வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

23.9.10

இவர்களை என்ன செய்யலாம்?

"முதியோர் ஓய்வூதியம் கையாடல்"

முதியோர் 


















தமிழகத்தில் ஆதரவற்ற முதியோருக்கு 
வழங்கப்படும் ஓய்வூதியத்தை அஞ்சலக ஊழியர்கள் 
கையாடியிருக்கின்றனர் என்றெழுந்துள்ள 
புகாரை அடுத்து மத்திய புலனாய்வுத் துறையான
சிபிஐ போலீசார் சென்னையிலுள்ள சில அஞ்சலகங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.
சில ஊழியர்களிடம் தீவிர விசாரணையும்
நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆதரவற்ற முதியோருக்கு
மாதந்தோறும் 400 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
சென்னையில் மட்டும் 2.35 லட்சம் பேர்
இவ்வுதவித் தொகையினைப் பெறுகின்றனர்.
இவர்களில் பலருக்கு சரிவர அத்தொகை போய்ச் சேருவதில்லை,
தபால் ஊழியர்கள் தாங்களாகவே கையெழுத்திட்டு
அத்தொகையினை அபகரித்துக் கொள்கின்றனர்
என்று புகார்கள் எழுந்திருந்தன.
"ஓய்வூதியத் தொகையை அளிக்க
தபால்காரர்கள் லஞ்சம் பெறுகின்றனர்,
கொடுக்காவிட்டால் அலைக்கழிக்கின்றனர்,
சம்பந்தப்பட்ட நபரே இல்லை என்று
சொல்லி தொகையினைத் திருப்பி அனுப்பிவிடுகின்றனர்"
என்று இப்பிரச்சினையில் ஆர்வம் காட்டிவரும்
ஃபாக்ட் இன்டியா என்ற அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன்
  தெரிவித்தார்.
"தொகை நேரத்திற்கு வருவதில்லை,
எப்போது வரும் என்று தெரியாத நிலை"
என்று பயனாளிகள் சிலரும் தெரிவிக்கின்றனர்.
தவறுசெய்வோர் மீது கடுமையான நடவடிக்கை
எடுப்பதன் மூலமே முதியோருக்கு இழைக்கப்படும்
அநீதியைத் தடுக்கமுடியும் என்று கோபாலகிருஷ்ணன் கூறுகிறார்.
இத்தகைய சி.பி,ஐ விசாரணை
குற்றம் புரிவோரை அடையாளம்
கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க உதவும் என்று
அஞ்சல் துறைத் தலைவர் ராமானுஜம் தெரிவிக்கிறார்.

0 கருத்துகள்:

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena