வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

6.12.10

சீட்டு கம்பனிகளின் சில்லரைத்தனம்

                    நம்முடைய அவசரம் பணத்தேவை  இங்கே வியாபாரம் ஆக்கபடுகிறது .சகமனிதனை கடன்காரர்களாக்குவதற்கு நிறைய படித்த பட்ட தாரிகளும் தாரர்களும் பணியமர்த்த படுகின்றனர் .இன்னும் சொல்லப்போனால் தேனினும் இனிய குரலினால் கஸ்டமர்களை கவர்வதற்கு அதிகமாக பெண்களே நியமிக்க படுகின்றனர்.
நம் நாட்டில் இப்போது அதிகமாக சீட்டு கம்பனிகளும், பைனான்ஸ் .மைக்ரோ பைனான்ஸ் கம்பனிகளும் பெருகி வருகிறது .ஏழை   , மிடில் கிளாஸ் மக்கள்  அரும்பாடு பட்டு தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் கலந்த  சொத்தையும் அவர்களுடைய பேங்க் பாலன்சையும் புடுங்குவதற்கு அரசாங்க ஆதரவுடன்  கூட்டம்கூட்டமாக கிளம்பி கொண்டிருக்கின்றனர் .
நம்முடைய அவசர பணத்தேவை நம்மை இந்த வலையில்சிக்க  வைக்கிறது .நாம் என்றைக்குதான் விழிப்புணர்வு அடைவோம்
சமீபத்தில் என் இரு நண்பர்கள் இந்த வலையில் சிக்கியுள்ளனர் .அவர்களுடைய அனுபவம்  நமக்கு ஒரு சிறு பாடமாக அமையலாம்
அந்த இரு நண்பர்களுமே நாட்டின் பிரபலாமான பைனான்ஸ் கம்பெனியில் கடன் பெற்றனர் ஒருவர் சுமார் ஐந்து வருடத்திற்கு முன்னால் இரு சக்கரம் வாகனம் வாங்குவதற்காக கடன் பெற்றார் . இரண்டரை வருடதவனையில்  கடைசி ஆறுமாத தவணையை கட்டாமல் விட்டுவிட்டார் .  ஒரிஜினல் ஆர்.சி .புக் அவர்களிடமே இருந்துள்ளது .இப்போது வண்டியை விற்க உள்ளார் அதற்கு ஒரிஜினல் ஆர்.சி.புக் தேவை
அந்த பைனான்ஸ் கம்பனியை அணுகி உள்ளார்   .நீங்கள் ஆறுமாத தவணையை வட்டியுடன் சேர்த்து கட்டிவிடுங்கள் ஒரிஜினல் ஆர்.சி .புக்கை உடனடியாக குடுத்துவிடுவோம் என்று கூறி உள்ளார்கள் .இவரும் உடனடியாக வட்டியுடன் சேர்த்து பணத்தை கட்டி  உள்ளார் .இது நடந்து சுமார்மூன்று மாதமாகிவிட்டது  ஆனால் இன்று வரை அந்த ஆர்.சி .புக்கை குடுத்த பாடில்லை கேட்டால் ஆபீஸ் ஷிப்ட் செய்ததில் தொலைந்து போயிருக்கலாம்  என்கிறார்களாம் அங்கே வேலை பார்க்கும் யுவதிகள் சர்வ சாதாரணமாக  . 
அவர்களுக்கு அங்கே உள்ள யுவன்களிடம் கடலை போடுவதற்கே நேரம் பத்தாது . அதில் எங்கே இந்த வேலையையும் சேர்த்து செய்யமுடியும் .அது என்னமோ தெரியவில்லை பொதுவாக இந்தமாதிரியான கஸ்டமர்ரிலேசன்சிப்பாக வேலைபார்க்கும்  பெண்கள் கொஞ்சம் அழகாக இருப்பதால் நாமும் பல்லிளித்துகொண்டு 'அப்படீங்கள சரிங்க "என்று வந்துவிடுவோம் .அந்த பெண்களின் அழகை  அந்த கம்பெனி முதலாளிகள் சம்பளம் கொடுத்து பயன்படுத்திகொள்கின்றனர் .இதற்கு பெயர் என்னவென்று தெரியவில்லை

இன்னொருவர் மூன்று மாதத்திருக்கு முன்தான் மடிகணினி வாங்குவதற்காக அதே நிறுவனத்தில் கடன் பெற்றார். 28000 /- மடிகணினிக்காக 17000 /- ருபாய் கடனாக வாங்கினார் .அதற்கு டாகுமென்ட் சார்ஜ் தனியாக 1500 /- ருபாய் வாங்கினார்கள் .மாததவனையாக ருபாய் 2500 /- வீதமாக எட்டு மாதம் கட்டிவிட்டார் .இதற்கு வட்டி 3000 /- ருபாய் .இப்பொழுது என்ன பிரச்சனை என்றால் என் நண்பர் குடுத்த செக் இரண்டு முறை பவுன்ஸ் ஆகயுள்ளது அதனால் அவர் 1000  ருபாய் பெனால்டி கட்டவேண்டுமாம் .அதற்க்கும்  அவர் சரி வந்து வாங்கிகொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார் .ஆனால் அவர்கள் வரவே இல்லை . இப்போது வக்கீல்  நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள் . அந்த ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து இன்னும் 2318 .00 /- கட்டவேண்டுமாம் .
ஒரு படித்த இளைங்கனுக்கே இந்த அளவுக்கு பிரச்சனை என்றால் .
ஒரு படிக்காத பாமரன் சிக்கினால் இவர்கள் எந்த அளவுக்கு வட்டியை போட்டு தாளிப்பார்கள் .இந்த மாதிரியான நிதி நிறுவனங்களின் முதலாளிகள் குடும்பம் குட்டியுடன் அல்லது குட்டிகளுடன் குலாவுவதர்க்கும்  ஏமாளி ஆகிய,இளிச்சவாயன் ஆகிய ,நாம் வட்டிக்குவட்டி யாக கட்டவேண்டும் அவர்கள் வக்கணையாக .......................(அநியாயத்திற்கு  கெட்ட வார்த்தையாக வாயில் வருவதால் நிறுத்திகொள்கிறேன் )

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றும் கூட்டம் கூட்டம் கூட்டமாகத்தான் வரும்

அந்த நிதி நிறுவனம் ஒரு சுந்தரமான நிறுவனம்

22 கருத்துகள்:

karthikkumar said...

ai vadai

Philosophy Prabhakaran said...

// முதலாளிகள் குடும்பம் குட்டியுடன் அல்லது குட்டிகளுடன் குலாவுவதர்க்கும் //
நல்ல வார்த்தை பிரயோகம்...

Philosophy Prabhakaran said...

// அந்த நிதி நிறுவனம் ஒரு சுந்தரமான நிறுவனம் //
நாசூக்கா சொல்லீட்டீங்க...

karthikkumar said...

பங்கு ஏமாற்றுகிறவர்கள் அதிகமாகிட்டாங்க . நாமதான் இன்னும் உசாரா இருக்கணும்.

pichaikaaran said...

"நல்ல வார்த்தை பிரயோகம்.."

சொல்ல வந்ததை விட்டுட்டு எதை ரசிக்கிறாருனு பாருங்க...
இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம்...

நானும் அதை ரசித்தேன்... ஹி ஹி

Unknown said...

சுந்தரமான நிறுவனம்? புரியவில்லையே? எனி அதர் குளூ????

Unknown said...

karthikkumar said...

ai vadai

பங்கு என் ப்ளாக் என்ன அவ்வளவு பிரபலமா? வடை பிரச்சனையை வருவதற்கு நீங்க எப்ப வந்தாலும் வடை கிடைக்கும்

Unknown said...

philosophy prabhakaran said...

// முதலாளிகள் குடும்பம் குட்டியுடன் அல்லது குட்டிகளுடன் குலாவுவதர்க்கும் //
நல்ல வார்த்தை பிரயோகம்...

ஹி ஹி எழுதுறப்ப அப்படியே தோனுச்சு அதான்

Unknown said...

philosophy prabhakaran said...

// அந்த நிதி நிறுவனம் ஒரு சுந்தரமான நிறுவனம் //
நாசூக்கா சொல்லீட்டீங்க...

புரிந்துகொண்டதற்கு நன்றி

Unknown said...

karthikkumar said...

பங்கு ஏமாற்றுகிறவர்கள் அதிகமாகிட்டாங்க . நாமதான் இன்னும் உசாரா இருக்கணும்.

சரிதான் பங்கு

Unknown said...

பார்வையாளன் said...

"நல்ல வார்த்தை பிரயோகம்.."

சொல்ல வந்ததை விட்டுட்டு எதை ரசிக்கிறாருனு பாருங்க...
இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம்...

நானும் அதை ரசித்தேன்... ஹி ஹி

தொடர்ந்து வருகைபுரிவதர்க்கு நன்றி

Unknown said...

இரவு வானம் said...

சுந்தரமான நிறுவனம்? புரியவில்லையே? எனி அதர் குளூ????

அட என்னங்க நீங்க quiz ப்ரோக்ராம் நடத்தி கிட்டுருக்காங்க .குளு கேக்குறீங்களே .ம்ம் பிரபாவிற்கு தெரியும் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

Ramesh said...

இந்த சீட்டுக் கம்பெனி காரங்களும் தொலைத்தொடர்புத் துறைக் காரங்களும், வங்கிகளும் பன்ற அழும்பு கொஞ்ச நஞ்சமல்ல... ஆனா எங்க போய் கேக்கறது.. நாம வேகமா பேசிட்டம்னா.. மூனு மாசத்துல வரலாம்னு நாம நினைக்கறது இன்னும் தள்ளிப் போயிட்டா என்ன பன்றதுன்னு... நம்மா காசையும் கொண்டு போய் அவனுங்க கிட்ட சிக்க விட்டுட்டு... வாய மூடிட்டு இருக்க வேண்டி இருக்கு... என்ன பன்றது...

அஞ்சா சிங்கம் said...

அந்த நிதி நிறுவனம் ஒரு சுந்தரமான நிறுவனம்.///////////////////

இங்க திருடுரவனுக்கும் ஏமாத்துரவனுக்கும் தான் காலம் .

Unknown said...

@பிரியமுடன் ரமேஷ்

ஆமாங்க வாய மூடிக்கிட்டு கெடக்கணும்

Unknown said...

மண்டையன் said...

அந்த நிதி நிறுவனம் ஒரு சுந்தரமான நிறுவனம்.///////////////////

இங்க திருடுரவனுக்கும் ஏமாத்துரவனுக்கும் தான் காலம் .


சுருக்கமா அரசியல்வாதிக்கு தான் காலம்னு சொல்லுங்க

Unknown said...

மக்களும் விழிப்புணர்வு பெற வேண்டும் . போராசை பெரு நஷ்டம் என்பதை...

Unknown said...

பாரத்... பாரதி... said...

மக்களும் விழிப்புணர்வு பெற வேண்டும் . போராசை பெரு நஷ்டம் என்பதை...

மக்களாவுது விழிப்புணர்வு அடைவதாவுது

ஹரிஸ் Harish said...

பாஸ் அது சுந்தரம் பைனான்ஸ் தான?

எப்பூடி...

THOPPITHOPPI said...

இதுப்போன்ற விழிப்புணர்வு பதிவுகள் மக்களிடம் சென்றடைய வேண்டும் ஓட்டுக்கள் குறைவா இருக்கே

Unknown said...

@ஹரிஸ்

என்ன ஹரிஸ் சீக்ரெட்டா வச்சுக்கவேணாம இப்படியா போட்டு ஒடைக்கிறது .நாளை பின்ன நா போய் கடன் கேட்ட குடுக்கமாட்டாங்கள

Unknown said...

@THOPPITHOPPI

ஆமாங்க கொஞ்சம் ஒட்டு கம்மியாத்தான் இருக்கு .சரி விடுங்க நா பிரபல பதிவர் ஆன பின் மீள் பதிவாக போட்டுவிடுகிறேன்

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena