வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

26.4.11

மஞ்சுளா

பத்மா சித்தி இரவு  காலமாகி விட்டார் என்று செய்தி கிடைத்தவுடன் 'காலைல வெள்ளனமா  எல்லாரும் கழுகுமலைக்கு கெளம்பனும்  " என்று அப்பா கூறினார் ,பத்மா சித்தி அப்பாவின் ஒன்றுவிட்ட தம்பியின் மனைவி ,ஒரு பெண்குழந்தை உண்டு ,ஒன்றாவதோ ,இரண்டாவதோ படிக்கிறாள் என்று நினைக்கிறேன் .முருகன் சித்தப்பாவுக்கு தொழில் 'லேவா தேவி 'அப்பத்தாவிடம் செய்தியை கூற சொன்னார் , ஆனால் அதற்குள் அப்பத்தாவே வந்துவிட்டார் 
" என்ன " 
" அம்மா முருகன் பொண்டாட்டி எறந்து போச்சாம்  " 
" ஐயையோ ஆஸ்பித்திரிலே உயிர் போய்டிச்சாமா    ,அத்த அத்தனு காலையே சுத்தி வருவாளே இம்புட்டு சின்ன வயசுலேயே விதி வந்து போகனுமா " என்று அவரின் நினைவுகளை பற்றி கூற ஆரம்பித்தார் ,அப்போது அம்மா அருகில் வந்து ," செல்லுல அலாரம் வச்சு தூங்கு காலைல எல்லாரும் சேர்ந்து போகணும் " 
" நா எதுக்கு வரணும் ,என்னாளலாம் வர முடியாது .வேணும்னா கருமாதிக்கு வர்றேன் ,வேல கெடக்குதுல,"
" என்னங்க இவன் வரலையாம்  " 


" ஏன்டா " அப்பா 
" அய்யா நல்லதுக்கு போகலைனாலும் கெட்டதுக்கு போகனும்யா" அப்பத்தா
" ஐயையே  சரி வந்து தொலைக்கிறேன் " கழுகுமலைக்கு கோவில்பட்டி சென்று பேருந்து மாற வேண்டும் ,அப்பா,அம்மா ,நான் விடியற் காலை நாலுமணிக்கு கிளம்பினோம் ,சற்றே பணிகாற்றுடன் கூடிய ஜன்னல் பேருந்து பயணம் ,கோவில்பட்டி வந்தடைந்தோம் ,அங்கிருது கழுகுமலை பயணம் .ஊரின் எல்லையில் ஒரு மலை ,ஆனால் கழுகு போல் காட்சியளிக்கவில்லை ,
"ரொம்ப தூரம் நடக்கனுமாப்பா " 
"கொஞ்ச தூரம்தான் "
மிக பெரிய பட்டிக்காடு என்று கூற முடியாது ,இருந்தாலும் கிராமம்தான் .நேரே  நடந்து இடது புற சந்தில் திரும்பிய போது

" அண்ணே மதினி வரலையா " 
" ஆங் சரசாவா திடீர்னு கொரலு கேட்டவொடனே யாரு என்னனு தெரியல , உம் மதினியா அந்தா வர்றா பாரு நடக்க மாட்டாம "என்று அப்பா கூறியபோதுதான் 
அந்த பெண்ணை பார்த்தேன் ,அண்ணே மதினி வரலையா என்று கேட்ட பெண்மணிக்கு பின்னால் பதுங்கிருந்தாள், அவள் பார்வை மின்னல் போல் என் மேல்  வீசி செல்ல ,அதற்குள் என் அம்மா வந்து விட "என்ன மதினி இவ்வளவு மெதுவா நடந்து வர்றீங்க "
"யாரு சரசாவா ,ஆத்தாடி பாத்து எவ்வளவு நாள் ஆச்சு ,நல்லாருக்கியா ,இது யாரு ஓம் மவளா " 
" குசாலம் விசாரிக்க இதுவா நேரம் ,எளவு வீட்டுல வந்துகிட்டு ,நடங்க " என்று அப்பா கோபப்பட்டார் 
நடக்க ஆரம்பித்தோம் ,நான் கடைசியாக நடந்து வந்தேன் ,காலைநேர வெயில் சிறிது சிறிதாக ஏறி கொண்டிருந்தது " நீங்க ரெண்டு பேரும் வானரமுட்டிலருந்து   இப்பதான் வர்றீங்களா ,அண்ணே வரலையா " அம்மா

" அவரா ,அவரு சாராய கடைல முழிச்சுட்டு தான் வருவாரு  " சரசா அத்தை,

அப்படித்தானே நான் கூப்பிட வேண்டும் ,இப்படி ஒரு சொந்தம் இருக்கிறதென்றே எனக்கு இன்று தான் தெரிந்தது ,நான் நெருங்கிய சொந்தங்களின் விஷேசங்களின் தவிர்த்து அவ்வளவாக கலந்து கொண்டதில்லை ,எளவு வீட்டை சமீபித்தோம் ,பெண்கள் ஓலம் ,கிழவிகளின் ஒப்பாரி கேட்டது , கொட்டகை  வேய பட்டிருந்தது ,ஆண்கள் அதிகமாய் பெண்கள் கொஞ்சமாய் பிளாஸ்டிக் ,இரும்பு சேர்களில் அமர்ந்திருந்தனர் ,எல்லோரையும் கும்பிட்டபடி அப்பா முன்னே செல்ல ,முருகன் சித்தப்பாவின்  அம்மா வீட்டின் முகப்பின் உட்கார்ந்து வெத்தலை பாக்கை இடித்து கொண்டிருந்தார் ,மருமகள் இறந்து போன துக்கம் சிறிதும் இல்லை போல  .அம்மாவும் சரசா அத்தையும் அழும் பெண்களோடு சேர்ந்து அழ ஆரம்பித்தனர் அந்த பெண்ணும்  ,நான் சிறிது அங்கேயே நின்று கொண்டிருந்தேன் ,பின்பு வெளியில் வந்து ஒரு சேரை ஆக்கிரமித்தேன் ,சித்தப்பாவின் கையை பிடித்து கொண்டிருந்தார் அப்பா ,நான் ஒவ்வொரு முகங்களாக கவினிக்க ஆரம்பித்தேன் 
நிறைய 'பெருசுகள் ' தென்பட்டார்கள் ,இவர்களின் மனநிலை இப்போது எப்படி இருக்கும் 
" யாரு நாடிமுத்து மவனா " பொடி போட்டு கொண்டே கடம்பூர் தாத்தா என்னருகில் அமர்ந்தார் 
" ஆ ஆமா தாத்தா " 
" யாரு யாரு வந்தீங்க " 
" அப்பா ,அம்மா வந்திருக்காங்க " 
" அப்பத்தா வல்லையா  ,கெதியா இருக்கா " 
" ம்ம் அதலாம் நல்லாருக்காங்க பஸ்ல வந்து போறது சேர மாட்டீங்குது அதான் அவுங்கள கூட்டிட்டு வரல " அப்போது அப்பா வந்துவிட பொடி போட்டு கொண்டே அப்பாவிடம் பேச்சை வளர்க்க ஆரம்பித்தார் கடம்பூர் தாத்தா 
" காப்பி எடுத்துக்கோங்க " என்ற குரல் கேட்டக நிமிர்ந்தேன் ,சரசா அத்தையின் மகள் ,நன்றாக அப்போதுதான் அவளை கவனிக்க முடிந்தது ,நடு வகுடெடுத்து படிய வாரிய தலை ,சாந்து பொட்டு நெற்றியில் ,பிரவுன் கலரில் தாவணி ,அதற்க்கு மேட்ச்சாக ஜாகெட் ,மாநிறம் , இன்னும் அழுத்தமாக அவள் அழகை விமர்சிக்க வேண்டுமென்றால் 'அவள் ஒரு கிராமத்து தேவதை .கிராமத்து பைங்கிளி ,கிராமத்து சிட்டு '
" காப்பி ஆறிடும் " அவளை அப்படி கவனித்ததை உணர்ந்திருப்பாளோ,பெயர் என்னவாக இருக்கும்
பட்டுகோட்டை பெரியப்பா " நீர்மாலை எடுக்குறதுக்கு பொம்பளை ஆள் வாங்க " பிறகு கடைசியாக " நீர்மாலை எடுக்குற பொம்பளைங்களாம் கண்டிப்பா கருமாதிக்கு வந்துடனும் " என்று கூற முடிக்க எழுந்த பாதி பெண்கள் அமர்ந்து விட்டனர்.பட்டுகோட்டை பெரியப்பா அனேக சொந்தங்களின் நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டு ,அவராகவே தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு கட்டளை பிறப்பித்து கொண்டிருப்பார்.பிணத்தை எடுத்து செல்வதற்கான முஸ்த்தீபுகள் ஆரம்பமானது ,
" நீனும் வர்றியா ஊர்வலத்துக்கு  " 
" நா வல்லப்பா " 
"சரி அப்படினா வா சரசா வீட்டுக்கு போவம் ,அவ இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு வர்றாம போரீங்கலேன்னு சடைக்கிறா "அம்மா 
" சரி நீயும் அம்மாவும் போயிட்டு வர்றீங்களா " அப்பா " அங்கேயே குளுச்சுடுங்க " என்றார்
சரசா அத்தை வீட்டில் நுழைந்ததுதான் தாமதம் ,என்னை என்னமோ மறுவீட்டுக்கு அழைத்து வந்ததுபோல் கவனிக்க ஆரம்பித்தனர் ,வேக வேக தேநீர் தயாரிக்க பட்டது ,சேர் எடுத்து போடப்பட்டு தூசி தட்டப்பட்டது ,பேன் மற்றும் தமிழக அரசின் இலவச டிவிக்கு  மின்சாரம் ஊட்டப்பட்டது ,எனக்கு ஏதோ புரிவது போல் இருந்தது 
" நானும் ஒங்கமாவும் சின்ன வயசுல ஒன்னாத்தான் வளந்தோம் ,பக்கத்து பக்கத்து வீடுதான் ,கடலைகாட்டுக்கு கடலை பறிக்க போவம் ,கமலைல குளிப்போம் ,உங்கப்பாலாம்  அந்த கமலைல மேல நின்னு தண்ணிக்குள்ள பொத்துன்னு  குதிப்பாரு ,ஒங்கமா நானும் படி வழியா எறங்கி போயி போனில மோந்து  குளிப்போம் " 
" அது ஒரு காலம் என்ன மதினி " 
" அடிபபோடி இப்ப போய் அதலாம் ஞாபக படுத்திகிட்டு , ஆமா எங்க இன்னும் ரெண்டு பிள்ளைங்கள  காணோம் .
" அதுக ரெண்டும் பள்ளி கொடத்துக்கு போயிருக்குக ,இவளுக்கு எளையவ பத்து படிக்கிறா ,சின்னவன் எட்டு.
" மஞ்சுளா என்ன படிச்சிருக்கா " மஞ்சுளாவா இவளது பெயர் மங்கள கரமான பெயர் .என் பெயரை மஞ்சுளாவின் பெயருக்கு பின்னால் இணைத்து பார்த்தேன் ,நல்லாத்தான் இருக்கு 
" அவள பனன்டோட நிறுத்திட்டேன் ,போதும் போதும் அவ படிச்சு கிழிச்சது " நான் எழுந்தேன் " என்னப்பா " 
"இல்ல பாத்ரூம் போகணும் " 
" இந்தா பின்னாடி வழியா போயா " 
வெகு நேரமாக அடக்கி வைத்திருந்த காரணத்தினால் வேகமாக சென்றேன் ,அந்த நேரத்தில் அவளும் உள்ளே வர ,திருப்பத்தில் மோதிக்கொண்டோம் 
" ஸாரி" 
" இல்ல பரவாயில்ல நீங்க போங்க " ஒதுங்கி நின்றாள் .எனக்கும் பெண் பார்த்துகொண்டிருக்கிறார்கள் ,இநத பெண்ணையே பேசி முடிக்க சொல்ல வேண்டும் .நான் மீண்டும் உள்ளே நுழைந்த பொழுது 
" நல்ல சமைப்பா மதினி " என்ற குரல் கேட்டது 
" மஞ்சு மஞ்சு செத்த அந்த விசிறி கட்டையை எடுத்துட்டு வாமா,பாவி பயலுக கரனட்ட புடுங்கிவிட்டாணுக " மஞ்சு வர 
"  மாமாட்ட குடுமா ,கரண்ட்டு வர கொள்ள நேரம் ஆகும் விசிறி கோங்க தம்பி " 
" இல்ல அத்த இருக்கட்டும் நா வெளில காத்தாட நடந்துட்டு வர்றேன் " 
" நீங்க வாட்டுக்குவெளிலகிளில  சாப்பிட்டு வந்துடாதீங்க ,மதியானம் இங்கதான் சாப்பாடு ,சொல்லுங்க மதினி " 
" ஏ சாப்பாட்டுக்கு இங்க வந்துடு " நான் சரி என்று தலையாட்டினேன் 
" தம்பி வாய தெரக்கிறதுக்கு காசு கேப்பாப்புல  போல  " என்று அத்தை கூறுவது கேட்டது நான் வெளியேறிய போது
நல்ல மணக்க மணக்க சாம்பார் ,உருளைக்கிழங்கு ,கத்திரிக்க கூட்டு ,அப்பளம் ,மோர் ,ஊறுகாய் 
:" கொஞ்ச காய் எடுத்து வை மஞ்சு " 
" இல்ல போதும் போதும் அத்த " 
" அட சும்மா சாப்பிடுங்க தம்பி ,வராதவுங்க வந்திருக்கீங்க " 
நானும் அம்மாவும் கிளம்பினோம் 
" சரி வர்றேன் சரசா ,மஞ்சுளா போயிட்டு வரவா " அம்மா
" சரி போய்ட்டுவர்றேன்  அத்த " மஞ்சுளாவை பார்த்தேன் ,கண்களால் விடைபெற்றோம் 
இரவாகிவிட்டது வீட்டிற்கு  வர ,வந்தவுடன் என்னறைக்கு சென்று விட்டேன்
அன்று முதல் பதினாறாம் நாள் என்று வரும் என்று காத்து கொண்டிருந்தேன் ,மீண்டும் அவளை பார்க்கலாம் அல்லவா
அந்த நாளும் வந்தது ,அன்று மதியம் .நான் என்னறையில் இருந்தேன் 
" ஏங்க நாளைக்கு கருமாதிக்கு நீங்க மட்டும் போயிட்டு வந்துடுரீங்களா இல்ல நானும் வரணுமா " அம்மா 
ஐயையோ அப்ப நம்மள கூப்பிட மாட்டாங்களா .மஞ்சுளாவை பார்க்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தேனே 
" ஆமாமா நீயும் எதுக்கு வெட்டியா ,அதான் அன்னைக்கே குடும்பத்தோட போயிட்டு வந்துட்டோம்ல " என்னை கண்டிப்பாக அழைக்க மாட்டார்கள் என்று உறுதியாக தெரிந்தது 
" ஏங்க சரசா மக இருக்கால " 
" ஆமா இருக்கா இப்ப அவளுக்கு என்ன " 
" அவ வீட்டுக்காரர் கிட்ட  அவ மகளை நமக்கு கேட்டு பாருங்களேன் ,அவளுக்கும் அந்த எண்ணம் இருக்குங்க " 
" யாரு மஞ்சுளாவையா அது ஏற்கனவே பேசிமுடிச்சுட்டாங்கலேடி " அதிர்ந்தேன் .மஞ்சுளா மனதிற்குள் வந்து போனாள் ,இதற்க்கு பதிலாக என் மனதை கோடாரியை வைத்து பிளந்திருக்காலாம்
" என்னங்க சொல்லறீங்க ,யாருக்குங்க பேசி முடிச்சாங்க " 
" முருகனுக்கு " 
" உங்க தம்பிக்கா ,ரெண்டாதாரமா வா ,இருக்காதுங்க .நான் வேணும்னா சரசா கிட்ட கேக்குறேன் " 
"
 :"கூறுகெட்டவளே நான்தான்   சொல்றேன்ல சரசா புருசேன் ஏகப்பட்ட கடன் முருகன் கிட்ட வாங்கிருக்கானாம் ,அதான் சின்னமா  கெழவி அவன்கிட்ட போய் கேட்டிருக்கு 

உன்னால எந்தகாலத்திலையும் இநத கடன திருப்பி குடுக்க  முடியாதுடா ,நீ அதுக்கு பதிலா பேசாம ஓம்  பொண்ண குடுத்துடு சொல்லிருக்கு 

அவனும் சரின்னுட்டான் ,குடிகாரப்பய " 
நான் என்னறையில் இருந்து வெளியில் வந்தேன் 

" நீ என்கூட வர்ரீயாடா  நாளைக்கு "  அப்பா

" இல்லப்பா  நா வரல " 













20 கருத்துகள்:

Unknown said...

ஓ வாட் எ பேட் சிச்சுவேசன், ஐ அம் ரியலி சாரி மணி, மனச தேத்திக்கப்பா, பக்கத்துல டாஸ்மாக் எல்லாம் இருக்குதுல்ல :-)

Unknown said...

அது சரி நித்யாவ பாதியிலயே விட்டுட்டு அடுத்து மஞ்சுளாவ ஆரம்பிச்சா என்ன அர்த்தம்?

சக்தி கல்வி மையம் said...

கலக்கல் சிறுகதை ..

Unknown said...

மாப்ள இது உங்க வாழ்கை மீட்டளா!.. இல்ல நண்பரோடதா ஆழமா இறங்கி இருக்கு கதை அதான் கேட்டேன்!

அஞ்சா சிங்கம் said...

நானும் வந்தாச்சி மாப்பு ரொம்ப நாள் ஆளை காணுமே என்ன ஆச்சி ..............

போளூர் தயாநிதி said...

கலக்கல் சிறுகதை ..

ரஹீம் கஸ்ஸாலி said...

என்னங்க நீங்க...திடீர் திடீர்ன்னு வந்து பதிவ போட்டுட்டு கொஞ்ச நாள் காணாம போயிடுறீங்க

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிறுகதைன்னு சொன்னிங்க..
இங்க வந்து பார்த்தா இவ்வளவு பெரிய கதையா இருக்கு...

வித்தியாசமான கதைக்கரு...

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிறு கதாசிரியரே வணக்கம்... கதை அருமை

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice story...

Anonymous said...

அருமையான புனைவு

Unknown said...

ஐயோ இது புனைவா??
கவுத்துட்டாங்களே...

Unknown said...

மொக்கை ராசா..ஏன் இந்த வெறி??
போ இந்தா பிடி பத்தாவது ஓட்டு..

Unknown said...

கொல்றானே...இவன என்ன பண்ணலாம்??

cheena (சீனா) said...

அன்பின் மணிவண்ணன் - கதன்னாலே இப்படித்தான் முடியணூமா - எல்லாரும் இப்படியே எழுதறீங்க - சுபமா முடிச்சி வக்கக் கூடாதா ? அந்த நாடிமுத்து மவனுக்கு இந்த சரசா மவளக் கட்டி வச்சிருக்கலாம்ல - கதை இயல்பா நடை போடுது. வட்டார வழக்கு - நாயகன் நாயகியைப் பார்த்து உடன் மனதில் தோன்றிய வர்ணணை நல்லா இருக்கு -= நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

பாலா said...

ஹா...ஹா...ஹா...

சித்த்.....தீ....

Unknown said...

அப்புறம் நித்தியா என்னாச்சு? ஒக்கே அது பிளாஷ்பேக்தானே?
இது எப்ப நடந்துச்சு? நல்லாப் போயிட்டு இருந்துது. அப்பவே தெரியும் கடைசில பயபுள்ள ஏதாவது பண்ணுவான்னு..!
மனசை தளரவிடக்கூடாது சரியா? :-)

நல்ல இருக்கு மணி! கலக்குங்க!

Unknown said...

yen boss eppadi panrenga.

kathaila kooda serthu vaika maatengala?

so bad...:(
but way of writing nice..

சி.பி.செந்தில்குமார் said...

மணீ விட்டுத்தள்ளுங்க . அடுத்த ஃபிகரை பாருங்க ஹி ஹி

arasan said...

தலைப்புக்கு உக்காந்து யோசிப்பிங்களோ ...

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena