வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

1.9.10

நான் மாக்கான் அல்ல

வேலூர்: ""வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி உருவாகும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

ஆல்பம்

திருப்பத்தூரில்  அவர் நிருபர்களிடம்  கூறியதாவது:தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை போராட்டத்தில் கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தும், பணி நீக்கம் செய்வதும் கண்டிக்கத்தக்கது. ஸ்ரீ பெரும்புதூர் அருகே 25 கிராமங்களை அப்புறப்படுத்தி விட்டு சென்னை, "கிரீன் பீல்டு' விமான நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.  மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு, விளை நிலங்களை பறித்துக் கொண்டு, விமான நிலையம் அமைக்க வேண்டாம் என போராட்டம் நடத்தியவன் நான்.விமான நிலையம் அமைக்க குறுக்கே சில சக்தி வருவதாக கூறுகின்றார். அவர் என்னை தான் சொல்கிறார். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டில்லி மற்றும் ஒரிஸாவில் எல்லாம்  ராகுல் பேசியுள்ளார். அப்படியானால் வளர்ச்சிக்கு எதிரானவர் என ராகுலை சொல்ல முன் வருவாரா முதல்வர்?

மேலும் விமான நிலையம் அமைக்க மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றார்களா என்ற விபரம் அறிய மக்களிடம் தமிழக அரசு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஏற்கனவே ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க 13 ஆண்டுகளுக்கு முன் முயன்றனர். தற்போது, அந்த இடங்கள் அரசியல்வாதிகளின் பினாமி பெயரிலும், வேறு மாநிலத்தவராலும் கையகப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க முடியாமல் போனது.தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் 69 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். பாலாறு பிரச்னையில் நீதி மன்றம் தற்போது கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் ஈழ நாடே அறிவிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் நான் உட்பட யாருமே அதைப் பற்றி பேச அருகதை இல்லை. இலங்கைக்கு வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் சென்று ஒன்றும் ஆகப் போவதில்லை. தமிழ் மக்கள் அங்கு நான்காம் தர குடி மக்களாக உள்ளனர். அவர்களுக்கு உரிய அரசியல், அதிகாரம் மற்ற உதவிகள் கிடைக்க உலக நாடுகள் முன் வந்தால் ஒழிய ஒன்றும் செய்ய முடியாது.வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க கோரி என் தலைமையில் அக்டோபர் மாதம் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.தமிழகத்தில் வன் முறையைத் தூண்டும் அரசியல் கட்சிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கட்டும். தமிழகத்தில் பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டுள்ளது போல இப்போது போதை புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு 39 வகையான மது வகையை அறிமுகப்படுத்தி உள்ளது. நான்கு புதிய மதுபான ஆலைகள் துவங்கவும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மக்கள் குடிப்  பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். இந்த தேர்தலில் பா.ம.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena