குடகு மலையில் இருந்து தோன்றும் வற்றாத நதியாம் வைகை நதி.அது செல்லும் இட மெல்லாம் ஆட்சி செய்பவர்கள் பாண்டியர்களே .அவர்களின் தலை நகரும் வரலாற்று தொன்மையுடைய நான்மாடக்கூடல் ஆகிய மதுரை மாநகரில் உள்ள வணிகர் தெருவில் ஒரு உருவம் நுழைகிறது ,நிமிர்ந்த நடையும் ,கையில் ஒரு கம்புடனும் ,தலையை சுற்றி முக்காடு போல் ஒரு கருப்பு துணியை அணிந்திருக்கிறது .அந்த தெரு முக்கில் நின்று அந்த தெருவை முழுவதுமாக பார்க்கிறது அவ்வுருவம் .
பின்பு அந்த தெருவின் மத்தியில் உள்ள வீட்டின் திண்ணையில் சென்று அமர்கிறது .அவ்வுருவம் நிமிர்ந்து பார்க்கையில் தான் தெரிகிறது அவ்வுருவம் வேறு யாரும் அல்ல .இப்பாண்டிய நாட்டின் சக்கிரவர்த்தி ,மன்னாதி மன்னர் ,கடுங்கோன் பாண்டியன் ஆவார்
அவ்வீட்டின் உள்ளே இருந்து சிணுங்கள் ஒலியாகவும் அல்லாத அழுகை ஒலியாகவும் அல்லாத ஒரு பெண்ணின் குரல் கேட்க்கிறது
" கண்ணே கலங்காதே நமக்கு திருமணம் ஆகி ஒரு வாரம் ஆன நிலையில் உன்னை விட்டு பிரிவதற்கு எனக்கு மட்டும் விருப்பமா என்ன "
" அத்தான் இந்த உடம்பு மட்டுமே இங்கிருக்கும் , என்னுடைய மனம் உங்கள் கூடவே வரும் "
" அப்படியென்றால் என்னுடைய மனத்தை இங்கேயே விட்டு செல்கிறேன் "
" ஐயையோ பிறகு எப்படி அங்கு போய் வியாபாரம் செய்வீர்கள் "
" அடி பெண்ணே வியாபாரம் செய்வதற்கு மனம் தேவை இல்லை மூளை தான் தேவை "
வியாபாரத்தில் ஒருவன் வயிற்றில் தான் அடிக்ககூடாது மூளையை அடிக்கலாம் "
" சரிதான் ஒரு வியாபாரியிடம் பேசி வெற்றி பெறமுடியுமா, என்ன ஒன்று தாங்கள் இல்லாத நிலையை அறிந்து கொண்டு கள்வர் கூட்டம் புகுந்து விடுமோ என்ன அஞ்சுகிறேன் "
ஒரு பலமான நகைப்பு பின் கூறுகிறான்
" நம் கடுங்கோன் சக்கரவர்த்தி ஆட்சியில் கள்வர்களா , பெண்ணே நீ வீட்டை திறந்துவிட்டு தூங்கலாம் ,உன்னை நம் அரசரின் செங்கோல் காக்கும் "
இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த அரசர் கடுங்கோன்பாண்டியர் நாட்டு மக்கள் தம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை எண்ணி பெருமிதம் கொள்கிறார் .மானசீகமாக அந்த கணவனிடம் கூறுகிறார்
ஆடவனே நீ போய் வா உன் கண்மணிக்கு சிறந்த காவல்க்காரனாக நான் இருப்பேன்
---------------------------------------------------------------------------------------------------
அரண்மனை வாயிலில் வேகமாக ஒரு குதிரை புளிதி கிளப்ப வந்து நிற்கிறது . அந்த குதிரையில் அமர்ந்திருந்த ஆடவன் ஒரு இலேச்சினை எடுத்து வாயிர்க்காப்போரிடம் தருகிறான் .
வாயிற்காப்போன் அந்த இலேச்சினை பார்த்தான் . இது மந்திரி வரதராஜேந்திரரை சந்திப்பதற்கான இலேச்சினை ஆயிற்றே என்று எண்ணுகிறான் .அந்த ஆடவனை பொருத்திருக்குமாறு கூறிவிட்டு மந்திரியாரை பார்க்கசெல்கிறான்
------------------------------------------------------------------------------------------------------
தொடரும் .......
பின்குறிப்பு : இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதையே.
|
20 கருத்துகள்:
இண்டரஸ்டிங்க்
சூப்பர் நண்பா.. ராஜா கதையா.. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. தொடர்ந்து கலக்குங்க..
எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது பதிவின் எழுத்து நடை அருமை . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்
Nice Post & Nice Story...
Nice! :-)
அட !!! நல்லா இருக்கே!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
nice one :)
நல்லாருக்கு தொடருங்கள் நண்பரே எதிர் பார்ப்புடன் காத்திருக்கேன்
பார்வையாளன் said...
இண்டரஸ்டிங்க்
நன்றிங்க
பதிவுலகில் பாபு said...
சூப்பர் நண்பா.. ராஜா கதையா.. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. தொடர்ந்து கலக்குங்க..
அப்படியா நண்பாஉங்களுக்கு ராஜா கதை ரெம்ப புடிக்குமா கலக்கிடுவோம் நன்றி நண்பா
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது பதிவின் எழுத்து நடை அருமை . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்
அண்ணே உங்களுடைய வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி
philosophy prabhakaran said...
Nice Post & Nice Story...
யோவ் இன்னும் கதையே சொல்லவே இல்ல அதுக்குளையும் nice சொல்லரீங்களே
ஜீ... said...
Nice! :-)
வாங்க ஜி கருத்துக்கு நன்றிங்க
மதுரை பாண்டி said...
அட !!! நல்லா இருக்கே!!!
நன்றிங்க பாண்டி
karthikkumar said...
nice one :)
ஓகே பங்காளி
dineshkumar said...
நல்லாருக்கு தொடருங்கள் நண்பரே எதிர் பார்ப்புடன் காத்திருக்கேன்
நண்பரே இது என்னுடைய கன்னி முயற்சி கூடுமானவரையில் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என்று நம்புகிறேன்.வருகைக்கு நன்றி
அசத்துங்க தலைவா
அரசன் said...
அசத்துங்க தலைவா
சரிங்க தலைவா
என்னங்க இப்படி ஆகிட்டீங்க சும்மா சொல்லக்கூடாது நல்லா எழுதி இருக்கீங்க :-)
அழகான செந்தமிழில் கதை ஸ்டார்ட் ஆகுது..அதுவும் நம் ஊரு தான் கதைக்களம்போல...:)) பட்டைய கிளப்புங்க சகோதரா:))
Post a Comment