வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

6.4.11

பீடி குடித்த வரலாறு

                          இழுத்து மூடியிருந்த போர்வையை வெறுப்புடன் விலக்கி "என்ன " என்றேன் என் அம்மாவிடம் 
" சனியனே எந்திரிச்சு தொல காப்பி தண்ணி ஆறி அலமலந்து போச்சு , ஒழுங்கா குடுச்சிடு ஓயாமலாம் சூடு பண்ணி குடுக்க முடியாது "
காலை நேரக்கதிரவன் ஜன்னல் வழியாக உள்ளே வந்து என் கண்ணில் ஒளியை அடித்து "அண்ணே எந்திரிங்கன்னே" என்றான் ,அப்படியே வலது பக்கம் திரும்பி பார்த்தேன்  சிறிது தூரத்தில் மெதுவாக  ஆடிகொண்டிருந்த தூளியில் அக்கா மகன் விக்னேஷ் ஒன்னுக்கு இருந்துது தரையில் உலக வரைபடம் போல் காட்சி அளித்தது ,"ஏ அங்கயர்க்கண்ணி ,அங்கையர் ,அங்க பாரு ஓம் மவன் மூத்திரம் பேஞ்சுவச்சிருக்கான் ,போய் வேற ஜட்டி மாத்தி விட்டு தூளில தூங்க போடு " என்றாள் அம்மா ,இவனுக்கு வேற வேலக்களுதையே இல்ல ,தொட்டில போட்டோனதான் மோண்டுவைப்பான் " என்ற வாறு அடுக்களைக்குள் இருந்து வந்தாள்அக்கா தொட்டிலிக்குள் எட்டி பார்த்தாள் ,விக்னேஷ் சிரித்திருப்பான் போல "  ச்சி சிப்பானிய பாரு நாயி தூங்கிறமாதிரி நடிக்கவா செய்ற " என்று கூறிக்கொண்டே குழந்தையை தூக்கி முத்த மழை பொழிந்தாள்.  இரண்டாம் பேரு காலத்திற்கு வீட்டிற்கு வந்து இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிறது ,அவ்வப்போது மாமா வந்து பார்த்து விட்டு செல்வார் ,அக்காவிற்கு மூத்தது மகள் ,அதோ அந்த கதவின் தாப்பாளை போட்டு ஆட்டி கொண்டிருக்கிறாள் ," தனுமா தாப்பாளை ஆட்ட கூடாது " என எச்சரித்தாள் அக்கா ,அப்பனா எனக்கு பேனா வேணும் என அடம்பிடித்தாள் , " "சின்ன மாமாட்ட  போய் கேளு ,குடுப்பான் ,தாப்பாளை ஆட்ட கூடாதும செல்லம் ,வீட்டுக்கு ஆகாதுமா " என்று கூறியவாறே திரும்பினாள் என் அம்மா ,நான் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு 
" டே நீ இன்னும் எழுந்திருக்கலையா ,எந்திர்டா " 
நான் எழுந்தமர்ந்தேன் ,காப்பி தண்ணியை எடுத்து குடித்தேன் ,ஆறிப்போன சுடுதண்ணி போல் இருந்தது ,அப்பா எங்காவது தென்படுகிறாரா என்று பார்த்தேன் ,இருந்திருந்தால் ,எப்படித்தான் இந்த ஊத்தவாயோட காப்பி குடிக்கிதோ மூதி என்றிருப்பார் 

" எம்மோய் நீ சொல்றது கரக்ட்டுதான் ,காப்பி 'தண்ணி' சூப்பர் ,அதில் உள்ள நக்கலை புரிந்து கொண்டாள் போல அம்மா 

" ஏன்டா பேச மாட்ட வேள வேளைக்கி வடிச்சு கொட்ரேன்ல ,நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலையும் பேசுவ ,உனக்கு எட்டு குத்துக்கு எலையவேன் அவன் வேலைக்கு போய் சம்பாரிக்கிறான் " 
தம்பியை பார்த்தேன் ,அவன் அக்கா மகளோடு விளையாடி கொண்டிருந்தான் 
எனக்கு கோவம் தலைக்கு சுள்ளென்று ஏறியது ,அப்படியே காப்பி குடித்து முடித்த டம்ப்ளரை வீசி எறிந்தேன் ,அது டங்கு டங்கென்று ஓசை எழுப்பி ,சுவற்றில் மோதி ,பறந்து போய் ,தம்பி அயர்ன் செய்து வைத்திருந்த சட்டை மீது விழுந்து .காப்பி ஆங்காங்கே சிதறியது ,நான் கைலியை மடித்து கட்டியவாறு வெளியில் வந்தேன் .


பாய் டீ கடையில் இரண்டு பேர் டீ குடித்து கொண்டிருந்தனர் ,சோமு கட்ட பெஞ்ச்சில் அமர்ந்து தினத்தந்தியை தீவிரமாக வாசித்து கொண்டிருந்தான் ,நான் பின்புறமாக சென்று அப்படி என்னதான் வாசிக்கிறான் என்று பார்த்தேன் ,அவன் வாசிக்கவில்லை ,ரசித்துகொண்டிருந்தான் ,இளம் நடிகையின்  இடையை இன்ச் இன்ச்சாக ,முதுகில் ஓங்கி அறிந்தேன் ,திடுக்கிட்டு திரும்பியவன் 
                                            


"நீ தான சு....... "
"தம்பி காலைல பொம்பளைங்க காப்பி வாங்க வருவாங்கப்பா ,கொஞ்சம் பாத்து பேசுங்க "
"சரி விடுங்க பாய் பொம்பளைங்கள பாத்தே  பேசிடுவோம் "
பாய் தலையில் அடித்து கொண்டு "கொஞ்சம் உள்ள தள்ளியாவுது ஒக்காந்து பேசுங்கப்பா "
"என்னடா ஓம் மாப்ள டோப்பு கேசுல உள்ள போய்ட்டான் போல ,எப்படி சிக்குனான் ,இல்ல ஒழுங்கா மாமாக்காரைங்களுக்கு மாமுல் குடுக்கலையா  "
" அதலாம் ஒழுங்காத்தான் குடுத்தாய்ங்க ,ஏதோ பிரச்சன போல அதான் போட்டு பார்த்துட்டாய்ங்க "
"சரி எப்படி ஓம் மாப்ள செண்ட்ரல் ஜெயிலுக்குலாம் சப்பளை பண்ணா "
"ஏ வெளியகிளிய சொல்லிடாதடா  ,ரப்பர் பந்து இருக்குல அத கிழிச்சு உள்ள பொட்டணத்த வச்சு காம்ப்பவுண்டு பக்கத்துல போயி விட்டெருஞ்சுட்டு ஓடிடுவாய்ங்க ,இது போக ஏகப்பட்ட வழில கொண்டுபோவாய்ங்க "
"மூளக்காரண்ட ஊம் மாப்ள " 
"பாய் மூணு பில்டரு" என்று சத்தம் திரும்பினேன் ,குமார் நின்றுகொண்டிருந்தான் 
"டே பேக்கூ............எங்க கூடத்தானட கைலிய கட்டிக்கிட்டு சுத்திக்கிட்டிருந்த ,இப்ப பாரு பாண்ட்டு ,டையி ,ஷூவு , இதலாம் பாக்கணும்னு எங்க தலைஎழுத்து " என்றான் சோமு 
"டே அதுக்கெல்லாம் ஒரு நேரம் வரணும்டா "
"ஆனா உனக்கு எந்தகாலத்திலையும் நேரம் வரும்னு நெனச்சிடாத " என்றான் என்னிடம் 
" ஒரு தம்ம  வாங்கி குடுத்துட்டு ஓம் பவுச காட்டுறியா "
" என்ன மாப்ள கோவிச்சுகிட்டியா ,எங்க கம்பெனில ஒருத்தன் தெறிச்சு ஓடுறான் ,நீ அந்த எடத்துக்கு வந்துடு நா ஒன்னைய சேர்த்து விடுறேன் ,ஆனா  நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும் "
" என்ன வேல " 
"ஆங் அவுங்க மேனேஜருக்கும் ரிசப்சனிஸ்ட்டுக்கும் வெளக்கு புடிக்கனுமா " சோமு 
" டே மாப்புள அவன் கெடக்காண்ட ,என்னைய நம்புடா ,நல்ல வேலடா "
" என்னா  உதவி பண்ணனும் "
" ஒன்னும் இல்ல உங்க வீட்டு மாடில டெய்லி காலைல ஏகப்பட்ட புறா வரும்னு சொல்லுவியே ,அதுல ரெண்ட புடிச்சு எனக்கு குடு "
"ஏன் ஊம் ஆளுக்கு புறாவிடுதூது விட போறியா " சோமு 
"இல்ல அவளுக்கு நாளைக்கு பெறந்தனாலு வருது ,ஏதாவுது கிப்ட்டு பாக்சுக்குள்ள புறாவ அடைச்சு வச்சு குடுத்தோம்னா ,அவ ஓபன் பண்ணி பாத்தான்னு வையேன் ,புறா பறந்தோடும் ,சூப்பெரா இருக்கும்ல "
" ஏன்டா உங்களுக்கு இந்த மானகெட்ட பொழப்பு ,ஒங்க லவ்வுக்கு புறாவ  போயி ஏன்டா இந்த பாடுபடுத்திறீங்க ,டே சங்கரு வேணாம்ட ,இந்த வேலைய பார்த்துதான் நீ அந்த வெளக்கு புடிக்கிற வேலைக்கு போகனுமா " சோமு 
"சோமு வேணாம் சும்மாரு , இது எனக்கு அவனுக்கு உள்ள டீலிங்கு"
"போகங்கடா பொசகெட்டப்.........."
"டே அவன் போகட்டும் விடுடா ,நீ என்ன சொல்ற "
"சரி புடிச்சு தர்றேன் வேலை கண்டிப்பா கெடச்சிடும்ல  " 
"கண்டிப்பாடா மாப்புள "
"வேலைக்கு போகலைனா பெத்தவைங்கள விட சொந்தக்காரைங்க ரொம்ப கேவலபடுத்துராய்ங்கடா, அன்னைக்குலாம் ஒரு மாமேங்காரேன் என் தம்பிய வந்து மாப்புள கேக்குராய்ங்க "
வீடு வந்தது ,"சரி நீ போயி புடுச்சு வையி ,நா இப்ப வந்துடுறேன் ,அப்படியே நாம ரெண்டு பெரும் சேந்து போவோம் "
ஒரு நீண்ட கயரை எடுத்து கொண்டேன் ,அதன் முனையில் ஒரு சிறு குச்சியை கட்டினேன் ,ஒரு மூங்கில் கூடையும் தட்டு நிறைய கம்பும் எடுத்து கொண்டேன் ,வீட்டில் விநோதமாக பார்த்தார்கள் ,மாடிக்கு விரைந்தேன் ,தட்டில் இருந்த தானியங்களை ஒரு ஓரமாக கொட்டினேன் ,அப்படியே அதை கூடையை வைத்து சாய்வாக மூடி கயிற்றில் கட்டிய குச்சியால் அண்ட குடுத்தேன் .புறா வந்து தானியங்களை உண்ணும் பொழுது ,அண்ட குடுத்த குச்சியை கயிறு மூலமாக இழுத்துவிடுவேன் ,உடனே மூங்கில் கூடை வேகமாக மூடி விடும் ,புறா சிக்கி விடும் 
காத்திருந்தேன் ஒரு கருப்பு புறா வந்தது ,சரியாககூடைக்குள்  உள்ளே நுழைந்தது . சில வினாடிகளில் கயிறை இழுத்தேன் ,புறா சிக்கியது 
அடுத்து ஒரு வெள்ளை புறா ,அதே போல் சிக்கியது ,இரண்டு புறாவையும் ஒரு கூண்டுக்குள் அடைத்தேன் ,புறாக்கள் பரிதாபமாக நோக்கியது ,கவலைப்படாதீர்கள் நாளை விடுதலை கிடைத்து விடும் 
சரியாக ஒன்பது மணிக்கு குமார் வந்தான் ,நான் கிளம்பி தயாராக இருந்தேன் ,புறாவை பார்த்தான் "மாப்புள கலக்கிட்டடா ,சரி கெளம்பவா "
"டே என் ஆளு எனக்காக வெயட்டிங்க்டா ,நா ஆபீஸ் போயிட்டு உனக்கு கால் பண்றேன் வந்துடு " 
பாக்கெட்டில் பத்து ரூபாய் இருந்தது .சிகுரெட்டும் டீயும் அடிக்க வேண்டும் போல் இருந்தது ,வேண்டாம் ,ஒரு வேளை குமார் போன்செய்து எவருடைய நம்பராவது குடுத்து பேச சொன்னான் என்றால் ,ஒன் ருப்பீ காயின் போன் இருந்து பேச வேண்டும் ,அது நன்றாக இருக்காது ,பேசாமல் இந்த பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து விடுவோம் ,ரீசார்ஜ் செய்துவிட்டு காத்திருந்தேன் ,நேரம் நகன்று ஓடியது ,சரி நாமே அழைத்த் பேசுவோம் 


பூம் பூம் பூம் பூம் பூம் 


"டே என்னடா கால் பண்றேன "
"ஆங் சொன்னேன்ன்ல .வேலைக்கா ,அந்த கூ ....... யான் வேலையைவிட்டு இப்போதைக்கு நிக்க மாட்டேன்ட்டான் ,நா உனக்கு வேற வேல பாத்து சொல்றேன்........ ஆபீஸ்ல இருக்கேன் வைச்சுடவா .அப்பறம் கூப்பிடுறேன் ம்ம் "


" டே டே "
ஒரே எரிச்சலாக இருந்தது .அப்படியே பாய் கடைக்கு சென்றேன் ,இந்தாளு சிகுரெட்டு கடன் குடுக்க மாட்டானே ,என்ன செய்யலாம் ,தம் அடிக்கணும் போல இருக்கே .
"பாய் ஒரு டீ போடுங்க பாய் " என்றவனை பார்த்தேன் ,முண்டா பனியனும் ,அருணா கயறின் உதவியில் இழுத்து கட்ட பட்ட கைலியும் ,வெளியே தெரிந்த டவுசெரும் 
அந்த இத்து போன டவுசரில் இருந்து ஒரு கட்டு பீடியை எடுத்து அதில் ஒன்றை எடுத்து பற்றவைத்தான் 


"அண்ணே ஒரு பீடி குடுங்கண்ணே " என்றேன் 





20 கருத்துகள்:

Philosophy Prabhakaran said...
This comment has been removed by the author.
Philosophy Prabhakaran said...

Superb Narration... இன்னும் நிறைய பாராட்ட வேண்டும்... இரவு விரிவாக பின்னூட்டமிடுகிறேன்...

Chitra said...

வட்டார பேச்சு வழக்கில், நல்ல எழுத்து நடை.

Unknown said...

டேய் மாப்ள என்னடா இது நெசாமாடா!

cheena (சீனா) said...

அன்பின் மணிவண்ணன்

அருமையான நடை - வட்டார வழக்கு - இயலபான நடை - டோப்பு - பீடி - எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீயெ - பெரிய ஆளு தான் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

Philosophy Prabhakaran said...

நிறைய இடங்களில் உவமைகள் பிரமாதமாக இருந்தன...

அவற்றுள் சில:-
// அக்கா மகன் விக்னேஷ் ஒன்னுக்கு இருந்துது தரையில் உலக வரைபடம் போல் காட்சி அளித்தது //
// அவன் வாசிக்கவில்லை ,ரசித்துகொண்டிருந்தான் ,இளம் நடிகையின் இடையை இன்ச் இன்ச்சாக //

Philosophy Prabhakaran said...

// "ஆங் சொன்னேன்ன்ல .வேலைக்கா ,அந்த கூ ....... யான் வேலையைவிட்டு இப்போதைக்கு நிக்க மாட்டேன்ட்டான் ,நா உனக்கு வேற வேல பாத்து சொல்றேன்........ ஆபீஸ்ல இருக்கேன் வைச்சுடவா .அப்பறம் கூப்பிடுறேன் ம்ம் " //

அதிகமாக ரசித்த வரிகள் இவைதான்... நானாக இருந்திருந்தால் தக்க சமயம் வரும்போது அவனை ஒருவழி பண்ணியிருப்பேன்...

Philosophy Prabhakaran said...

// வேலைக்கு போகலைனா பெத்தவைங்கள விட சொந்தாக்காரைங்க ரொம்ப கேவலபடுத்துராய்ங்கடா //

ஒய் பிளட்...? சேம் பிளட்...

Philosophy Prabhakaran said...

// பூம் பூம் பூம் பூம் பூம் //

இது என்னன்னு தெரிஞ்சிக்கலாமா...????

Philosophy Prabhakaran said...

ஆங்காங்கே இடைவெளி விடுவது, கமா போடுவது போன்றவற்றில் சிறுசிறு தவறுகள் தென்படுகின்றன... அவற்றை திருத்தினால் கச்சிதம்...

சேலம் தேவா said...

வட்டாரநடை வழுக்கிகிட்டு வருது பாஸ் உங்க எழுத்தில..கலக்குங்க.

Unknown said...

நல்ல லோக்கல் லேங்குவேஜில, நல்ல எக்ஸ்பிரஸனோட, சூப்பரா எழுதி இருக்கீங்க, இது கதையா இல்ல அனுபவமா மணி???

Unknown said...

@philosophy prabhakaran

// பூம் பூம் பூம் பூம் பூம் //

இது என்னன்னு தெரிஞ்சிக்கலாமா...????////


இந்த வரி நண்பனுக்கு கால் செய்யும் அவனுக்கு கேட்டுக்கும் டயல் டோன்

பூம் பூம் பூம் பூம் பூம்
நான் மகான் அல்ல படத்தில் வரும் பாட்டு ,அப்போதைக்கு இந்த வரி மட்டுமே ஞாபகம் வந்தது ,

Unknown said...

@philosophy prabhakaran

///அதிகமாக ரசித்த வரிகள் இவைதான்... நானாக இருந்திருந்தால் தக்க சமயம் வரும்போது அவனை ஒருவழி பண்ணியிருப்பேன்...////

பிரபா வரிக்கு வரி வாசித்து ரசித்திருக்கிறீர்கள் ,மிக்க நன்றி


// வேலைக்கு போகலைனா பெத்தவைங்கள விட சொந்தாக்காரைங்க ரொம்ப கேவலபடுத்துராய்ங்கடா //

இந்த வரி என் நண்பனை வைத்து எழுதியது ,அவன் கூறிய சம்பவம் தான் இது . அவன் இருக்கும் போதே அவன் தம்பியை மாப்பிள்ளை கேட்டிருக்கிறார்கள் ,தம்பி நல்ல பணியில் இருக்கிறான் என்பதால் ,இவனும் பணி புரிகிறான் ஆனால் சொற்ப சம்பளம்

Unknown said...

@philosophy prabhakaran

///ஆங்காங்கே இடைவெளி விடுவது, கமா போடுவது போன்றவற்றில் சிறுசிறு தவறுகள் தென்படுகின்றன... அவற்றை திருத்தினால் கச்சிதம்...///

அந்த தவறு வேண்டுமென்றே செய்வதில்லை ,உண்மைய்லேயே எங்கே கமா வைக்க வேண்டும் ,இடைவெளி விட வேண்டும் தெரியவில்லை .மன்னிக்கவும்

Unknown said...

@Chitra


மிக்க நன்றி மேடம் ,இந்த கதைக்கு பெண்கள் யாரும் கருத்து கூறமாட்டார்கள் என நினைத்தேன் .தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Unknown said...

///@Blogger விக்கி உலகம் said...

டேய் மாப்ள என்னடா இது நெசாமாடா!///


அண்ணே முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதையே .ஒவ்வொரு பதிவுக்கும் நீங்கள் போன் செய்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது

நீங்கள் பேசிக்கொண்டிருந்த போது .நான் சிரித்தேன் .அப்போது கூட ஏம்பா சிரிக்கிற எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குப்பா என்றீர்கள் .அப்போது எனக்கு அது ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை ,ஆனால் நீங்கள் கட் செய்தவுடன் தான் எனக்கே தோன்றியது

ஆஹா இந்த பதிவு அவரை மிகவும் பாதித்திருக்கிறது என்று ,நான் தற்சமயம் பீடி கூட வழி இல்லாமல் இருக்கிறேன் என்று நினைத்து விட்டீர்களா .இல்லை இல்லை என்னால் இப்போது கிங்க்ஸ் குடிக்கும் அளவிற்கு வழி இருக்கிறது

தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி அண்ணே

Unknown said...

@cheena (சீனா)


வணக்கம் ஐயா

மதுரைக்காரனுக்கு இது கூட தெரியலைனா எப்படி ஐயா
ஒரு டீகடையில் சேர்ந்தாற்போல் பத்து நிமிடம் இருந்தாலே போதுமே .இது போன்ற தகவல்கள் தானாகவே நம் காதில் வந்து விழும் ,அப்படி கேட்டவைகள் தான் இவை

மிக்க நன்றி ஐயா

Unknown said...

/// சேலம் தேவா said...

வட்டாரநடை வழுக்கிகிட்டு வருது பாஸ் உங்க எழுத்தில..கலக்குங்க.///


தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாஸ்

Unknown said...

/// இரவு வானம் said...

நல்ல லோக்கல் லேங்குவேஜில, நல்ல எக்ஸ்பிரஸனோட, சூப்பரா எழுதி இருக்கீங்க, இது கதையா இல்ல அனுபவமா மணி???///

நினைத்தேன் என்னடா இன்னும் இதை யாரும் சொந்த அனுபவமான்னு கேக்கலையே என்று

ஒரு பீடி குடிக்கவே வழியில்லாமல் ஓசி வாங்கி குடிக்கிறான் ,ஒரு ஐந்தாறு மணிநேரத்திற்குள் நடக்கும் கதை போல் இருக்க வேண்டும் ,அதுவும் மிகவும் யதார்த்தமாக இருக்க வேண்டும் நினைத்தேன் ,அதனால்தான் ஆங்காங்கே கெட்டவார்த்தைகள் வந்திருக்கும் ,அதையும் நானே சென்சார் செய்திருப்பேன் ,மூன்று நண்பர்கள் டீ கடையில் கூடினால் இப்படித்தான் பேசுவார்கள் இன்னும் சொல்ல போனால்மிக கேவலமாகவே பேசுவார்கள்

வருகைக்கு மிக்க நன்றி நண்பா

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena