வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

9.4.11

மாப்பிள்ளை -திரைவிமர்சனம்

 மாப்பிள்ளை -திரைவிமர்சனம்

"அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க "

நேற்று மாலை காட்சியாக மாப்பிள்ளை படம் பார்க்க நேர்ந்தது ,டிக்கெட் டின் விலை நூறு ரூபாய் ,நானும் எனது நண்பரும் சென்றோம் ,நாங்கள் மிக சீக்கிரமே சென்று விட்டோம் போல ,அரங்கில் கூட்டமே இல்லை ,பின்னர் சிறு துளி பெரு வெள்ளமாக கூட்டம் சேர ஆரம்பித்தது ,முதலில் விளம்பரமாக போட்டு தாளித்தார்கள் ,சிறிது நேரத்தில் தேசிய கீதம் இசைக்க பட போவதாகவும் எல்லோரும் எழுந்து நிற்க்கும்மாறு அறிவுறுத்த பட்டது ,சிலர் எழுந்திருக்கவில்லை
                                                             

 மாப்பிள்ளை என்ற எழுத்து பாறையை மடார் மடார் என்று உடைத்து கொண்டு வந்தது,படம் தொடங்கியது ,முதல் காட்சியில் விவேக்கை காட்டுகிறார்கள் ,ஒரு கால் மணி நேரம் அவரைத்தான் காட்டினார்கள் நமீதா ரசிகர் மன்ற தலைவனாக , அதன் பிறகு தனுஷ் ஆர்பாட்டம் இல்லாமல் முருக கடவுளின் அறிமுக பாடலோடு அறிமுகமாகிறார் ,ஆனால் அசட்டு தனமான பன்ச்சு டயலாக்கள் நிறைய ,  பொதுவாக தமிழ் படங்களில் அறிமுக பாடல்களில் முருக கடவுளையே அதிகமாக பயன்படுத்துகிறார்கள் ,ஏன் விநாயகரை பயன் படுத்த வேண்டியதானே , சில காட்ச்சிக்கு பிறகு நமது நாயகி ஹன்சிகா மோத்வாணி அறிமுகம் (குட்டி குஸ்புவாம்ல)
                                                          

நல்ல 'பிரெஷ் பீசான ' கொடைக்கானல் ப்ளம்ஸ் பழம் போல் இருக்கிறார் ,கொலு கொலு மற்றும் கொல கொல வென இருக்கிறார் ,இதே ரீதியில் போனால் சொத சொத வென ஆகி விடுவார் . தனுஷை விரட்டி விரட்டி காதலிக்கிறார் (கடுப்பா இருக்கு )
                                                              
அவர் விலகி செல்கிறார் ,சில பல மொக்கை காட்சிகளுக்கு பிறகு தனுஷ் இவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் இவர்களின் காதலுக்கு விவேக் மறைமுகமாக பயன்படுத்த படுகிறார் ,விவேக் இந்த படத்தில் வடிவேலை போல் நன்றாக அடிவாங்குகிறார் ,வடிவேல் பிரச்சாரத்திற்கு சென்று விட்ட காரணத்தினால் அவர் வேலையை இவர் செய்கிறார் போலும் ,

இந்த நேரத்தில் வெளிநாடுக்கு சென்று திரும்பி வருகிறார் ,'டெலபோன் மணி போல் சிரிப்பவள் இவள ' கதாநாயகிக்கு அம்மாவாம் (பாட்டி என்று கூறி இருக்கலாம் ) தயாரிப்பாளாருக்கும் மேக்அப் மேனுக்கும் பிரச்சனையை என்று நினைக்கிறேன் .மனிதர் மனிஷா கொய்ரால முகத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார் . இவர்களின்காதலை  ஏற்கிறார் ,பின்பு மறுக்கிறார் ,அப்போது பிளாஷ் பேக்  என்று ஒன்று காட்டினார்கள் ,தனுஷை பீடியுடன் ,ஐயோ கொடுமைடா சாமி 

தனுஷ் உங்க மாமனாரு கிட்ட ட்ரைனிங் எடுத்து இந்த படத்தில் நடித்திருக்கலாம் ,அந்த பழைய மாப்பிள்ளையில் உங்க மாமனாரு அப்படியே சிகுரெட்டை நாக்கில் வைத்து மடித்து ,உள்ளே செலுத்தி ,மீண்டும் வெளியை எடுத்து புகையை விடுவார் ,அட அட 

தனுஷ்க்கு பீடியை கூட புடிக்க தெரியவில்லை ,அப்படியே கும்பகோணம் புது பஸ்ஸ்டாண்டில் ஒரு குத்தாட்டம் ,கூடையுடன் ஒரு குத்தாட்ட நடிகை எசகு பிசகாக உடை அணிந்து கொண்டு வருகிறார் மற்றும் ஆடுகிறார் ,தனுஷ் ஊரில் சில பிரச்சனைகள் காரணமாக சென்னை வருகிறார் .வந்து அக்கா வீட்டில் தங்குகிறார்  

அந்த பிளாஷ் பேக்கில் தனுஷின் அப்பாவான 'பட்டி மன்ற ராஜா' நெஞ்சு வலி வருவது போல் காட்டுவார்கள் (ஆத்தாடி ) 
ஆங் அப்படியே முழு கதையை சொல்லுவேன் நெனச்சீங்களா ,போயி தியேட்டருல படத்த பாருங்க ,நானே கடுப்புல இருக்கேன் ,பழைய 'மாப்பிளையை ' பத்து தடவ போட்டாலும் ஒக்காந்து பாக்காலாங்க ,அந்த 'மூக்கு மேல வெரல வச்சுட்டா ',சீன், ஒரு காட்சியில் கூட சிரஞ்சீவி வருவார் ,வந்து ஒரு பைட்டை போட்டு விட்டு செல்வார்    இந்த புது 'மாப்பிளைய' ம்ம்ம்ம்ம்ம்ம் ,அந்த ஒரு மாப்பிள முறுக்கு இல்ல

ஒரு காட்ச்சியில் தியேட்டர் விழுந்து சிரித்தது
விவேக் தனுஷின் தங்கையிடம் இரண்டு இழுப்பு இழுக்கிறியா  என்பார்

மனோபாலாவை நித்தியானந்தா மேட்டருக்கு இல்லை நித்தியானந்தா காரெக்ட்டேருக்கு


பாதி டவ்செர் கலண்ட நிலையில் இருக்கும் ,தேர்தலுக்கு பிறகு ஒரு வேளை தி .மு.க வெற்றி பெற்றால் மீதியையும் கலட்டி விடுவார்களே என்ற பயத்தில் இருக்கும் அதாங்க ,      நம்ம சின்ன டாக்டர் ஒரு படத்தில் கூட மாமியாரின் முதுகில் சோப்பு போடுவார் ,ஆனால் தனுஷ் ஒரு படி மேலேயே போய் பின் புறமாக வந்து மாமியாரை கட்டி  அணைப்பார் ,பின்ன மனைவியுடானான சாந்தி முகூர்த்தத்தை தகர்த்தால் அப்படித்தான் செய்வார்கள்

இடைவேளைக்கு பின்  மாமியாருக்கு  மருமகன் ஆப்பு அடிக்கிறார் ,மாமியார் மருமகனுக்கு ஆப்பு அடிக்கிறார் ,நாம் ஆப்பாகி அமர்ந்திருக்கிறோம் .கிளைமேக்ஸ்சில் வில்லன் கூட காமெடி அடிக்கிறார்

"அடியாள் இல்லாத வில்லன் ஆயட்டேண்டா "
                                               
 

மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை துப்பின கருவப்பிள்ளை 

இந்த படத்துக்கு நூறு ரூவா டிக்கெட்டு ,இடைவேளைல பிங்கர் சிப்ஸ்  வித் ஜாஸ் அறுவது ரூபா ,ஒரு வெண்ணிலா கப் ஐசு  நுப்பத்தஞ்சு ரூவா ,வண்டி டோக்கனு அஞ்சு ரூவா 
மொத்தம் எரநூறு  ரூவா தண்டம்
                                                          

டிஸ்கி : நம்ம ப்ளோகில் எப்பவும் ஹீரோயின் படம் மட்டுமே அனுமதிக்க படும் ,ஹீரோ படம் அனுமதி கிடையாது ,இல்லை நாங்க ஹீரோவை பார்க்க வேண்டுமென்றால் அப்படியே மேலே சென்று  வலது புறம் பார்க்கவும்

ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும்




28 கருத்துகள்:

Unknown said...

"அடியாள் இல்லாத வில்லன் ஆயட்டேண்டா "

>>>>>>>>>>

என்னது ஆய் போயிட்டாரா ஐயோ ஐயோ உனக்கு வைர நெஞ்சம்டா மாப்ள ஹிஹி!

சக்தி கல்வி மையம் said...

கலக்கலான விமர்சனம்..

அஞ்சா சிங்கம் said...

இடைவேளைக்கு பின் மாமியாருக்கு மருமகன் ஆப்பு அடிக்கிறார் ,மாமியார் மருமகனுக்கு ஆப்பு அடிக்கிறார்..................
////////////////////////////////
ஒரு ஹாப் அடிச்சாதான் ஆப்பு அடிக்க முடியும் எங்க தலைவர் சொன்னது .................இந்த படத்துல யாரு ஹாப் அடிச்சது யாரு ஆப்பு அடிச்சது?

செங்கோவி said...

//குட்டி குஸ்புவாம்ல// ஹி..ஹி..ஆமாங்க!

செங்கோவி said...

//ஆசிரியர் நா.மணிவண்ணன்// சார், வாத்தியாரா சார் நீங்க?#டவுட்டு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

மாப்பிள்ளை படம் பாக்கலாமா மாப்ளே!

சுதா SJ said...

மொக்க படம்

cheena (சீனா) said...

அன்பின் மணி வண்ணன் - மாப்பிள்ளை பட விமர்சனம் நன்று. கதை சொல்வது போல இருந்தது. படங்கள் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் மணி வண்ணன் - மாப்பிள்ளை பட விமர்சனம் நன்று. கதை சொல்வது போல இருந்தது. படங்கள் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மாப்பிள்ளை என்ற எழுத்து பாறையை மடார் மடார் என்று உடைத்து கொண்டு வந்தது,படம் தொடங்கியது ////////

அப்பவே சுதாரிச்சிருக்க வேணாமாய்யா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////,ஆனால் அசட்டு தனமான பன்ச்சு டயலாக்கள் நிறைய , /////

வரவர தனுஷ் படத்துல கேவலமான எரிச்சலூட்டும் பஞ்ச் டயலாக் நெறைய வர ஆரம்பிச்சுடுச்சு..... சுனாமில ஸ்விம்மிங் போறது, நல்லவன், கெட்டவன்.... ங்கொய்யால திருந்துங்கடா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////முதல் காட்சியில் விவேக்கை காட்டுகிறார்கள் ,ஒரு கால் மணி நேரம் அவரைத்தான் காட்டினார்கள் நமீதா ரசிகர் மன்ற தலைவனாக ,////

சிபிக்கு பெருமையா இருந்திருக்கும்......!

Sivakumar said...

/ஹீரோவை பார்க்க வேண்டுமென்றால் அப்படியே மேலே சென்று வலது புறம் பார்க்கவும்//

மணி பேட்டி:

"நடிச்சா ஹீரோ சார். அப்பறம் சி.எம். அடுத்து டெல்லி..இது போதும் சார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தயாரிப்பாளாருக்கும் மேக்அப் மேனுக்கும் பிரச்சனையை என்று நினைக்கிறேன் .மனிதர் மனிஷா கொய்ரால முகத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார் . ////////

முதல்வன் படத்துல ஹீரோயினியா நடிக்கும்போதே இப்படித்தாங்க இருந்துச்சு....... பாவம் மேக்கப்மேன தப்பா சொல்லாதீங்க.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நல்ல 'பிரெஷ் பீசான ' கொடைக்கானல் ப்ளம்ஸ் பழம் போல் இருக்கிறார் ,கொலு கொலு மற்றும் கொல கொல வென இருக்கிறார் ,இதே ரீதியில் போனால் சொத சொத வென ஆகி விடுவார் ./////////

என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு.... அப்போ அடுத்த நமீதா ரெடின்னு சொல்லுங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆங் அப்படியே முழு கதையை சொல்லுவேன் நெனச்சீங்களா ,போயி தியேட்டருல படத்த பாருங்க ,நானே கடுப்புல இருக்கேன் //////

யோவ் அப்போ நாங்களும் படம் பாக்கனுமா? என்ன அநியாயம்யா இது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// நம்ம சின்ன டாக்டர் ஒரு படத்தில் கூட மாமியாரின் முதுகில் சோப்பு போடுவார் ,ஆனால் தனுஷ் ஒரு படி மேலேயே போய் பின் புறமாக வந்து மாமியாரை கட்டி அணைப்பார் ,//////

இவிங்க திருந்த மாட்டாய்ங்கலே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// இந்த புது 'மாப்பிளைய' ம்ம்ம்ம்ம்ம்ம் ,அந்த ஒரு மாப்பிள முறுக்கு இல்ல
//////

அது என்ன மணப்பாற முறுக்கா நீங்க கேட்ட உடன வர்ரதுக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இந்த படத்துக்கு நூறு ரூவா டிக்கெட்டு ,இடைவேளைல பிங்கர் சிப்ஸ் வித் ஜாஸ் அறுவது ரூபா ,ஒரு வெண்ணிலா கப் ஐசு நுப்பத்தஞ்சு ரூவா ,வண்டி டோக்கனு அஞ்சு ரூவா மொத்தம் எரநூறு ரூவா தண்டம்///////

கெரகம்................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இல்லை நாங்க ஹீரோவை பார்க்க வேண்டுமென்றால் அப்படியே மேலே சென்று வலது புறம் பார்க்கவும்
ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும் //////

சார் சார்... நீங்க ஆண்ட்டி ஹீரோவா......?

தேசாந்திரி-பழமை விரும்பி said...

வர வர இந்த 'பன்ச்' டயலாக் கேட்டாலே கடுப்ப வருது...
நான் இந்த படம் போகாததற்கு மோதல் காரணமே 'பன்ச்' டயலாக் தான் !
;(

ஆனந்தி.. said...

ஐயோ...அப்டியா மணி...எங்கே குருவில் ஓடுதா....இந்த வார இறுதியில் போலாம்னு இருந்தோமே..ஐயோ..பயமுருத்திட்டிங்க...:((

நேசமித்ரன் said...

ப்ரிய மணிவண்ணன்

உங்களின் சிறுகதைகள் வாசிக்க பரிந்துரைக்கப் பெற்றேன்.இயல்பான நகைச்சுவையும் ,சரளமான உரையாடல்களும் நேர்த்தியை வழங்குகிறது.மொழியில் இருக்கும் துள்ளல் கூடுதல் ப்ளஸ்.

வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள் எழுத எழுத குறைகள் மறையக் கூடும் !

-நேசமித்ரன்

Unknown said...

arumai...

ரஹீம் கஸ்ஸாலி said...

present

பாலா said...

ஹா ஹா சேம் பிளட்.

Stranger said...

//இந்த படத்துக்கு நூறு ரூவா டிக்கெட்டு ,இடைவேளைல பிங்கர் சிப்ஸ் வித் ஜாஸ் அறுவது ரூபா ,ஒரு வெண்ணிலா கப் ஐசு நுப்பத்தஞ்சு ரூவா ,வண்டி டோக்கனு அஞ்சு ரூவா
மொத்தம் எரநூறு ரூவா தண்டம்//

என்ன கொடுமை சார் இது? வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனா படம் ஞாயிற்றுக்கிழமை நெட்ல வந்துடுச்சு. அதுவும் நல்ல பிரிண்ட். நல்ல வேலை நான் தியேட்டருக்கு போய் மாட்டிக்கில...

Anonymous said...

தனுஷின் மாப்பிள்ளை பிடிக்காதவனுக்கு சுறா - பிடிச்சு இருக்கு....

சுறா பிடிக்காதவனுக்கு அசல் - பிடிச்சு இருக்கு....

மேல சொன்ன எதுவுமே பிடிக்காதவங்களுக்கும் பிடிச்சவங்களுக்கும் ரொம்ப பிடிச்ச படம் எது? என்று தேசிய அளவில் ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க...

அது நம்ம வீராசாமி தான் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிச்சு இருக்காங்க... # TR rockz... :)

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena