இரண்டாம் பாகம் : விடிந்த பொழுது
முற்பகல் நேரம் . ஆயிரம் யானைகள் ஒன்று கூடி வந்து மோதினாலும் ஒன்றும் ஆகாத கோட்டை மதில் சுவற்றில் பூனை ஒன்று அமர்ந்திருந்தது .அரண்மனையில் உள்ள அரசவை கூடத்தில் அரசவை கூட போவதற்கான அறிவிப்பு அறிவிக்க பட்டது .
ஆன்றோர்களும் , சான்றோர்களும் , புலவர்களும் நிறைந்த சபையில் மாமன்னர் கடுங்கோன் பாண்டியர் நடுநாயகமாக தன்னுடைய ஆசனத்தில் கம்பீரமாக வீற்றுந்தார் .
ஒவ்வொரு கோட்ட தலைவர்களும் தாங்கள் மக்களிடமிருந்து பெற்ற நிறை குறைகளை அரசரிடம் கூறி கொண்டிருந்தனர்
அப்பொழுது வேகமாக வாயிற் காப்போன் அரசவைக்குள் வந்தான் . நேராக அரசிடம் சென்று தாழ் பணிந்து வணங்கி
" மன்னர் மன்னா வணிகர் தெருமக்கள் எல்லோரும் ஒன்று கூடி ஒருவனை கட்டி இழுத்து வந்திருக்கின்றனர் .தங்களை பார்க்க வேண்டுகின்றனர் "
" எதற்க்காக அவனை கட்டி இழுத்து வந்திருக்கின்றனர் " பிறகு
" சரி அனைவரையும் உள்ளே அனுமதி " அரசர்
அந்த தெருவில் வசிக்கும் மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு வந்திருப்பார்கள் போல .ஆண்களுக்கு நிகராக பெண்களும் சரிசமமாக இருந்தனர் .அந்த கூட்டத்தில் ஒருவன் மட்டும் கூட்டத்தினரையும் ,அரசரையும் மலங்க மலங்க விழித்து பார்த்துகொண்டிருந்தான் . அவனுடைய உடல் முழுவதும் புழுதி படிந்திருந்தது கைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து கயிற்றினால் கட்ட பட்டிருந்தன . எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அரசருக்கு வாழ்த்தொலிகளும் வணக்கங்களையும் கூறினர்.
அரசர் கையை தூக்கி வாழ்த்தொலிகளையும் அவர்களின் வணக்கங்களை ஏற்றார் . பிறகு என்ன பிரச்சனை என்று கேட்டார் .
கூட்டத்தில் இருந்து ஒருவன் முன்னே வந்தான்
கூட்டத்தில் கைகள் கட்ட பட்டிருந்தவனை சுட்டி காட்டி
" அரசே இவன் நேற்று இரவு எங்கள் தெருவில் பூட்டி இருந்த ஒரு வீட்டு திண்ணையில் படுத்திருந்தான் .நேற்று இரவு எல்லோருடைய வீட்டு கதவும் பட பட வென்று தட்ட பட்டது. அந்த செயலை செய்தது இவனாகத்தான் இருக்க வேண்டும் .கேட்டால் தான் ஒரு ஊமைஎன்பது போல் நடிக்கிறான் .அடித்தும் கேட்டு பார்த்து விட்டோம் பதிலே கூறுகிறான் இல்லை .ஒரு வேளை இவன் ஒற்றறிய வந்தவனாக இருக்கலாம் என் சந்தேகிக்கிறோம் .அதனால் தான் இவனை தங்களிடம் இழுத்து வந்தோம் .
அரசர் அவனை பார்த்தார்
" நீ யார் ? எந்த நாட்டை சேர்ந்தவன்? எதற்கு இங்கு வந்தாய் "
அதற்கு அவன்
" பே பா பே பே " என்று கூறி கட்ட பட்ட கைகளை வாய்க்கருகே கொண்டு செல்ல முடியாமல் திணறினான்
" நடிக்கிறான் அரசே நடிக்கிறான் " கூட்டதில்லிருந்து ஒருவன் கூறினான்
" இங்கு பார் உண்மையை ஒத்துகொண்டால் தண்டனைகள் குறைய வாய்பிருக்கிறது " என்றார் அரசர்
அதற்கும் அவன் " பே பே " என்றான்
" என்ன நெஞ்சழுத்தம் உனக்கு , அரசே கட்டளை இடுங்கள் நம் மக்களின் வீடுகளை தட்டி தூக்கத்தை கெடுத்த இவன் கைகையும் அதற்க்கும் மேலாக தாங்கள் கேட்டும் பதில் உரைக்காமல் இருப்பதற்கு இவனுடைய தலையையும் வெட்டு வதற்கு ஆணை இடுங்கள் மன்னா " என்று தளபதியார் வாளை உருவினார்
அதை வழி மொழிவதுபோல்
கூட்டத்தில் இருந்த அனைவரும் இவன் கைகளை வெட்ட வேண்டும் என்று ஒன்றாக கூறினர்
அரசர் " இதற்கு மேல் பொறுக்க முடியாது நீ எந்த நாட்டை சேர்ந்தவன் என்றாவது கூறு என் சினத்திற்கு ஆளாகாதே "
அரசவை மொத்தமும் அவனை பார்த்து கொண்டிருந்தது அப்பொழுதும் அவன் கைகளை கஷ்ட்ட பட்டு உயர்த்தி தான் ஒரு ஊமை என்றும்
கூட்டத்தினரை சுட்டி காட்டி இவர்கள் கூறுவதற்கும் தனக்கும் யாதொரு சம்பந்தம் இல்லை என்பது போல் கைகளால் செய்கை செய்து அனைவருக்கும் புரியவைக்க முயற்ச்சித்தான்
" அரசே இவன் நடிப்பது நன்றாக தெரிகிறது, இவன் கண்டிப்பாக ஒற்றறிய வந்தவனாக இருக்க வேண்டும் ,மாட்டி கொண்டதால் இவன் இவ்வாறு நடிக்க வேண்டும் " என்றார் தளபதி
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவன்
" ஆம் இவன் நடிக்கிறான் இந்த வேசிமகனை கொல்லுங்கள் " என்றான்
அரசர் சிறிது நேரம் அவனையே பார்த்தார் .பின்பு தளபதியிடம்
" முதலில் அவன் கையை வெட்டுங்கள் " என்றார்
வீரர்கள் அவனை கூட்டத்திலிருந்து தனியே இழுத்து வந்தனர் .வீரர்கள் அவனுடைய கட்ட பட்ட கைகளை அவ்வாறே தூக்கி பிடிக்க .தளபதியார் தன்னுடைய வாளை அவனுடைய கைகளை நோக்கி இரக்க. அப்போது இன்னொரு வாள் ஒன்று அவனுடைய கைகளுக்கு அரணாக வந்து அவ்வாளை தடுத்தது .தளபதி நிமிர்ந்து பார்க்கிறார்
அது இளவரசன் மணிவண்ணனுடைய வாள்
எதிரே இளவரசன் மணிவண்ணன் நிற்கிறான் .
"நிறுத்துங்கள் தளபதியாரே ஒரு அப்பாவி மனிதனை அதுவும் வாய் பேசமுடியாதவனை கொல்லுவது உங்களுடைய வீரத்துக்கு இழுக்கு " தொடர்கிறான்
"மக்களே உங்களில் ஒருவன் அவனுடைய தாயை பற்றி விமர்சித்த பொழுதும் அந்த மனிதனுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் அவன் நடிக்கிறான் என்றால் அப்பொழுது இயல்பாகவே அவன் வாய் பேசி இருக்கும் ஆனால் அவன் பேசவே இல்லையே இது போதாதா அவன் உண்மையிலேயே ஊமை என்று உணர்வதற்கு . "
கூட்டம் தலை குனிய
"மக்களே
இப்பொழுது தங்களுக்கு என்ன வேண்டும் உங்கள் அனைவரின் வீட்டையும் இரவினில் தட்டியவனின் கைகள் வெட்ட பட வேண்டும் அவ்வளவுதானே "
என்று கூறி வலது கைகளில் இருக்கும் வாளினால் ஓங்கி தன்னுடைய இடது கையினை தானே வெட்டி கொள்கிறான்
....... சதக் ., ரத்தம் தெறிக்க ,
மக்கள் வியக்க , தளபதி திகைக்க , அவையில் உள்ள மொத்த கூட்டமும் எழ ,
மன்னர் கடுங்கோன் பாண்டியர் இளவரசனை நோக்கி ஓடிவர
" மகனே மணிவண்ணா நாஆஆஆஆஆஅ "
இளவரசன் மணிவண்ணணை அரசர் தாங்கி பிடிக்கிறார்
" என்ன காரியம் செய்தாய் மகனே உன் தாய்க்கு என்ன பதில் கூறுவேன் "
" தந்தையே நீதி வலுவாத தங்களுடைய ஆட்சியில் நீதிக்கு பங்கமெனில் அதற்காக என் தலையை கொடுக்க கூட தயங்க மாட்டேன் , வெறும் கைதானே "
" அது மட்டும் அல்லாமல் அந்த தவறை செய்தவன் நான்தான் தந்தையே ,நீங்கள் அன்று அதிகாலை கூறுனீர்கள் அல்லவா தினமும் இரவு மாறு வேடத்தில் நகர் வலம் செல் முக்கியமாக வணிகர் தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணிக்க தவறாதே .நானும் தினமும் இரவு கண்காணித்தேன் நேற்று இரவு அந்த வீட்டில் ஒரு ஆடவனுடைய சத்தம் கேட்டது அவளுடைய கணவன் இல்லாத சமயம் பார்த்து எவனோ ஒருவன் உள்ளே புகுந்து விட்டான் போல என்று நினைத்து அவ்வீட்டின் கதவை தட்டினேன் .பிறகு அப்பெண்ணின் குரலை வைத்து வந்திருப்பது அவள் கணவன் என்றும் இப்பொழுதான் வந்தான் என்றும் தெரிந்து கொண்டேன் . இந்த சமயத்தில் நான் வேறு கதவை தட்டி இருப்பதால் அக்கணவன் அப்பெண்ணின் நடத்தையில் சந்தேகிக்கலாம் .அதனால் தான் அத்தெருவினில் உள்ள அனைத்து வீட்டின் கதவையும் தட்டி விட்டு புரவியில் ஏறி புயலென வந்துவிட்டேன் ."
நீதிக்காக உயிரை விடுபவர்கள் அல்லவா நாம். நான் செய்த செயல் தவறே இல்லைதானே தந்தையே"
" தவறு இல்லை மகனே தவறு இல்லை " என்று கண்ணீர் வடித்தார் அரசர். வைத்தியர் வர , அவையோர் களைய ,மக்கள் விடைபெற நாமும் விடைபெறுவோம்
பின்னாளில் பொன்னாலான கை ஒன்றை செய்து அதை மாட்டி கொண்டு நீதி தவறாது ஆட்சி புரிந்து ' பொற்கைப்பாண்டியன் ' என பெயர் பெற்றார்
பின்னுரை : பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 முதல் 120 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான். அவன் ஆட்சியில் இரவினில் நகர் வலம் செல்லும் பொழுது நடந்த ஒரு தவற்றுக்காக .தன் கையை தானே வெட்டி கொண்டு பொற்கை ஒன்று வைத்து கொள்கிறான் .அவ்வரலாறு என்னை கவர்ந்ததால் அது குறித்த என்னுடைய கற்பனை சிலந்தியின் வலை பின்னலே இக்கதை .பிழைகள் படிப்பவர் கண்களுக்கு நிறைய தென்பட்டிருக்கலாம் .பொறுத்தாள்க . பெயர்கள் முழுவதும் கற்பனையே .இந்த கதைக்கும் கண்ணகி சிலைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை . நீதி என்ற சொல்லுக்காக பயன் படுத்தப்பட்டுள்ளது.வெகுநாட்களாக ஒரு சரித்திர கதை எழுத வேண்டும் என்று ஆசை
|
18 கருத்துகள்:
பகிர்வுக்கு நன்றி.
வரலாற்று மனிதர்கள் ..........
நல்ல பதிவு அண்ணே .... வாழ்த்துக்கள்
கலக்குங்க நண்பா...
நண்பா.. சான்ஸே இல்லங்க.. எவ்வளவு அருமையா எழுதியிருக்கீங்க..
வரலாற்றுக் கதைன்னு எனக்கு இப்போதுதான் தெரியும்.. குறிப்பாக இந்த பாகம் மிகவும் சிறப்பாக இருந்தது..
வாழ்த்துக்கள் !
மிக அருமையாக எழுதி இருக்கின்றீர்கள்.
@விக்கி உலகம்
நன்றி
அரசன் said...
நல்ல பதிவு அண்ணே .... வாழ்த்துக்கள்
அண்ணே நான் சின்ன பையன்னே எண்ணையை போய் அண்ணேன்னு சொல்லரீங்களே .வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றினே
ரஹீம் கஸாலி said...
கலக்குங்க நண்பா...
ஓகே நண்பா .நன்றி நண்பா
@பதிவுலகில் பாபு
.பாராட்டுக்கு நன்றி நண்பா
அந்நியன் 2 said...
வாழ்த்துக்கள் !
மிக அருமையாக எழுதி இருக்கின்றீர்கள்.
வாங்க அந்நியன் 2 . வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
இது கற்பனை பதிவு என்றே கூற முடியாது நண்பா அவ்வளவு சிறப்பாக இருந்தது, உங்களுக்கும் ஒரு பொற்கை கொடுக்க வேண்டும் போல் உள்ளது வசதி இல்லை, எனவே இப்போதைக்கு ஓட்டு மட்டும் போடுகிறேன் :-)
@இரவு வானம்
பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா . இது ஒரு கற்பனை கதையே
கனவுக்கன்னி பதிவை தொடர்வதற்கு உங்களை அழைக்கிறேன்... எழுதுகிறீர்களா...
ஆம் !!! இந்த கதையை என் பள்ளி பருவத்தில் ஆசிரியர் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்!!! உன் எழுத்து நடை, சொல்ல வந்த கருத்தை மிக சிறப்பாக சொல்லி சென்றது!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
@மதுரை பாண்டி
பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா
சகோ...நான் கூட கண்ணகி கதை ரீமிக்ஸ் னு யோசிச்சேன்...எனக்கு இந்த பெயர்காரணம் தெரியாது...நல்லா அழகான மொழி நடையில் கொடுத்த உங்களுக்கு பாராட்டு..ஆனால் இளவரசன் பேரு தான் கொஞ்சம் கொடுமை...ஹ ஹ....:)) Happy New year அன்பு சகோ..:)))
@ஆனந்தி..
பாராட்டுக்கு நன்றி சகோதிரி . இளவரசனுக்கு வேறு பெயர் கிடைக்கவில்லை ஹி ஹி ஹி
Mani story mani..... :)
Post a Comment