் தொடங்கியது அருள் மலர் கான்வென்ட்
"டேய் மாப்ள என்னைய அந்த கடேசில தூக்கி  போட்டாங்க  டா  நீ எங்கடா  "நவீன்
"டேய் அதுகெடக்கட்டும் டா .... எங்கடா அவளா காணோம் "
"டேய் அப்படியே மெதுவா திரும்பி பாரு படில வந்துட்டு இருக்கறா பாரு "விஜய்
நான் மெதுவாக திரும்பி பார்த்தேன் முன்னைக்கு இப்போது கொஞ்சம் பெருத்திருந்தாள்
நான் அவளிடம் நேராக சென்று
"ஹாய் "என்றேன்
அவள் என்னை யாரென்று தெரியாத மாதிரி பார்த்தாள்
"ஹேய் ரம்யா என்னை ஞாபகமில்லையா "
" ஹேய் ரகு நீயா இப்ப மீசை வச்சு பெரியாளு மாதிரி இருக்கியா அதான் அடையாளம் தெரியல ,எப்படி இருக்க ,சரி எங்க ஸ்கூல்ல  என்ன பண்ற "ரம்யா
"இங்க தான் எக்ஸாம் செண்டர் "
"ஒ அப்படியா எக்ஸாம் லாம் எப்படி பிரிப்பர் பன்னிரிக்க "ரம்யா
"அது பண்ணீருக்கேன் "
" ஏய் ரம்யா இப்ப முன்ன விட  நீ ரொம்ப அழகா இருக்க "
"ம்ம் அப்படியா நா அழகா இருக்கென இல்லியா லாம் எக்ஸாம் ல கேட்டுகிட்டு இருக்க மாட்டாங்க ஒழுங்கா எக்ஸாம் எழுதி பாஸ் பண்ற வழிய பாரு "முறைத்தபடி சென்றாள் 
"என்ன டா மாமா கிளி சிக்காது போல "நவீன்

"டேய் பொண்ணுங்க எப்பவுமே ஆரம்பத்துல்ல இப்படிதாண்டா  பிகு பண்ணுவாளுக  பாத்துக்குவோம் "

இன்று 

பேருந்து இருமியது ,என் இருக்கைக்கு முன்னேறினேன் ,அமரும் பொழுது மீண்டும் பார்வை சங்கமித்தது

அன்று 

"ரம்யா "
"என்ன "
"நா ஸ்ட்ரைட்டாவே விசயத்துக்கு வரேன் நா உன்னைய லவ் பண்றேன்

 I  LOVE  YOU "

"இந்த மாதிரில்லாம் என்கிட்டே பேசாத....... இதன் உனக்கு லாஸ்ட் வார்னிங் இனிமே இந்த மாதிரி டார்ச்சர் பண்ண எங்க ஸ்கூல்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் "ரம்யா 
இரண்டு நாள் ஆனது 
"டே  நாள களிச்சோட எக்ஸாம் முடியுது அவ என்னடா சொல்றா "விஜய் 
"இன்னைக்கு எக்ஸாம் முடியட்டும் "
எக்ஸாம் முடிந்ததது 
"டேய் சைக்கிள் எடுற அவ பின்னாடிய போவோம் "
"போயி "நவீன் 
"டேய் வாடா தம்மு வாங்கி குடுக்கிறேன் கூட வர்ற ஜெயசங்கரியை வேணும்னா நீ கரெக்ட் பண்ணுடா "
"டேய் என்னக்குனு ஒரு டேஸ்டே இல்லேன்னு நெனச்சிகிட்டியா அதெல்லாம் போய் எவனவுது பாப்பானாடா "நவீன் 
"சரி சரி வா அவளுக கெளம்பீட்டாலுக  பாரு "
பின்னாலே சென்றோம்  சென்றோம் திடிரென்று ரம்யா சைக்கிளை நிறுத்தினாள்
"எதுக்கு ஏன் பின்னாடியே வர்றீங்க " என்றாள் ரம்யா கோபமாக 
"நீதான் ஓகே சொல்ல மாட்டேன்கிறேல அதான் "
"அதுக்கு இப்படி பின்னாடியே வந்தா ஓகே சொல்லீடுவேனா "
"ஏன் என்னைய உனக்கு புடிக்கைலையா  "சில நிமிட முறைப்புக்கு பிறகு மெலிதாக ஒரு புன்னகை 
"சரி நாளைக்கு எங்க வீட்டுக்கு வா யாரும் இருக்கமாட்டாங்க "போய்விட்டாள்

"டேய் மாப்ள சிக்கீடுச்சுபோல தம்ம மட்டும் வாங்கி கொடுத்து டென்சன் ஆக்காத ஒழுங்கா பீர் வாங்கி குடு "
"சரி வா போவோம் "
அடுத்த நாள் 

சுசுகி சமுராய்யில்    ஜம்பமாக சென்றேன் அவளது வீட்டின் முன் நிறுத்தி ஹாரன் அடித்தேன் வெளியில் வந்தாள் 
கேட்டை திறந்து என்னை உள்ளே அழைத்தாள் அவள் வீட்டு  நாய் என்னை பார்த்து குரைத்தது.வீட்டில் யாரும் இல்லையா என்றேன் யாரும் இல்லை என்றாள்.
சோபாவில் அமர சொன்னாள் .அமர்ந்தேன் .
"அப்பறம் என்ன சாப்பிடுற "ரம்யா
" ம்ம் bournvita  இருக்கா"
மாடி படியில் இருந்து யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்டது .
"யாரும்மா இது "
"என் கிளாஸ் மேட ப்பா"
"உன் பேரென்னப்பா "
"ரகுநாதன்  அங்கிள்  " என் கால்கள் லேசாக நடுங்கியது
"சரி நா வரேம்மா தம்பிக்கு  ஏதாவுது சாப்பிட குடு "
வீட்டுல யாரும் இருக்க மாட்டார்கள் என்று கூறினாளே
"எங்க அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர்"   ரம்யா 
"வீட்ல யாரும் இல்லைன்னு சொன்னியே "
"ஆமா சொன்னேன் இங்க பாரு எனக்கு அம்மா கிடையாது போன வருசத்தான் இறந்தாங்க .அவுங்களோட ஆசை நா எப்படியவுது படிச்சு நல்ல பெரிய  டாக்டர் ஆகணும்க்ரதுதான் .எங்கம்மா ஆசை தான் என் ஆசையும் .உன்ன மாதிரி பொறம்போக்கு எல்லாம் என்னால லவ் பண்ண முடியாது .என்ன புரிஞ்சுச்சா"   ரம்யா 
"இல்லை ரம்யா என்ன சொல்ல வர்றேனா "
"பொறம்போக்குனு  திட்டியும் உனக்கு புத்திவர்லேல  அண்ணா"என்றாள்
கடா மாடு மாதிரி ஒருத்தர் உள்ளேருந்து வந்தார் 
"இவருதான் எங்க அண்ணா ரமேஷ் மிலிடரிலருந்து  லீவுல வந்திருக்கார் "
"அண்ணா இவன் என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கறான் "என்றாள் 

வந்தார் என் சட்டையை பிடித்து கொத்தாக தூக்கி கன்னத்தில் மாறிமாறி ஐந்து முறை அடித்தார் .எனக்கு தலை சுற்றுவது போல் இருந்தது ரம்யாவும்  அவள்  அண்ணனும் எனக்கு மங்கலாக தெரிந்தனர். என் வலது  கையை தூக்கினேன் கையோடு சேர்ந்து ஐந்து கை வந்த மாதிரி இருந்தது .ஐந்து நிமிடத்திற்கு பிறகு தெளிந்தேன் என்று நினைக்கிறேன் .என்னை வெளியில் போக சொன்னாள் .வெளியில் வந்தேன் நாய் குரைத்தது .நல்ல வேளை நாயை விட்டு கடிக்கவிடவில்லை என்று சந்தோசப்பட்டு தலையை தொங்க போட்டு கொண்டு வெளியில் வந்தேன்

இன்று 

"தூத்துக்குடி புது பஸ்டாண்ட் லாம் எறங்குங்க " என்றார் கண்டக்டர் ,எங்கே பார்வை சங்கமித்து விடுமோ என்று பதறி வேகமாக இறங்கினேன் 


டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு(நாங்களும் மீள் பதிவு போடுவோம்ல ) ,கிட்டத்தட்ட ஒரு உண்மை கதையின் நகல் ,ஆங்காங்கே பட்டி ,டிங்கரிங் வேலைகள் பார்த்திருக்கிறேன் 





21 கருத்துகள்:

தமிழ் 007 said...

டன்...டனா...டன்...

தமிழ் 007 said...

பதிவு பெரிசா தெரியுது அதனால அப்புறமா படிச்சுட்டு கமெண்ட் போடுறேன்.

சக்தி கல்வி மையம் said...

தலைவா.. எப்படி இப்படியெல்லாம்...
இன்னும் சிரிப்பு நிக்கல...


http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_624.html

அரபுத்தமிழன் said...

கதை சொன்ன விதம் ரொம்ப நல்லாருக்கு, இன்னும் கொஞ்சம்
சொல்லியிருக்கலாம்னு தோணுது.
//ஏறுவதும் ,உதிருவதுமாய்// இரண்டாவது கவிதை முதலாவது
'நிறைவதும்' போன்று கவிதையாய் இருந்தால் நன்றாக இருக்கும்.

ஆமா அடி வாங்குனது உண்மையா (வம்ப அப்பயே வெலைக்கு
வாங்குன மாதிரி இருக்கு :)

அஞ்சா சிங்கம் said...

ஹி ஹி ஹி ஹி ஹி............போட்டோல உங்க முகம் வீங்கி இருக்கும் போதே எனக்கு டவுட்டு .
இன்னக்கி அதுக்கான காரணம் தெரிஞ்சிருச்சி ...........................

Unknown said...

செம கலக்கல் பாஸ்! :-)

எஸ்.கே said...

அன்று
இன்று

சம்பவங்கள் பிரிச்சு அதேசமயம் கோர்வையா கொண்டு போனது ரொம்ப நல்லாயிருக்கு!

Unknown said...

டேய் மாப்ள உனக்கு மாடா இப்படி சரி விடு பாத்துப்போம்!

போளூர் தயாநிதி said...

ஆமா அடி வாங்குனது உண்மையா?இன்னும் சிரிப்பு நிக்கல

Anonymous said...

டும்டும்...டும்டும்...
அன்று இன்று
என்றும் நல்லாயிருக்கும்...

பாலா said...

உங்க ஆட்டோகிராபா? பழைய நினைவுகளை கிளறி விட்டுவிட்டீர்கள்.

cheena (சீனா) said...

அன்பின் மணிவண்ணன்

கதை நல்லாவே போகுது - கடந்த கால நினைவுகளூம் நிகழ் கால நிக்ழ்வுகளும் - மாறி மாறி எழுதப்பட்டிருக்கிறது. நல்ல நடை. நல்வாழ்த்துகள் = நட்புடன் சீனா

தமிழ்வாசி பிரகாஷ் said...

மணி, அன்றும், இன்றும் உங்க கதைய சொல்லிட்டிங்க... நாளைக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சு பாத்திங்களா?


எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

Sivakumar said...

//,ஆங்காங்கே பட்டி ,டிங்கரிங் வேலைகள் பார்த்திருக்கிறேன்//

கலக்குங்க மணி. வாழ்த்துகள்.

Unknown said...

சூப்பர்
பெண்டச்டிக்
சோ நிசே
ஒரு குறும்படம் பார்த்த பீலிங்க்ஸ்
அடிவாங்கினாலும் கலக்குங்க தல

அப்பரம் என்ன ஆச்சுனு சொல்வே இல்ல ?

Unknown said...

டேய் மாப்ள உனக்கு மாடா இப்படி சரி விடு பாத்துப்போம்//hahaha

ammam thala kavalapadtheenga marupadium try panunga..:)vera ponna..annan ellatha ponna love panunga..

Unknown said...

கலக்கலா இருந்தது நண்பா..

ஹா ஹா ஹா.. பேருக்கேத்த ஆளுதான் நீங்க.. :-)

Unknown said...

நண்பா நான் ஏற்கனெவே சொன்னதுதான், எப்படி பார்த்தாலும் நீங்க என் இனம்தான் :-)

Anonymous said...

பொதுவாகவே, வாலிப வயதில் இப்படித் தான்.., காதல், கத்தரிக்காய் என்று..,
இருந்தாலும் அடி வாங்குற அள‌வுக்கு..,

//ஹி ஹி ஹி ஹி ஹி............போட்டோல உங்க முகம் வீங்கி இருக்கும் போதே எனக்கு டவுட்டு .
இன்னக்கி அதுக்கான காரணம் தெரிஞ்சிருச்சி ...........................//

Why Blood?? Same Blood!!!

நடந்தது நடந்ததாக இருக்கட்டும்! இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும்!

ஆமா இந்த கதையை வீட்டுக் காரம்மா
(அதான் எங்க சகோதரி, உங்க மனைவி) படிச்சாங்களா?

arasan said...

சின்ன வயசுல வாங்காத அடியே இல்லைன்னு சொல்லுங்க தல ....

Chitra said...

இன்று

"தூத்துக்குடி புது பஸ்டாண்ட் லாம் எறங்குங்க " என்றார் கண்டக்டர் ,எங்கே பார்வை சங்கமித்து விடுமோ என்று பதறி வேகமாக இறங்கினேன்


......கிட்டத்தட்ட உண்மை கதை என்று சொல்லி இருக்கீங்க.... அந்த நேரத்தில், வந்த உணர்வுகளை அந்த ஒற்றை வரி அருமையாக சொல்கிறது.

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena