வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

24.12.10

விடிந்த பொழுது

        முதலாம் பாகம் : இரண்டாம் ஜாமம்

.அதிகாலை நேரம் . அரசர்க்கரசர் கடுங்கோன்பாண்டியர்  அரண்மனையின் மேன்மாடத்தில் நின்று கொண்டிருந்தார் .மதுரை மாநகரத்தின் மொத்த எழிலும் அந்த மாநகரத்தின் மத்தியில் உள்ள அன்னை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களும்  அழகாக தெரிந்தன .அப்படியேஇரண்டு கைகளையும் உயரே தூக்கி
                                      

" தாயே என் நாட்டு மக்கள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்றென்றும் பாத்திரமானவனாக இருப்பதற்கு நல்ல மனத்தை  கொடு " என்ற போது

ஒரு பணியாளன் பணிந்து வருகிறான்
அரசர் என்ன என்பது போல் திரும்பி பார்க்கிறார்
"மன்னர்மன்னா தங்களை காண அமைச்சர் வரதராஜேந்திரர்  வந்திருக்கிறார் "

" வரச்சொல் "

அரசர் ஆசனத்தில் அமர்கிறார்

" வாரும் அமைச்சரே என்ன இது அதிகாலை தரிசனம் தருகிறீர்கள் " பாண்டியர்

" மன்னருக்கு என்னுடைய இனிய காலை வணக்கங்கள் ஆனாலும்  இந்த அதிகாலை வேளையில் தங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி கூற வந்துள்ள அபாக்கியசாலியானேன்"

" பீடிகை பலமாக உள்ளதே அப்படி என்ன செய்தி அமைச்சரே " என்கிறார் அரசர்

"நமது ஒற்றர் படைத்தலைவர் சமுத்திரசிங்கம் செய்தி அனுப்பி உள்ளார் "

" என்னவென்று "

" களப்பிரர்கள் படைதிரட்டி கொண்டிருக்கிறார்களாம் அவர்களுடைய குறி சோழநாடாகவும் அல்லது நாமாகவும் இருக்கலாம் என்கிறது செய்தி "

"வெறும் யூக மாகத்தானே  கூறி இருக்கிறார் "

" இல்லை மன்னா இதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது .வடக்கில் அவர்கள் பல குறுநில மன்னர்களுடன் போரிட்டுஅந்நாடுகளை எல்லாம்  தங்கள் ராஜ்யங்களுக்கு உட்பட்டதாக   மாற்றி திறை பெற்று கொண்டிருக்கிறார்கள் "

அரசர் சிந்தனையில் ஆள்கிறார்
" சரி அமைச்சரே இன்று இரவே தளபதியாரையும் அனைத்து கோட்ட தலைவர்களையும் அழைத்து மந்திர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் "

" அப்படியே ஆகட்டும் மன்னா "
               அமைச்சர் வரத ராஜேந்திரர்  எழுந்து செல்கிறார்
உப்பரிகையில் செல்லும் பொழுது எதிரே இளவரசர் மணிவண்ணன் வருகிறான் .
" அமைச்சருக்கு என்னுடைய வணக்கம் "

நிமிர்ந்து பார்க்கிறார் அப்படியே இளமையில் கடுங்கோன் பாண்டியர் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறானே இந்த இளைஞன்  என எண்ணுகிறார்
" என்ன அமைச்சர் பெருமானே  இப்பொழுதுதான் என்னை புதியதாய் பார்ப்பது போல் பார்க்கிறீரே "

" இளவரசருக்கு காலை வணக்கங்கள் "

" என்ன அமைச்சர் பெருமானே என்னை போய் மரியாதையாக விளிக்கிறீர்கள் உங்கள் மடியில் வளர்ந்த பிள்ளை அல்லவா நான் "

" அப்படி இல்லை இளவரசே நமக்கும் களப்பிரர்களுக்கும்  போர்மூளலாம் அப்பொழுது உங்களது தலைமையிலே நம் படை செல்லும்  . அது குறித்த விவாதம் இன்று இரவு மந்திர ஆலோசனை கூட்டத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன் "

"ஆஹா வெகு நாட்களாக  வாளுக்கு வேலை இல்லாமல் இருக்கிறதே என ஏக்கத்துடன் இருந்தேன் , கட்டளை இடுங்கள் அமைச்சரே இப்பொழுதே சென்று களபிரர்களின் தலைகளை கொய்து வருகிறேன் "

"  பொறுமை இளவரசே .அக் கட்டளையை நான் இடமுடியாது மன்னர் பிரான் தான் இடமுடியும் "

" நான் தந்தையிடமே கேட்டு கொள்கிறேன் . வருகிறேன் அமைச்சரே " இளவரசர்

இளவரசன்  மணிவண்ணன் மேன்மாடத்திற்க்குள் நுழைந்த பொழுது அரசர் கடுங்கோன் பாண்டியர் தன்னுடைய வாளின் கூர்மையை பரிசோதித்து கொண்டிருந்தார்

" தந்தையே வணக்கம் "

"வா மணிவண்ணா , உனக்காகத்தான் காத்திருக்கிறேன்
உனக்கொரு முக்கியமான வேலை இருக்கிறது  அதை இங்கு அமர்ந்து பேச வேண்டாம் ,வா என் அறைக்கு சென்று விடுவோம் "

" களபிரர்களை பற்றியா தந்தையே "
புன்னகைக்கிறார்
" அவர்களுக்கும் நமக்கும் போர் மூளாது சோழர்களை வென்று தான் அவர்கள் இங்கு வரமுடியும் . ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல "

அப்போது ..............


பின் குறிப்பு : இது முழுக்க கற்பனை கதையே

16 கருத்துகள்:

test said...

nice! :-)

Philosophy Prabhakaran said...

இப்படியெல்லாம் கூட நீங்கள் எழுதுவீர்களா என்று ஆச்சர்யப்பட வைத்த பதிவு... நன்று...

Unknown said...

உண்மையிலேயே நல்ல திறமைசாலிதான் நண்பா நீங்கள் தொடருங்கள் மிக நன்றாக இருக்கிறது

Unknown said...

ஜீ... said...

nice! :-)


வாங்க ஜி

Unknown said...

@philosophy prabhakaran

வாழ்த்துக்கு நன்றி பிரபா

Unknown said...

@இரவு வானம்

நன்றி நண்பா

Unknown said...

சூப்பர்.. சூப்பர்..

இளவரசர் மணிவண்ணன் வாழ்க.. :-)

அஞ்சா சிங்கம் said...

உங்கள இனிமேல் ரொம்ப கேர்புல்லா தான் வாச் பண்ணனும் ........
கலக்குறீங்க ..........................

Unknown said...

பதிவுலகில் பாபு said...

சூப்பர்.. சூப்பர்..

இளவரசர் மணிவண்ணன் வாழ்க.. :-)

வாங்க நண்பா . வாழ்த்துக்கு நன்றி

Unknown said...

மண்டையன் said...

உங்கள இனிமேல் ரொம்ப கேர்புல்லா தான் வாச் பண்ணனும் ........
கலக்குறீங்க ..........................



நல்ல வாச் பண்ணுங்க .வருகைக்கு கருத்துக்கு நன்றி மண்டையன் அவர்களே

pichaikaaran said...

உண்மையிலேயே சிறப்பான எழுத்து,,,, ஆச்சர்யப்பட வைத்து விட்டீர்கள்

தினேஷ்குமார் said...

சார் கலக்கலா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க சார்

Philosophy Prabhakaran said...

நேற்று பொற்கைப்பாண்டியன் அப்படின்னு ஏதோ போஸ்ட் போட்ட மாதிரி இருந்தது... எங்கே அது...?

ஆனந்தி.. said...

//இளவரசர் மணிவண்ணன் வருகிறான் .//
ஹ ஹ...ஓகே..ஓகே...நடக்கட்டும்...:)))

Madurai pandi said...

"வெறும் யுகமாகத்தானே கூறி இருக்கிறார் "//

யூகமாக தானே .....

Madurai pandi said...

இளவரசர் மணிவண்ணன்///

பெயர் காரணம் என்னவோ???

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena