வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

15.12.10

பாவ மன்னிப்பு (Highlights)

எனது பள்ளி காலங்களில் நான் செய்த தவறுகளே தப்புகளே இந்த பாவ மன்னிப்பு

1 . மூன்றாம் வகுப்பு படிக்கும் போது முன்னால் அமர்ந்திருந்த பெண்ணின் ஸ்லேட்டில்  I love you என்று எழுதிவைத்தது(அப்போ நீ குழந்தை யடா என்று நீங்கள் கூறுவது கேட்கிறது)

2 . அதே ஆண்டில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பனிடம் சின்ன பென்சிலை மூக்கில் ஒரு ஓட்டையில் உள்ளே வைத்து இழுத்தால் இன்னொரு ஓட்டை வழியாக வந்து விடும் என்று நம்ப வைத்து அவனை அதே போல் செய்ய வைத்தது

3 .ஐந்தாம் வகுப்பில் எப்பொழுதுமே நான் எதிரியாக நினைக்கும் (அதாங்க நல்லா படிக்கிற பயபுள்ள )மாணவன் உட்காரும் பொழுது ஆணியை வைத்தது

4 .ஆறாம் வகுப்பில் மாணவி ஒருவரை  மண்டையில் கொட்ட செய்த ஆசிரியை .அவர் சென்றவுடன் அந்த மாணவியை கேவலமான கெட்டவார்த்தையால் திட்டி அழ வைத்தது

5 . எல்லா பள்ளிகளிலும் ஒவ்வொரு கிளாசிலும் ஒரு அம்மாஞ்சி மாணவன் இருப்பான் .(மிகவும் குள்ளமாக இருப்பார் ).நான் படித்த  பள்ளியில் வியாழக்கிழமை ஒரு track-shut உடன் கூடிய ஒரு டி.ஷர்ட் அணியவேண்டும் . pant யை  இழுத்தால் உடனே அவிழ்ந்து விடும் .அந்த அம்மாஞ்சி  மாணவன் மாணவிகள் முன்னால்  நின்றிருந்த சமயம் பார்த்து பான்ட்யை அவிழ்த்து விட்டேன் (பய புள்ள  உள்ள சட்டி போடாம வந்துட்டான் ) .பின்பு அவன் தேமித்தேமி   அழுதது இன்றும் என் நினைவில் உள்ளத.இது நடந்தது எட்டாம் வகுப்பில் 

6 .பத்தாம் வகுப்பில்  botany  டீச்சர்   ரம்பா மாதிரி இருக்காங்கள    -       அந்த மிஸ்ஸுக்கு இடுப்புல மச்சமிருக்குடா என்று நண்பர்களுடன் பேசியதை  என் எதிரி நண்பன் அந்த மிஸ்ஸிடம் போட்டு கொடுத்ததன் விளைவாக . அந்த மிஸ் கடைசி வரைக்கும் என் சப்ஜெக்டில் நீ பெயில் தாண்டா  ஆவ, பாத்துகிறேண்டா  என்று  என்னிடம் சபதமிட்டதை  .நினைத்தால்

7 .பதினொன்னாம் வகுப்பில் chemistry  மிஸ் monthly  டெஸ்டில் மார்க் குறைத்து போட்டு விட்டார்  என என்  நண்பன் வருத்தபட்டான் அதெற்கென மிஸ் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க சொல்லு  மார்க் நிறைய போடுவார்கள்.அப்பறம் அந்த மிஸ்ஸுக்கு  நைட் புல்லா தூக்கமே வராது  என்று கூறிய பொழுது கிளாஸ் மொத்தமும் அமைதியாகி விட்டது .அன்று அந்த மிஸ் முறைத்த முறைப்பு இன்றும்என்னை எரிக்கிறது

8 . அதே மிஸ்ஸை இன்னொரு நண்பன்chemistry  லேப் இருக்கும் பொழுது விளையாட்டாக மிஸ் நீங்க இப்படி ஒவ்வொரு தடவையும் வெளியில் நிற்கவைத்தால் நாங்கள் என்னைக்காவது உங்க மேல ஆசிட ஊத்திடுவோம் என்றான் . அதற்கு நண்பனின் காதில் மெதுவாக தான் கூறினேன் ஏற்கனவே ஊத்தினமாதிரி தாண்டா இருக்கு என்று .அந்த வார்த்தை எப்படித்தான் கேட்டுச்சோ தெரியவில்லை .அதற்கடுத்து இரண்டொரு நாளில் அந்த மிஸ் வேலையை  ரிசைன் செய்து போய்விட்டார்

9 . அதே பதினொன்றாம் வகுப்பில் படித்த பொழுது பனிரெண்டாம் வகுப்பு படித்த பெண்ணிற்க்காக நானும் எனது எதிரி நண்பனும்  .டே அது என் ஆளுடா என்று  பள்ளிக்கு வெளியில் சண்டை போட்டோம் .  அப்பொழுது அந்த நண்பரின் சைக்கிள் tyre  யை கிழித்தது

10 . பனிரெண்டாம் வகுப்பில் வேறு ஸ்கூலில் லேப் எக்ஸாம் எழுத சென்ற போது .அந்த ஸ்கூலில் படிக்கும் பெண் ஒருவர்  எனக்கு முன்னால் அமர்ந்திருந்தார் .அவரிடம் கொஞ்சம் காட்டு எழுதிக்கொள்கிறேன் என்று தான் கூறினேன் .அந்தமாணவி  என்ன அர்த்தத்தில் புரிந்துகொண்டாரோ தெரியவில்லை .அந்த பள்ளியின் ஆசிரியை  அழைத்து என்னவோ கூறினார் .அவர் எங்கள் பள்ளி ஆசிரியரிடம் என்னவோ கூறினார் .எங்கள் பள்ளி ஆசிரியர் என்னை வெளியில் அழைத்து வந்து மண்ணை அள்ளி தூத்தி நீ நாசமா போய்டுவடா என் மானத்த வாங்கிட்டடா .என்றதை நினைத்தால்


இவ்வளவு கேவலமான ஆளா நீ என்று தானே நினைகிறீர்கள் தானே  இப்பலாம் அப்படி கிடையாதுங்க ரெம்ப திருந்திடேங்க

 ஸ்கூல் லைப் லே இவ்வளவு தப்பு பண்ணிற்கானே காலேஜ் லைப் என்னென பண்ணிருப்பான் ?

டிஸ்கி1 :அந்த " அப்பாலஜி பைல்" காலேஜ்ல  இருக்கு எடுத்துட்டு வந்து எழுதிறேங்க .என்ன ஒன்னு பாகம் பாகமா எழுதணும்

டிஸ்கி 2 : இதையெல்லாம் நம்ப மாட்டீர்கள் என்னை நேரில் பார்த்தால்

28 கருத்துகள்:

அருண் பிரசாத் said...

இவ்வளவு டெரரான ஆளா நீங்க??????

karthikkumar said...

இவ்வளவு நடந்திருக்கா சொல்லவே இல்ல. சரி சரி விடுங்க.

ரஹீம் கஸ்ஸாலி said...

இவ்வளவுதானா? இன்னுமிருக்கா?

Unknown said...

என்னோட கதையும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான் இருக்கும்

ஆனந்தி.. said...

ஹ ஹ...செம வாலு போல எங்க ஊரு சகோதரன்...:)))

வார்த்தை said...

இதெல்லாம் சகஜம்.....

ஆனந்தி.. said...

/இவ்வளவு கேவலமான ஆளா நீ என்று தானே நினைகிறீர்கள் தானே இப்பலாம் அப்படி கிடையாதுங்க ரெம்ப திருந்திடேங்க//
:)))

test said...

//இவ்வளவு கேவலமான ஆளா நீ என்று தானே நினைகிறீர்கள் தானே இப்பலாம் அப்படி கிடையாதுங்க ரெம்ப திருந்திடேங்க//
நம்பிட்டோம்! :-))

arasan said...

பள்ளியையே ஒரு கலக்கு கலக்கிருக்கிங்க ...

நல்ல பதிவு

tamil blogs said...

உங்கள் பதிவை இணைத்ததற்கு நன்றி..
தமிழ் வலைப்பூக்களுக்கு இணைப்புக்கொடுக்க விரும்பினால்..
http://tamilblogscorank.blogspot.com/

நன்றி..

Unknown said...

அருண் பிரசாத் said...

இவ்வளவு டெரரான ஆளா நீங்க??????

ஹி ஹி ஹி

Unknown said...

karthikkumar said...

இவ்வளவு நடந்திருக்கா சொல்லவே இல்ல. சரி சரி விடுங்க.

என்ன பங்காளி இத போய் ஊரெலாம் மேடை போட்டு சொல்லமுடியுமா

Unknown said...

ரஹீம் கஸாலி said...

இவ்வளவுதானா? இன்னுமிருக்கா?


இன்னும் இருக்கு நண்பா .ஆனா இப்ப திருந்திடேன்

Unknown said...

இரவு வானம் said...

என்னோட கதையும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான் இருக்கும்

அப்ப நீங்க நம்ம ஆளு .ஆனா இப்ப நா அப்படி இல்ல நண்பா

Unknown said...

ஆனந்தி.. said...

ஹ ஹ...செம வாலு போல எங்க ஊரு சகோதரன்...:))

இவ்வளவு தப்புகள் செய்த என்னை எங்க ஊரு சகோதரன் என்று கூறியதற்கு முதலில் நன்றி


/இவ்வளவு கேவலமான ஆளா நீ என்று தானே நினைகிறீர்கள் தானே இப்பலாம் அப்படி கிடையாதுங்க ரெம்ப திருந்திடேங்க//
:)))

சத்தியமாக திருந்திட்டேன் சகோதரி

Unknown said...

வார்த்தை said...

இதெல்லாம் சகஜம்..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வார்த்தை அவர்களே

Unknown said...

ஜீ... said...

//இவ்வளவு கேவலமான ஆளா நீ என்று தானே நினைகிறீர்கள் தானே இப்பலாம் அப்படி கிடையாதுங்க ரெம்ப திருந்திடேங்க//
நம்பிட்டோம்! :-))

அட சத்தியமாங்க .நம்புங்க ஜி

Unknown said...

அரசன் said...

பள்ளியையே ஒரு கலக்கு கலக்கிருக்கிங்க ...

நல்ல பதிவு

இதையும் ஒரு நல்ல பதிவு சொல்லரீங்களே .உங்க பெருந்தன்மையை தான் காட்டுகிறது

Unknown said...

ஹா ஹா ஹா.. விடுங்க நண்பா.. கம்மியான சேட்டைதான் பண்ணியிருக்கீங்க.. சும்மாவே இருந்துட்டு வந்திருந்தால் இப்படி நினைச்சுப் பார்க்க முடியுமா..

விவேக் சொன்னமாதிரி அது அறியாத வயசு.. :-)

Philosophy Prabhakaran said...

ஆரம்பத்தில் காமெடியாக இருந்தது... போகப்போக சீரியசாகி விட்டது... உதாரணத்திற்கு வேதியியல் ஆசிரியை வேலையை விட்டது...

Unknown said...

@பதிவுலகில் பாபு

விவேக் சொன்னமாதிரி அது அறியாத வயசு.. :-)

அறியாத வயசுனாலும் தப்பு தப்புதானே .இப்ப கொஞ்சம் வருத்த படுகிறேன்

Unknown said...

philosophy prabhakaran

said...

ஆரம்பத்தில் காமெடியாக இருந்தது... போகப்போக சீரியசாகி விட்டது... உதாரணத்திற்கு வேதியியல் ஆசிரியை வேலையை விட்டது...

அந்த ஆசிட் ஊத்திடுவோம் என்ற சொன்ன நண்பனை நேற்று முன்தினம்தான் சந்தித்தேன் .அப்பொழுது கூட இதை பற்றி பேசினோம் . நாம் செய்த தவறுகள் காலம் கடந்தே உரைக்கின்றன

Unknown said...

ஸ் ஸ் ஸ் யப்பா ராசா முடியல முடியல

- பெரிய அரசியல்வாதிக்குரிய அத்தன தகுதியும் உமக்கு இருக்கு

arasan said...

//இதையும் ஒரு நல்ல பதிவு சொல்லரீங்களே .உங்க பெருந்தன்மையை தான் காட்டுகிறது//

அட நம்புங்க எனக்கு உங்க பதிவு எனக்கு பிடிச்சிருக்குங்க...

Unknown said...

விக்கி உலகம் said...

ஸ் ஸ் ஸ் யப்பா ராசா முடியல முடியல

- பெரிய அரசியல்வாதிக்குரிய அத்தன தகுதியும் உமக்கு இருக்கு


ராசா ? அரசியல் ? ஆஹா .இவரு நம்மள எதுலயாவது சிக்கவச்சுடுவாரோ

Unknown said...

அட நம்புங்க எனக்கு உங்க பதிவு எனக்கு பிடிச்சிருக்குங்க...


நீங்க இவ்ளோ தூரம் சொல்றதனால நம்புறேங்க (மைன்ட் :ஒரு வேளை நம்மள போல இவரும் ஓவரா ஆடிருப்பாரோ? )

Madurai pandi said...

பயங்கரமான ஆளுயா நீ!!! சேட்டை!!!

நாங்க பண்ணுனத எடுத்து உட்டா நாடு தாங்காது... சீக்ரம் அந்த காலேஜ் லைப் கசமுசாவும் எழுந்துங்க!!! varatta???

Unknown said...

மதுரை பாண்டி said...

பயங்கரமான ஆளுயா நீ!!! சேட்டை!!!

நாங்க பண்ணுனத எடுத்து உட்டா நாடு தாங்காது... சீக்ரம் அந்த காலேஜ் லைப் கசமுசாவும் எழுந்துங்க!!! varatta???


. காலேஜ் மேட்டரா ?அடங்கப்பா அதுவேனம்பா .உண்மைலே நாடு தாங்காது

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena